கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார் Jeffersonville, Indiana USA 65-0822M 1நாம் தலை வணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, மந்தையின் மகத்தான மேய்ப்பரே, நாங்கள் உமக்கு எவ்வளவாய் கடன்பட்டுள்ளோம் எங்கள் இருதயங்களில் நீர் ஊற்றியுள்ள அன்புக்கு ஈடாக நாங்கள் ஒன்றையும் உமக்குச் செலுத்த முடியாது. நாங்கள் தலைவணங்கி உமது சந்நிதானத்தில் நிற்கும் இந்நேரத்தில், நாங்கள் அபாத்திரர் என்பதை உணருகிறோம். எங்களுடைய எல்லா தவறுதல்களினின்றும் பாவத்தினின்றும் எங்களைச் சுத்திகரிக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கின்றோம். எங்கள் சரீரங்களை இன்று நீர் பெலப்படுத்த வேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறோம். இங்கே இருக்கின்ற உறுமால்களை காணும் போது, அநேகர் வியாதிப்பட்டு அவதியுறுகின்றனர். மற்றும் எல்லாவிடங்களிலுமிருந்து தொலைபேசியின் மூலமாய் வேண்டுகோள்களும் வந்த வண்ணமிருக்கின்றன. உலக சரித்திரத்தை முடிக்கும் தருணத்தில் நாங்கள் வந்துள்ளோம் என்பதை விசுவாசிக்கின்றோம். விரைவில் காலம் என்பது நித்தியத்தில் மறைந்துவிடும். அந்த நேரத்திற்காக நாங்கள் ஆயத்தமுள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம். அந்த நோக்கத்திற்காகவே இன்று காலை நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். ஒரு கடற்கரையிலிருந்து மறுகடற்கரை வரை, இது அநேக தொலைபேசிகளின் மூலமாய் நாடெங்கும் ஒலிபரப்பப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் குரல் செல்லும் இடங்களிலெல்லாம், அங்கு குழுமியுள்ள சிறியவர்களை ஆசீர்வதியும். அவர்களுக்கு இருக்கிற வியாதியஸ்தரை சுகப்படுத்தும். அவர்களுடைய ஆத்துமாக்களை எல்லாப் பொல்லாங்கினின்றும் சுத்திகரிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். இன்று காலை இக்கூடாரத்தில் வந்திருப்பவர்களும் அந்த சிலாக்கியத்தை அனுபவிக்க உதவி புரியும். 2எழுதப்பட்டுள்ள உமது வார்த்தையின் மூலமாய் இன்று எங்களுடன் பேச வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். எங்களுக்குத் தேவையான அனைத்தையும் பரிசுத்த ஆவியானவர் தாமே வெளிப்படுத்தித் தருவாராக. இப்பொழுது நாங்கள் நாடு முழுவதிலும் கூடியுள்ளோம். நாங்கள் சிறியவரென்று உணருகிறோம். ஆயினும் நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால், மீட்கப்பட்டவர்களிடையே எங்களுக்கு ஓர் ஸ்தானம் உண்டு. ஆண்டவரே, இவைகளை எங்களுக்கு அருள்வீராக நாங்கள் ஆராதனையை முடித்துக் கொண்டு, நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள எங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்போது எம்மாவூர் சீஷரைப் போல் நாங்களும், ''வழியிலே அவர் நம்முடனே பேசின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?'' (லூக்கா 24:32) என்று கூற கிருபையருள்வீராக! இப்பொழுது ஆண்டவரே நான் கூறும் அனைத்தும் போதாததாக இருக்குமென்று நானறிவேன். நாடு முழுவதும் இதை தொலைபேசியின் மூலமாக கேட்டுக் கொண்டிருக்கும் அருமையான கிறிஸ்தவர்களுக்கு இது போதாது. நான் கூறுவது எதுவும் அவர்களுக்கு நன்மை பயக்காது. ஏனெனில் நாங்கள் எல்லோரும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் மானிடர், மரிக்க வேண்டியவர். எனவே மகத்தான பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் பேசுவாராக. அவர் தாமே வார்த்தையை எடுத்துக்கொண்டு, தம்மை வெளிப்படுத்தித் தருவாராக. இப்பொழுது நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். நீங்கள் அமரலாம். 3இது எனக்கே அதிசயமாயுள்ளது. என் மனைவியிடம் நான் கூறினேன். அவள் இப்பொழுது டூசானில் இதைக் கேட்டுக் கொண்டிருப்பாளானால், நான் இங்கு கூட்டம் எதுவும் வைக்கப் போவதில்லை என்று. நான் துணிகளும்கூட கொண்டு வரவில்லை. என் மருமகளிடம் நான் கூறினேன் - அவள்தான் என் 'கோட்'டை (Coat) இஸ்திரியிட்டுக் கொடுத்தாள் - “நான் பிரசங்க பீடத்தின் பின்னால் நின்று கொண்டிருப்பதனால், கால்சட்டை ஒரு நிறமாகவும், 'கோட் வேறொரு நிறமாகவும் இருப்பதை அவர்கள் அறியமாட்டார்கள்' என்றேன். நான் வீட்டில் உடுக்கும் துணிகள் இவை....” ஆனால் மேடாவோ என் ஷர்ட்டுகளையும் மற்றவைகளையும் இஸ்திரியிட்டுக் கொடுத்தாள். எனவே கவலைப்பட வேண்டாம். எல்லாம் நன்றாயுள்ளது. 4இப்பொழுது நம்மிடையே ஒரு வேண்டுகோள் உள்ளது. அரிசோனாவிலுள்ள பிரஸ்காட் இன்று காலை தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். சகோதரி மெர்ஸியரின் தந்தை இந்தக் கூட்டத்திற்காக காரில் வந்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாராம் சகோ. காகின்ஸ். அவ்வாறே சகோ. ஜூனியர் ஜாக்ஸனின் தந்தையாரும் ஈரல் புற்றுநோய் காரணமாக இரண சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். சகோ. ஜூனியர் ஜாக்ஸன் அடுத்துள்ள க்ளார்க்ஸ்வில் அல்லது நியூ ஆல்பனியில் தொலை பேசியில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன். நமது ஜெபங்களில் இவர்களை நினைவு கூர வேண்டுமென்று நாம் நிச்சயமாக விரும்புகிறோம். மற்றவரும் இங்குள்ளனர். ஆனால் நாம் அதிக சமயம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்களைக் குறித்து தேவனறிவார். அவர்களுக்காக இப்பொழுது ஜெபத்தை ஏறெடுப்போம். 5அன்புள்ள தேவனே, கைகளில் சுருக்கம் விழுந்துபோன அந்த அருமையான வயோதிபர், சகோ. காகின்ஸ், அவர் வெகுகால அனுபவமுள்ளவர், மாரடைப்பினால் இன்று காலை எங்கோ ஒரு மருத்துவமனையில் இருக்கிறார். அவருடைய எளிய, வயோதிப இருதயம் எத்தனையோ துன்பங்களை அனுபவித்துள்ளது. அவருக்கு உதவிசெய்ய வேண்டுமென இப்பொழுது வேண்டிக் கொள்கிறேன். அதை அருளும். எங்கள் எல்லோரையும் போல அவரும் வாழ விரும்புகிறார். பிதாவாகிய தேவனே, அதை அருள்வீராக. நாடு முழுவதிலுமுள்ள நாங்கள் அவருக்காக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். அவரை சுகமாக்கி, மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவாரும், நீர் அவ்விதம் செய்வீரென்றும், அவர் கூட்டத்திற்கு வருவாரென்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். 6இப்பொழுது சகோ. ஜாக்ஸனின் அருமை தந்தைக்காக ஜெபிக்கிறோம். அவர் மரணத்தருவாயில் அங்கு படுத்துக் கொண்டிருக்கிறார். ஜூனியராகிய அருமை மகனை அவர் உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார். அன்புள்ள தேவனே, அவரை சுகப்படுத்த வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். அது கூடாத காரியம் போல தோன்றுகிறது. மருத்துவர்களுக்கும் கூட இத்தகைய விஷயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விடுகின்றது. ஆனால் சகோ. ஹாலின் காரியம் இப்பொழுது எங்களுக்கு நினைவுக்கு வருகின்றது. லூயிவில்லிலுள்ள மிகச் சிறந்த மருத்துவர்கள், ஈரல் புற்றுநோய் காரணத்தால் அவர் இன்னும் சில மணி நேரங்கள் தான் உயிர் வாழ்வார் என்று கூறினர். அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். ஆனால் அவரோ உமது கிருபையினால் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனவே ஆண்டவரே இன்று சகோ. ஜாக்ஸனை சுகமாக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். உமது கிருபையும் இரக்கமும் அவருடன் கூட இருப்பதாக. இங்கு குவியலாக வைக்கப்பட்டுள்ள உறுமால்கள், துணிகள், அவை விண்ணப்பங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. பிதாவே, அவர்கள் எல்லோரையும் நீர் அறிவீர். அவர்கள் அனைவருக்கும் நீர் சுகத்தை அருளவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 7இன்று காலை தொடங்குவதற்காக, நான் சென்ற ஞாயிறன்று இங்கு வருவேனென்று முதற்கண் நினைக்கவேயில்லை. பின்பு அதை நாம் அறிவித்தபோது, நான் இங்கு வந்தேன். சகோ. நெவில் என்னைப் பேசவிட்டார். இன்று நான் இங்கு வருவேனென்று அறிவிக்கப்பட்டது. அது நாட்டிலுள்ள மற்ற ஜனங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இந்த தொலைபேசி இணைப்பு இப்பொழுது தான் நமக்குக் கிடைத்தது. அது மிக, மிக நல்லது. ஜனங்கள் தங்கள் வீடுகளிலேயே அமர்ந்து கொண்டு, அல்லது சபைகளில் கூட்டமாக ஒன்றுகூடி, இந்த ஆராதனையைக் கேட்கலாம். அதை நான் பாராட்டுகிறேன். 8சென்ற ஞாயிறன்று நான் அளித்த செய்தியின் விளைவாக அநேக கடிதங்கள் இங்கு வந்து குவிந்துள்ளன. அந்த செய்திக்கு என்ன தலைப்பு கொடுத்தேன் என்று எனக்கு மறந்துவிட்டது. உங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைக் குறித்து நான் எதையோ கூறினேன். நான் எதைக் கூறினாலும், அது அநேகரால் தவறாகப் புரிந்துக் கொள்ளப்படுகின்றது. அவர்கள் தவறாக அதைப் புரிந்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதனால் அல்ல; எதேச்சையாக அதைத் தவறாகப் புரிந்துக் கொள்கின்றனர். ஒருவர், ''அப்படியானால் நான் கார் வாங்கலாமா?'' என்றும் வேறொருவர், “நான் என்ன செய்யவேண்டும்?'' என்றும் கேட்கின்றனர். ''ஒருவருக்கும் கடன்படாதீர்கள்'' (ரோமர் 13:8) என்று இயேசு அல்லது வேதம் கூறுவது அதைக் குறித்தல்ல. நீங்கள் நீண்ட காலமாக கடனை வைத்துள்ளதையே (lingering debts) அது குறிக்கின்றது. அதை நீங்கள் செலுத்திவிடுங்கள், நாம் வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம் போன்றவைகளை கடன்பட்டு, அவைகளைச் செலுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆனால் நீங்கள் நீண்ட காலமாக வைத்துள்ள கடன்களை, உங்களால் கூடுமானால், செலுத்தி தீர்த்துவிடுங்கள். அது இன்னும் உங்கள் பேரிலே இருக்க விட்டு வைக்க வேண்டாம். 9நான் சிறுவனாயிருந்த போது, ஒரு சமயம் வியாதிப்பட்டது என் நினைவுக்கு வருகின்றது. நான் இரண்டாயிரம் டாலர்கள் கடன்பட்டு, மருத்துவமனையிலிருந்து வெளி வந்தேன். திரு. ஸ்வானிகர் என்பவர் வைத்திருந்த மருந்து விற்பனை ஸ்தலம் ஒன்று இங்கு முன்பிருந்தது. அவரிடம் மருந்து வாங்கினதால், நான் முன்னூறு அல்லது நானூறு டாலர்கள் கடன்பட்டேன். அவருக்கு என்னைத் தெரியாது. அந்த மனிதன்... நான் அவரிடம் சென்றேன். எனக்கு அவரைத் தெரியாது. ஆயினும் அவர் மருந்தை அங்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அதை அனுப்ப அவர் மறுக்கவேயில்லை. நான் அவரிடம், “உங்களுக்கு நான் கடன் தர வேண்டும்'' என்றேன். நான் கூறினேன். அது ஸ்வானிகர் அல்ல, கோர்ட் அவின்யூ அண்டு ஸ்பிரிங் என்னுமிடத்தில் திரு. மேசன் என்பவர். நான் அவரிடம், ”உங்களுக்கு நான் கடன் தரவேண்டும். நான் இன்னும் மிகவும் பலவீனமாயுள்ளேன். எனினும் நான் வேலைக்குச் செல்ல முயன்று வருகிறேன். என்னால் செலுத்த முடியாவிட்டால்...'', நான் அப்பொழுதுதான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட சமயம். நான் அவரிடம், ''திரு. மேசன் அவர்களே, முதலாவதாக தேவனிடம் எனக்கு ஒரு கடமையுண்டு. அவருக்கு தசமபாகம் செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன். முதலாவதாக நான் அவருக்கு என் தசமபாகத்தைச் செலுத்த வேண்டும்“ என்றேன். மேலும் நான், ”என்னுடைய அடுத்த கடமை, என்னுடைய கடன்களை செலுத்துவது, என் தந்தையும் வியாதியுள்ளவர்... எங்களுடைய குடும்பத்தில் நாங்கள் ஆக மொத்தம் பத்து பிள்ளைகள். என்னுடைய சம்பள நாளன்று நான் உங்களுக்கு இருபத்தைந்து செண்டுகள் கூட செலுத்த முடியாவிட்டால், “உங்களிடம் வந்து 'என்னால் செலுத்த இயலவில்லை' என்று கூறிவிடுவேன்” என்றேன். ஆனால் தேவனுடைய உதவியால் நான் எல்லா கடன்களையும் அவருக்கு செலுத்தி தீர்த்துவிட்டேன். பாருங்கள்? அதைத்தான் நான் குறிப்பிடுகின்றேன். பாருங்கள்? செய்ய வேண்டாம்... அன்றொருவர் கூறினார். 10ஓ, இச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் ஒருமுறை தன் காரைப் பழுது பார்த்தாராம். அவர் பழுது பார்த்த அந்த நபரிடம், “எனக்குச் சனிக்கிழமை ஊதியம் கிடைக்கும். உமக்கு சேர வேண்டியதை அன்று செலுத்திவிடுகிறேன்'' என்று கூறிவிட்டு வந்துவிட்டாராம். ஆனால் அவரோ அதைத் தரவேயில்லை. வாரங்களுக்குப் பின் வாரங்கள் அநேகம் கடந்த போதிலும், பழுது பார்த்தவருக்கு சேர வேண்டிய தொகையை அவர் செலுத்தவேயில்லை; அதைக் குறித்து ஒரு வார்த்தையும் அவரிடம் கூறவுமில்லை. அந்த மனிதன் என்னிடம் புகார் செய்தார். பாருங்கள், அது சபைக்கு இழுக்கு உண்டாக்குகின்றது. அது கிறிஸ்துவுக்கும், இழுக்கு உண்டாக்குகின்றது. ”கொடுத்து விடுவேன், நான் ஒரு கிறிஸ்தவன், என்னால் உடனடியாக கொடுக்க இயலவில்லை... நான் உங்களுக்கு பாக்கி இருக்கிறது'' என்று சொல்லுங்கள். ஞாபகமிருக்கட்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் தேவனுடைய புஸ்தகங்களில் குறிக்கப்படுகின்றது... இதை உங்களுக்கு மாத்திரம் கூறாமல், எனக்கும் சேர்த்து கூறிகிறேன். ஆயத்தப்பட முயலுங்கள். ஏனெனில் ஏதோ ஒன்றின் அருகாமையில் நாம் வந்துக் கொண்டிருக்கிறோம். நிகழ வேண்டிய ஏதோ ஒன்றிற்கு வெகு அருகாமையில் நாம் வந்திருக்கிறோம். எனவே நாம் ஆயத்தமாக விரும்புகிறோம். ஆண்டவருடைய வருகை இவ்வளவு அருகாமையில் உள்ளபோது, அந்த மகத்தான நேரத்திற்காக நாம் ஆயத்தப்பட விரும்புகிறோம். 11நாம் இப்பொழுது ஆயத்தமாகி, தேவஒத்தாசையைக் கொண்டு இன்று காலைக்கென நான் தெரிந்துக் கொண்ட ஒரு சிறு பொருளின் பேரில் இப்பொழுது பேசலாம். தொலைபேசி இணைப்பின் காரணமாக நாம் சுருக்கமாக பேசுவோம். இந்தியானாவில் உள்ளது போன்றே, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உங்களுக்கு ஒரு நல்ல காலை இருக்குமென நம்புகிறேன். இங்கு மிகவும் நல்ல, குளிர்ந்த வான்நிலை, மழைக்குப் பிறகு உள்ளது. அது மிகவும் நன்றாயுள்ளது. 12இப்பொழுது எபிரேயர்:1:1லிருந்து வாசிக்கலாம். இப்பொழுது எபிரேயர் முதலாம் அதிகாரத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். மற்றும் பரிசுத்த யோவான் 1-ம் அதிகாரம். எபிரேயர் 1 முதல் 3 மற்றும் பரிசுத்த யோவான்1:1. என்னுடைய பொருள் இந்த காலை நேரத்திலே வேத வார்த்தையின் பாடமாகும். பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன். இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்கு திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டு பண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.'' எபி: 1:1-3 என்ன அருமையான வேதபாகம்! இப்பொழுது பரி. யோவான் 1:1. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.'' யோவான்: 1:1 13இன்று காலை என்னுடைய பொருள்: “கிறிஸ்து தமது சொந்த வார்த்தையிலே வெளிப்படுகிறார்'' என்பதாம். இதன்பேரில் பேச வேண்டுமென்று நான் தீர்மானத்துக்கு வந்த காரணம் என்னவெனில்... நாம் இங்கு கூடி வந்திருப்பதால், ஏதாவதொன்றின் பேரில் மனதில் தோன்றினபடி பேசக் கூடாது என்றும், ஜனங்கள் ஸ்திரப்படுவதற்கென, அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு காரியத்தைப் பேச வேண்டுமென்றும் நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் நாம் ஆபத்தான, துரோகம் விளைவிக்கும் தண்ணீர்களை இப்பொழுது கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நாம் ஏற்கனவே அவைகளின் வழியாக கப்பலில் போய்க் கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் என்னைப் போலவே உங்களுக்கும் அது பயத்தை விளைவிக்கிறதாயிருக்கிறது என்று நினைக்கிறேன். 14சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாலிபப் போதகருடனும் அவருடைய மனைவியுடனும் அந்த அறையில் பேசிக் கொண்டிருந்தேன். இவ்வுலகிலுள்ள மற்றவரைப் போலவே அவர்களும் பயங் கொண்டவர்களாயிருக்கின்றனர். நான், “ஞாபகமிருக்கட்டும், சாத்தான் உங்களைக் குத்த வந்துக் கொண்டிருக்கிறான்” என்று அவர்களிடம் கூறினேன். அது யாராயிருந்தாலும் கவலையில்லை, உங்களைக் ஒரு குத்து குத்துவதற்கு அவன் உரிமை பெற்றிருக்கிறான். அந்த குத்து ஒருக்கால் உங்களை குருடராக்கியிருக்கலாம்; அல்லது நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்கும் கீல்வாதக்காரராகச் செய்திருக்கலாம்; அல்லது உங்களுக்கு நரம்பு தளர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். பாருங்கள்? உங்களை எந்த விடத்திலும் அவன் குத்தக்கூடும். திறந்துள்ள அந்த விடத்தில் குத்த அவனுக்கு உரிமையுண்டு. அந்த இடத்தை நீங்கள் எப்பொழுதும் மூடிக் கொண்டிருக்க கவனமாயிருக்க வேண்டும். நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடுக்கமுள்ள இக்காலத்தை பார்க்கும்போது... 15கடந்த வாரத்தின் ஒலிநாடாக்கள் அந்த பயங்கரமான காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும். என்றாவது ஒருநாளில், நமக்கு இடம் கிடைக்குமானால், அந்த பயங்கரமான காரியங்களைக் குறித்து இப்பூமியில் ஊற்றப்படவிருக்கும் கலசங்களைக் குறித்தும், ஏழு இடிமுழக்கங்களைக் குறித்தும் நாம் பேசலாம்... பூமியில் வரப்போகும் அந்த பயங்கரமான காட்சிகள். இன்றுள்ள ஜனங்கள் நரம்பு தளர்ச்சி கொண்ட நிலையில் இருக்கின்றனர். முழு உலகமே,.. 16சென்ற மாதத்தின் ''ரீடர்ஸ் டைஜஸ்ட்“ (Readers Digest) பத்திரிக்கையைப் படித்தீர்களா? அந்தக் கட்டுரையை நீங்கள் கவனித்தீர்களா? அது மகத்தான சுவிசேஷகரான பில்லி கிரகாமைப் பற்றியதாகும். அவர் மிகவும் களைப்புற்றதனால், அவரால் கூட்டங்களை நடத்த முடியவில்லை. உடல் பரிசோதனைக்காக அவர் மேயோ வைத்திய சாலைக்குச் சென்றார். அவருக்கு எவ்வித கோளாறும் இல்லையென்றும், வேண்டிய அளவிற்கு அவர் வேலை செய்வதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் அவருக்கு உடற்பயிற்சி கொடுத்திருக்கின்றனர். தினந்தோறும் அவர் ஒரு மைல் தூரம் ஓடுகின்றார். மேலும் சிறுபிள்ளைகள் - பையன்களும் பெண்களும் - இருபது வயதாகும் போதே நடுத்தர வயதினை இப்பொழுது அடைந்துவிடுகின்றனர் என்றும், அநேக பெண்களுக்கு இருபத்தைந்து வயதாகும் போதே ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவர்களுக்கு நின்றுவிடுகின்றது என்றும் விஞ்ஞானம் நிரூபித்துள்ளதாக அக்கட்டுரை கூறுகின்றது. உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, சில நாட்களுக்கு முன்பு இரவு கூட்டம் ஒன்றில் பரிசுத்த ஆவியானவர் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஒரு பெண் உட்கார்ந்துக் கொண்டிருந்தாள். பரிசுத்த ஆவியானவர் அவளை அழைத்த போது, அதுதான் அவளில் காணப்பட்ட கோளாறாக இருந்தது. அவளை இரண்டாம் முறை நான் பார்த்தபோது, காரியம் என்னவென்று கண்டுகொண்டேன். ஆயினும், “அப்படி இருக்க முடியாது; அந்த பெண் மிகவும் சிறியவளாயிருக்கிறாளே என்று மனதில் எண்ணினேன். அவளுக்கு இருபது, இருபத்து மூன்று வயது இருக்கும். பாருங்கள்? 17என் தாயாரும் உங்கள் தாயாரும் நாற்பத்தைந்து, ஐம்பது வயதில் தான் அந்த பருவம் அடைந்தனர். என் மனைவி முப்பத்தைந்து வயதில் அதை அடைந்தாள். தற்பொழுது அது இருபது வயதுக்கு வந்துள்ளது. ஜன சமுதாயம் முழுவதுமே அழுகின நிலையில் உள்ளது. கலப்படமுள்ள உணவை நாம் உண்பதனால் நம்முடைய சரீரம் இப்படி கெட்டுவிடுகின்றது. இறுக்கம் (Tension) அதனை இன்னும் அழுகச் செய்கின்றது. அப்படியிருக்க அது நமது மூளை அணுக்களையும் (Brain Cells) கூட அழுகச் செய்யுமல்லவா? அதனால் தான் பெண்கள் தெருக்களில் நிர்வாணமாய் நடப்பதையும், ஜனங்கள் நூற்றிருபது மைல் வேகத்தில் காரோட்டி செல்வதையும் நாம் இப்பொழுது காண்கிறோம். முழு நாட்டிற்கும், இல்லை முழு உலகிற்குமே, மூளைக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்னும் நிலையை அது அடைந்துவிட்டது. 18கர்த்தருக்குச் சித்தமானால், நாம் ஏழு கலசங்களின் இரகசியங்களை திறந்து, பயங்கரமான காரியங்களைக் காண்பிக்கும்போது... சற்று கழிந்த பின்னர் மனிதன் பைத்திய நிலையையடைவான். அப்பொழுது அவன் எறும்புகளை மலை அளவுக்கு பெரிதாகக் காண்பதாக கற்பனை செய்து கொள்வான். நீண்ட கூந்தலைக் கொண்ட வெட்டுக்கிளிகள் பூமியில் தோன்றி (வெளி. 9:8). கூந்தலைக் கத்தரித்துள்ள ஸ்திரீகளை துன்பப்படுத்தும் அவைகளுக்கு ஸ்திரீகளைப் போல் நீண்ட கூந்தல் தொங்கிக் கொண்டிருக்கும்; அவைகளுக்கு சிங்கத்தைப் போல் நீண்ட பற்களும், அவைகளின் வாலில் தேள்களைப் போல் கொடுக்கும் இருக்கும். அவை மனிதரை இப்பூமியில் வேதனைப்படுத்தும். அப்பொழுது எதையும் செய்ய முடியாதபடிக்கு காலதாமதமாகியிருக்கும். உங்களுக்குப் புரிகின்றதா? பாருங்கள்? வேதனைப்படுத்தும்... 19வெளிப்புறமான சரீரத்திற்கு எவ்விதம் ஐம்புலன்கள் உள்ளன என்று சென்ற ஞாயிறன்று பார்த்தோம்... சரீரத்தின் அந்த ஐம்புலன்கள் தாம் உட்செல்லும் வழியாக (Inlet) சரீரத்தில் அமைந்துள்ளன. அந்த சரீரத்தை அடைய ஒரே வழிதான் உள்ளது. அது தான் அந்த ஐம்புலன்களின் மூலமாக, பார்த்தல், உணர்தல், முகர்தல், கேட்குதல் போன்றவை. சரீரத்தினுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால்,வேறு எந்த வழியும் கிடையாது. ஆனால் மனிதனின் உட்புறத்தில்ஆவி என்னும் மனிதன் இருக்கிறான். அந்த மனிதனுக்கும் ஐம்புலன்கள் உள்ளன; சிந்தனை; அன்பு, மனச்சாட்சி போன்றவை. சரி. உங்கள் சரீரத்தின் மூலம் நீங்கள் சிந்தனை செய்ய முடியாது. உங்கள் மனதின் மூலமாகவே நீங்கள் சிந்தனை செய்கிறீர்கள். அங்குதான் அநேக கிறிஸ்தவர்கள் நின்றுவிடுகின்றனர். வயலிலுள்ள கோதுமை போன்றும், களைகளைப் போன்றும் அவர்களும் உண்மையான விசுவாசியைப் போலவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறமுடியும். ஆனால் அவர்களுடைய உட்புறத்தில், அடுத்த ஆதிக்கத்தில் (Realm) மூன்றாவது ஆதிக்கம்; ஆத்துமா உள்ளது. அது தேவனால் முன்குறிக்கப்பட்டுள்ளது. அங்குதான் உண்மையான விதையின் ஜவன் உள்ளது. நான் ஒரு முட்செடியை (Cocklebur) எடுத்து, அதை கோதுமை செடியுடன் ஒட்டுப்போட்டு, அதை புதைத்தால், அது முட்செடியிலிருந்து கோதுமை மணியைத் தோன்றச் செய்யும். வெளிப்புறம் உணர்ச்சிகள் எதுவாயிருப்பினும் அது ஒன்றுமில்லை. 20இன்று அநேகர், பரிசுத்த ஆவியின் அடையாளத்தைக் குறித்து குழப்பமடைந்துள்ளனர். தேவன் பெற்றிருக்கும் எந்த வரத்தையும் சாத்தான் பாவனை செய்யமுடியும். ஆனால் தேவனுடைய வார்த்தையை, வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொன்றாக - அவனால் கொண்டுவர முடியாது. ஏதேன் தோட்டத்தில் அவன் அதில் தோல்வியுற்றான். என்றென்றைக்கும் அவன் அதில்தான் தோல்வி கண்டுவருகிறான். அங்கு தான் அவர்கள்... “தவறான அபிஷேகம் பெற்றவர்கள் அல்லது” கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் என்னும் செய்தியைக் கொண்ட ஒலிநாடா... அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, அன்னிய பாஷை பேசி, நடனமாடி, கூச்சலிட்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போதிலும் பிசாசாக இருக்க முடியும். அது அவர்களுடைய உட்புறம் என்னவென்பதைப் பொறுத்தது. ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.'' (யோவான் 6:37, 44) என்று இயேசு கூறியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். இந்தப் பாடத்தை நாங்கள் ஏற்கனவே கற்பித்திருக்கிறோம். அதாவது சரீரப்பிரகாரமாக நீங்கள் உங்கள் முப்பாட்டனார், முப்பாட்டனார், முப்பாட்டனாருக்குள் இருந்தீர்கள் என்று. இயற்கையில் சரீரப்பிரகாரமாக நீங்கள் அப்படித்தான் இருந்தீர்கள். சில சமயங்களில், சிவப்பு மயிர்கொண்ட ஒரு குழந்தை குடும்பத்தில் பிறக்கும் போது, அது தந்தையை திகைக்க வைக்கின்றது. ஏனெனில் அவருடைய குடும்பத்திலோ, அல்லது குழந்தையின் தாயாரின் குடும்பத்திலோ, அவருக்குத் தெரிந்தமட்டில், சிவப்பு மயிர் கொண்டிருப்பவர் யாருமே இல்லை. ஆனால் அநேக சந்ததிகளுக்கு முன்பு நீங்கள் பார்த்தால், எவராகிலும் ஒருவருக்கு சிவப்பு மயிர் இருந்ததை நீங்கள் கண்டு கொள்வீர்கள். அந்த வித்து வழிவழியாக வந்து, அநேக சந்ததிகளுக்குப் பிறகு இயற்கையில் தோன்றுகிறது. எபிரேயர் 7-ம் அதிகாரத்தில் கூறியுள்ளது போல் மெல்கிசேதேக்கு ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தான். ஆபிரகாம் மெல்கிசேதேக்கை சந்தித்த போது தசமபாகம் வாங்குகிற லேவி ஆபிரகாமின் அரையிலிருந்தபடியால், அவனும் ஆபிரகாமின் மூலம் தசம் பாகம் கொடுத்தான். 21அது போன்றது தான் இது, நீங்கள் தேவனுடைய குமாரராக அல்லது குமாரத்திகளாக இருந்தால், நான் தேவனுடைய குமாரனாயிருப்பேனானால், நாம் ஆதி முதற்கொண்டே தேவனுக்குள் இருந்தோம். இயேசு வார்த்தையின் பரிபூரணமாக ஆனபோது, நாமும் வித்தின் வடிவில் அவருக்குள் இருந்தோம். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, நாமும் கூட அவருடைய சரீரத்தில் சிலுவையிலறையப்பட்டோம். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த போது, நாமும் அவருடன் உயிரோடெழுந்தோம். அதை நாம் அறிந்துக் கொண்டபடியால், இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் அவருடன் நாம் உன்னதங்களிலே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? ஏனெனில் அவர்... நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருந்தால், நாம் தேவனுடைய பிள்ளைகள். அப்படியானால் நாம் தேவனுடைய தன்மைகளாயிருந்து, நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம். நித்திய ஜீவனாயிருப்பது தேவன் ஒருவர் மாத்திரமே. அப்படியானால் நாம் ஆதி முதற்கொண்டே அவருக்குள் இருந்தோம். இயேசு வார்த்தையின் பரிபூரணமாகத் தோன்றினபோது, நாம் அவரில் பாகமாயிருந்தோம். ஆமென்! அது அவருக்குள் இருக்கும் போது, பிசாசோ வேறெந்த சக்தியோ, எதுவும் அதை அசைக்க முடியாது. அதுதான் ஆத்துமா கட்டப்பட்டுள்ள கம்பம் (Tie post). நீங்கள் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, விருப்பம் கொண்டு, மற்றெல்லா காரியங்களையும் செய்யலாம். வார்த்தை என்னும் கம்பத்தில் அது கட்டப்பட்டிருக்கும் வரைக்கும். அங்கிருந்து நீங்கள் ஒருபோதும் அசைவதில்லை. இயன்றவரை அது வார்த்தைக்கு உண்மையாயிருந்து, அதில் நிலைகொள்ளும். ஆனால் நீங்கள் அதற்கு புறம்பே இருந்தால், நீங்கள் என்ன செய்தபோதிலும், இழந்த போன நிலையில் இருப்பீர்கள். 22லவோதிக்கேயா சபையின் காலம் நிர்வாணியாயும், குருடாயும், பரிதபிக்கப்படத் தக்கதாகவும் இருந்து, அதை அறியாமலிருக்கிறது பாருங்கள், அது வெளியே... அது உண்மையான ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறது. பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுடைய ஆவியின் மேல் விழக்கூடும். ஆனால் அவனுடைய ஆத்துமா தான் வித்தாகும். அந்த வித்து வார்த்தை. பாருங்கள்? நீங்கள் எவ்வளவுதான் பிரசங்கம் பண்ணினாலும், நீங்கள் எவ்வளவு நன்றாக இதைச் செய்தாலும், எவ்வளவாக நேசித்தாலும்... அது ஆவியின் உட்செல்லும் வழிகளில் (inlets) ஒன்றாகும். உங்களுடைய சரீரத்தில் நீங்கள் அன்பு கூற முடியாது. உங்களுடைய ஆவியினால் மாத்திரமே நீங்கள் அன்பு கூற முடியும். அது உட்செல்லும் வழிகளில் ஒன்றாகும். நீங்கள் அன்பு கூறலாம், தேவன் பேரிலும் அன்பு கூறலாம். அப்படியிருந்தும் நீங்கள் சரியாக இராமல் இருக்கலாம். நீங்கள் பிசாசுகளைத் துரத்தலாம், பிரசங்கம் செய்யலாம், இவைகளையெல்லாம் செய்யலாம். இருப்பினும் நீங்கள் சரியாயிராமல் இருக்கலாம். இயேசு அவ்விதம் கூறியுள்ளார்: ''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி...'' (மத். 7:22). அந்த வார்த்தை அதை முடிவுபடுத்துகின்றது. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்,... 23கவனியுங்கள், கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார் என்னும் வேதப் பொருளின் பேரில் நான் பேசப் போகின்றேன். இந்த தீர்மானத்தை நான் என் படிக்கும் அறையில் செய்தேன். ஒரு அருமையான நபர் (ஒருக்கால் இன்று காலை அவர் இங்கு அமர்ந்திருக்கலாம்)... என் படிக்கும் அறையில் ஹாஃப்மனின் 'கிறிஸ்துவின் தலை' சித்திரம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அது மலைப் பிரசங்கத்தில் வரும் 'பாக்கியவான்கள்' (Beatitudes) (மத்:5:3-11) வசனங்கள் - தமிழாக்கியோன்) என்னும் பகுதியிலுள்ள வார்த்தையிலேயே உரைக்கப்பட்டுள்ளது. தலைமயிரின் பாகம் வரும்போது, அவர்கள் பேனாவினால் சற்று அழுத்தமாக வரைந்துள்ளனர். எனவே அவர் தமது வார்த்தையில் அமர்ந்து கொண்டு, பார்த்துக் கொண்டிருக்கிறார். பாக்கியவான்களுக்கும் கிறிஸ்து. அதை எனக்குப் பரிசாக அளித்தவர் யாராயிருந்தாலும், உங்களுக்கு நன்றி சொல்கிறேன். வேறு யாரோ ஒருவர், எலியா அக்கினி ரதத்தில் மேலே செல்லும் படம் ஒன்றை என் படிக்கும் அறையில் மாட்டியிக்கிறார். இவைகளை நான் பாராட்டுகிறேன். அநேக சமயங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், நன்றி தெரிவிக்க எனக்கு சமயம் கிடைப்பதில்லை. ஆயினும் சகோதரனே, சகோதரியே, அவைகளை நான் பார்க்கிறேன். இவைகளை நீங்கள் பரிசாக அளித்தீர்கள் என்று எனக்குத் தெரியும். தேவனும் அதை அறிவார். இப்பொழுது நான், ''கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார்“ என்னும் பொருளின் பேரில் பேசப் போகின்றேன். 'பாக்கியவான்கள்' என்று மலைப் பிரசங்கத்தில் வரும் பாகத்தில், கிறிஸ்துவின் படம் நின்றுகொண்டிருப்பது எவ்வளவு அழகாயுள்ளது. அதைப் பார்த்தபோது தான் இப்பொருளைக் குறித்து சிந்திக்கத் தலைப்பட்டேன். கிறிஸ்துவும் வார்த்தையும் ஒன்றே, பாருங்கள்? 24அவர்கள், “வேதம் எப்படி...'' என்கின்றனர். ஜனங்கள் கூறுகின்றனர். அண்மையில் ஒரு மனிதனுடன் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். அவர் என்னிடம், ''சற்று யோசித்துப் பாருங்கள். பூமியில் வாழும் நாம், வேதாகமம் என்னும் யூதக் கட்டுக் கதைகளின் மூலம் இரட்சிக்கப்பட்டோம் என்று தான் சொல்ல முடியும்'' என்றார். நான், ''ஐயா, நீர் ஏன் அப்படிச் சொல்லுகிறீர் என்று எனக்குத் தெரியவில்லை. அது யூதக் கட்டுக்கதை என்று நான் நம்பமாட்டேன்'' என்றேன். அவர், “சரி, நீங்கள் ஜெபம் செய்கிறீர்கள். யாரிடம் நீங்கள் ஜெபம் செய்கின்றீர்கள்? நான் இன்னின்ன காரியங்களுக்காக வேண்டிக் கொண்டேன். எனக்குக் கிடைக்கவில்லை'' என்றார். 25நான், “நீங்கள் தவறான முறையில் ஜெபம் செய்திருப்பீர்கள். தேவனுடைய சித்தத்தை மாற்றுவதற்காக நாம் ஜெபம் செய்யக் கூடாது. நமது சிந்தை மாற வேண்டுமென்றே நாம் ஜெபிக்க வேண்டும். தேவனுடைய சிந்தைக்கு எவ்வித மாற்றமும் அவசியமில்லை'' என்றேன். (பாருங்கள், பாருங்கள்?). நான், ''நீர் எதற்காக ஜெபம் செய்கிறீர் என்பதல்ல...” என்றேன். நான் ஒரு கத்தோலிக்க பையனை அறிவேன். அவன், தன் தாயார் உயிர்வாழ வேண்டுமென்று, தன்னிடமிருந்த ஜெபப் புஸ்தகத்திலிருந்து ஜெபங்களைப் படித்துக் கொண்டேயிருந்தான். ஆனால் அவனுடைய தாயார் இறந்துபோனாள். அவன் ஜெபப் புஸ்தகத்தை தீயில் எறிந்துவிட்டான். பாருங்கள்..., ''இப்பொழுது நான் ஜெபப் புஸ்தகத்தை படிப்பதில்லை. எனினும்...'' பாருங்கள், நீங்கள் தவறான மனப்போக்கு உடையவர்களாயிருக்கிறீர்கள். என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் தேவனுக்குப் போதிக்க முயலுகிறீர்கள். ஜெபம் என்பது, ''ஆண்டவரே, உமது வார்த்தையுடன் பொருந்துவதற்கென என்னை மாற்றி அமையும்“, என்பதாய் இருக்க வேண்டும். ”உமது சிந்தையை நான் மாற்றட்டும்'' என்றல்ல; ''எனது சிந்தையை மாற்றி அமையும்“ என்று (பாருங்கள்?) ''உமது சித்தத்திற்கேற்ப என் சிந்தையை மாற்றும். உமது சித்தம் இந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆண்டவரே, உமது சிந்தையைப் போல் என் சிந்தையை நீர் மாற்றி அமைக்காமல், நான் இவ்விடம் விட்டுச் செல்ல அனுமதியாதேயும். என் சிந்தை உமது சிந்தையைப் போல் இருக்குமானால், நீர் எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிப்பேன். உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று நீர் அதில் கூறியிருக்கிறீர். ஆண்டவரே, நான் உம்மில் அன்பு கூருகிறேன். எனவே சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது''. 26நான் இந்த வாரம் நாட்டின் புறத்தில் அருமையான நண்பர்களுடன் தங்கியிருந்தேன். நேற்று மேசையில் உணவு அருந்தும் போது, அவர்களில் சிலரை நான் கேட்டேன். நாங்கள் எப்பொழுதும் சுற்றிலும் அமர்ந்து கொண்டு, சிறு வேத பாடம் நடத்துவது வழக்கம். நான் அன்பைப் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் என்னிடம், “நீர் அந்திகிறிஸ்து என்று நினைக்கிறேன்'' என்றார். நான் அவரிடம், ''அதுவே என் ஆண்டவருக்குப் பிரீதியாயிருக்குமானால், அவ்விதம் இருக்கவே நான் விரும்புகிறேன். நான் என்னவாயிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, அவ்வாறே நான் இருக்க விரும்புகிறேன். அவரை நான் நேசிக்கிறேன். அவர் என்னை நரகத்தில் தள்ளினாலும், இப்பொழுது எனக்குள்ள அதே ஆவியுடன் நான் அங்கு செல்ல நேரிட்டால், அவரை நான் அப்பொழுதும் நேசிப்பேன்“ என்றேன். அவர் விசித்திரமாக என்னைப் பார்த்தார். அங்கு நான்கைந்து வாலிபர்கள் தங்களுடைய மனைவிகளுடன் வந்திருந்தனர். அந்த பெண்கள் மிகவும் நல்லவர்கள். அந்த வாலிபர்கள் தங்கள் மனைவிகளை எவ்வளவாய் நேசிக்கின்றனர் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே நான் அவர்களிடம் இவ்வாறு கூறினேன்: ”இதுதான் நீங்கள் பரிசோதிக்க வேண்டிய முறையாகும். உங்களுக்கு விவாகமாவதற்கு முன்பு உங்கள் மனைவி. உங்களுக்கு விவாகமாகிறது என்று நீங்கள் சொப்பனம் காண்பதாக வைத்துக் கொள்வோம். ஆனால் உண்மையில் உங்களுக்கு விவாகமாகவில்லை; விவாகமாகிவிட்டது என்று சொப்பனம் தான் காண்கிறீர்கள். நீங்கள் உறக்கத்தினின்று எழுந்து உங்கள் பெண் சிநேகிதியிடம் சென்று, உனக்குத் தெரியுமா? நமக்கு விவாகமாகி குழந்தைகள் பிறந்தனவென்றும், நாம் மகிழ்ச்சியாயிருந்து தேவனுடைய வருகையை எதிர்நோக்கியிருக்கிறோம் என்று சொப்பனம் கண்டேன்'' என்று கூற, அவள், ''நான் வேறொருவரை நேசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களைக் காட்டிலும் அவரை நான் அதிகமாக நேசிக்கிறேன். அவருடன் நான் இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்த முடியும்'' என்று கூறுவாளானால், உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக, ''அன்பே, தேவனுடைய ஆசீர்வாதம் உன்மேல் தங்கியிருக்கட்டும். அவனுடன் சென்று நீ வாழ்க்கை நடத்து“ என்று கூறும் அளவிற்கு அவளை உங்களால் நேசிக்க முடியுமா? இங்குள்ள ஒவ்வொரு மனிதனும் பெண்ணும் அதைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் அன்பு உண்மையாயிருந்து, அவளுடைய க்ஷேமத்தில் நீங்கள் அக்கரை கொண்டிருந்தால், என்ன... நீங்கள் அவளை மனைவியாக அடைந்து வாழ்க்கை நடத்த முடியுமென்று உங்களுக்குத் தெரியும். அவள் உங்களை விவாகம் செய்யலாம்; ஆனால் அவள் சந்தோஷமாக இருக்க முடியாது. மற்றவனைக் கலியாணம் செய்தால் அவள் அதிக சந்தோஷமாக இருப்பாள்... நீங்கள் உண்மையாக அவளை நேசிப்பீர்களானால், அவள் சந்தோஷமாக இருப்பதையே விரும்புவீர்கள். எனவே தேவனுடைய சித்தம் எதுவாயிருப்பினும், அதுவே நடக்கட்டும். எனக்கு அது சந்தோஷத்தை அளித்தாலும் அளிக்காவிட்டாலும், நான் அவ்விதமே வாழத்தலைப்படுவேன். ஏனெனில் நான் செய்வதைக் குறித்து அவர் மகிழ்ச்சி கொள்வார். எனவே உங்கள் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் அதனுடன் ஒப்பிட் டுப் பாருங்கள். அப்பொழுது நீங்கள் தேவனில் அன்பு கூர்கிறீர்களா இல்லையா என்று தெரிய வரும்'' என்றேன். ''நீ என்னை சேவித்தாய். ஆனாலும் நான் உன்னைப் புறம்பே தள்ளிவிடப் போகிறேன்''. “எப்படியிருந்தாலும், நான் உம்மை நேசிப்பேன்” பாருங்கள், பாருங்கள்? 27எனவே சபைகள் மாத்திரம் இதை அறிந்துக்கொண்டு, அவ்விதம் விசுவாசிக்கத் தலைப்பட்டால், கால்பந்து ஆட்டத்தில் ஒருவன் கால் பந்தை உதைத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் போது, அவனைத் தடங்கல் செய்யாமல், அவனைப் பாதுகாக்கும். பாருங்கள், உண்மையான நோக்கங்களும் குறிக்கோள்களும் ஒருவனுக்கு இருக்குமானால் அவன், “ஏய், என்னிடமும் அது உள்ளது. அது நான் பாருங்கள், தேவன் ஒரு மனிதனை உபயோகிக்க முடியாது. அநேக போலிகள் உள்ளன. எனவே இது சாத்தான் என்பது திண்ணம். ஜனங்கள் அதை உணராமல் இருக்கின்றனரே” என்று கூறமாட்டான். ஒரு பொதுக் கட்டிடத்தை அவர்கள் யாருக்காவது கூட்டம் நடத்துவதற்கென்று கொடுத்தால், அதை உடனே பிடுங்கிக் கொள்ளப் பார்க்கின்றனர். தேவன் ஒரு ஊழியத்தை எழுப்பும் போது, எத்தனை பேர் அதன் பின்னால் செல்கின்றனர் என்பதை அவர்கள் கண்கூடாகக் காணட்டும். பாருங்கள்? பாருங்கள்? 28தேவன் பேரிலுள்ள உண்மையான அன்பு, “ஆண்டவரே, நான் எந்த பாகத்தை வகிக்க நேரிட்டாலும், அதைப் பாதுகாக்க என்னால் ஒரு வார்த்தை மாத்திரம் கூற முடிந்தால், அதை நான் செய்யட்டும்” என்று கூறும். பாருங்கள்? உங்கள் மனைவியைக் குறித்து நீங்கள் கொண்டுள்ளது போன்றது அது. நீங்கள் உண்மையாக அவளை நேசித்தால் (பாருங்கள்?) - அது மாம்சப் பிரகாரமான அன்பல்ல, அது தெய்வீக அன்பு; உண்மையான அன்பு. வேறு யாரிடமாவது அவள் சந்தோஷமாக வாழ முடியுமானால், நீங்கள் அவளை இன்னமும் விவாகம் செய்யவில்லை, ஏனென்றால் உங்களால் முடியாது. 29ஒலி நாடாக்களைக் கேட்கும் ஜனங்களில் அநேகர், விதவிதமாக எழுதி அனுப்புகின்றனர். “விவாகமும் விவாகரத்தும் என்னும் செய்தியில் நீங்கள் ஏன் இப்படி சொன்னீர்கள்?அப்படிச் சொன்னீர்கள்?'' என்றெல்லாம் அவர்கள் கேட்கின்றனர். நான் ஏற்கனவே அநேகமுறை கூறியிருக்கிறேன். இந்த ஒலி நாடாக்கள்... சகோதரனே. இதை நான் என் சபையோருக்குக் கூறிக் கொண்டிருக்கிறேன். தேவன் உம்மை மேய்ப்பனாக அமர்த்தியுள்ள சபைக்கு நான் உத்தரவாதியல்ல என்னுடைய ஜனங்களுக்கு எத்தகைய ஆகாரம் போஷிக்கின்றேன் என்பதற்கு மாத்திரமே நான் உத்திரவாதி. இது இந்த கூடாரத்திற்கு மாத்திரமே. பாருங்கள்? ஜனங்கள் இந்த ஒலி நாடாக்களைக் கேட்க விரும்பினால், அது அவர்களைப் பொறுத்த விஷயம். ஆனால் நானோ தேவன் எனக்குத் தந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களுடைய பாவங்கள் தாம் அங்கு நீக்கப்படுகின்றன. யாரோ ஒருவர், ''நான் இதை செய்திருக்கிறேன், அதை செய்திருக்கிறேன். உங்கள் பாவங்கள்... என்று நீங்கள் கூறியிருக்கின்றீர்களே'' என்று எழுதியிருந்தார். நான் அவ்விதம் கூறவில்லை. நான், “இதைக் கவனியுங்கள். இது இங்குள்ளவர்க்கு மாத்திரமே - இந்தக் கூடாரத்தில் உள்ள என்னுடைய மந்தைக்கு மாத்திரமே - உரியது'' என்றேன். ஜனங்கள் அந்த ஆகாரத்தை எடுத்துக் கொண்டு கலப்படம் செய்ய நினைத்தால்... நீங்கள் தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெற்று, தேவன் உங்களைச் செய்யச் சொல்வதை செய்து நிறைவேற்றுங்கள். நானும் அப்படியே செய்வேன். ஆனால் இந்தச் செய்திகள் என் சபைக்கு மாத்திரமே. 30கவனியுங்கள், மீண்டும் செய்திக்கு வருவோம். நாம் இறுகப் பற்றிக் கொள்வதற்கு ஏதாவதொன்று நமக்கு அவசியமாயுள்ளது. அதற்காக ஒன்று கம்பமாக இருக்க வேண்டும். அதுதான் முடிவானதாகும் (ultimate). ஒவ்வொருவருக்கும் முடிவானது (ultimate) அல்லது முற்றிலுமானது (absolute) அவசியம். அநேக ஆண்டுகளுக்கு முன்பு 'முற்றிலுமானது' (absolute) என்பதைக் குறித்து ஒருமுறை பிரசங்கம் செய்திருக்கிறேன். அதுதான் வார்த்தையிலேயே முடிவான ஸ்தலம். பந்து விளையாட்டில் 'அம்பயர்' (umpire) அது 'ஸ்டிரைக்' (Strike) என்று தீர்மானித்தால், அதுதான் அதன் முடிவாகும். நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தாலும், அது ஒன்றுமில்ல. ஏனெனில் அம்பயர் அது 'ஸ்டிரைக்' என்று தீர்மானித்துவிட்டார். நீங்கள், ''அது 'ஸ்டிரைக்' அல்ல. அது இப்படி சென்றதைக் கண்டேன்“ எனலாம். அது எப்படியிருந்தாலும் அதைக் குறித்து கவலையில்லை. அம்பயர் அவ்விதம் தீர்மானித்தபடியால், அதுதான் அதன் முடிவு. அவர்தான் அதற்கு முடிவானவர். அது போன்றே, சாலைகளிலுள்ள போக்குவரத்துச் சிக்னல் விளக்குகள் முடிவானதாகும். அது 'நில்' என்றால், நீங்கள் நிற்கத்தான் வேண்டும். “நான் துரிதமாகச் செல்லவேண்டும்...'' என்று நீங்கள் கூறினால், அதனால் எவ்வித உபயோகமுமில்லை, அது, ''நீ நில், மற்றவன் போகட்டும்” என்று கூறுகின்றது. பாருங்கள்? அதுதான் முடிவாகும். 31நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு இருக்க வேண்டும். உங்கள் மனைவியை நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் ஒரு முடிவு இருக்கத்தான் செய்தது. நீங்கள் தேர்ந்தெடுக்க ஒரு ஸ்திரீ இருக்கவேண்டும். கார் வாங்க நீங்கள் செல்லும்போது, ஒரு முடிவான தீர்மானத்தை நீங்கள் எடுக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், அது ஃபோர்ட் அல்லது ஷெவர்லே அல்லது பிளிமத் காரோ, அல்லது அயல் நாட்டுக்காராகவோ இருக்கலாம். எப்படியாயினும் நீங்கள் ஒரு முடிவான தீர்மானம் எடுக்கவேண்டும். அது போன்று கிறிஸ்தவ ஜீவியத்திலும் உங்களுக்கு முடிவானது ஒன்று இருக்க வேண்டும். 32ஒருவன் வேறொருவன் கூறுவதைக் கேட்டு மற்றவனிடம் சென்று, “நீ ஞானஸ்நானம் பெறவேண்டும்'' என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதைக் கேட்ட பின்பும் அவன் ஞானஸ்நானம் பெறாமலிருக்கலாம். சில சபைகள் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை. அவர்கள் தண்ணீர் தெளிக்கின்றனர். உதாரணமாக, மெதோடிஸ்டுகள், யாராகிலும் விரும்பினால் மெதோடிஸ்டுகள் அவர்களுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். கத்தோலிக்கர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்கள் தண்ணீர் தெளிக்க மாத்திரம் செய்கின்றனர். எனவே கத்தோலிக்கனாக வளர்ந்த ஒருவன் தண்ணீர் முழுக்கு ஞானஸ் நானத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவனுக்குப் புரியவில்லையென்று வைத்துக் கொள்வோம். எனவே அவன் பாதிரியாரை அணுகி, ''பிதாவே (Father), நாம் தண்ணீ ர் முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று கேள்விப்பட்டேன். அதைக் குறித்து நமது சபை என்ன கூறுகிறது?'' என்று கேட்டான் என்றும், பாதிரியார், ''தண்ணீர் தெளிக்கப்பட வேண்டுமென்று தான் நமது சபை போதிக்கிறது“ என்று விடையளித்தார் என்றும் வைத்துக் கொள்வோம். அவனுக்கு அவனுடைய சபைதான் முடிவானது என்றால், அத்துடன் அந்த பிரச்சினை முடிவு பெற்றுவிடுகின்றது. அவனுடைய சபை அப்படி கூறுகின்றது, அவ்வளவு தான். 33பாப்டிஸ்டு சகோதரன் ஒருவன், “நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் பெறவேண்டும்'' என்று நாம் கூறுவதைக் கேள்விப்பட்டு, ”நான் அதை விசுவாசிக்கிறேன்“ என்று கூறி, இயேசு கிறிஸ்து நாமத்தில் பெறவேண்டும் என்றால், அவன் தன் போதகரை அணுகி, ''போதகரே, ஒருவன் என்னிடம், 'முழுக்கு ஞானஸ்நானம்' பெறுவது சரிதான்; ஆனால் அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பெறவேண்டும் என்று கூறினான். அதைக் குறித்து என்ன?” என்று கேட்டபோது, அவனுடைய போதகர், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவைகளை உபயோகித்தே ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று புஸ்தகம் இங்கு கூறுகின்றது'' என்று விடையளித்தார் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய சபை அவனுக்கு முடிவானதாக இருக்குமானால், அத்துடன் அது முடிவடைந்துவிடுகிறது. மற்றவர் என்ன கூறினாலும் அவனுக்குக் கவலையில்லை. சபைதான் அவனுடைய முடிவாகும். 34நல்லது, ஒவ்வொரு ஸ்தாபனமும் அதனதன் அங்கத்தினர்க்கு முடிவான ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால் எனக்கும், கிறிஸ்துவினாலும், கிறிஸ்துவினிடம் நடத்துவதாக நான் கருதியிருக்கும் அனைவருக்கும் வேதாகமமே முடிவான ஒன்றாகும். வேறு எதைப் பற்றியும் கவலையில்லை... ஏனெனில், “தேவனே சத்தியபார் என்றும், எந்த மனுஷனும் பொய்யன்” என்று தேவன் கூறியுள்ளார் (ரோமர்3:4). வேதாகமமே தேவனுடைய முடிவானது என்று நான் முற்றிலும் நம்புகிறேன். யார் என்ன கூறினாலும், அது தான் முடிவான காரியம். வேதாகமம் என்பது முறைமைகளின் புஸ்தகமல்ல. இல்லை, ஐயா அது முறைமைகளின் புஸ்தகமல்ல, அது ஒழுக்க விதிகளின் புஸ்தகமல்ல. அநேக முறைமைகள் நம்மிடையே காணப்படுகின்றன. வேதாகமம் என்பது முறைமைகள் அடங்கிய புத்தகமல்ல. இல்லை, ஐயா! அது ஒழுக்க விதிகளின் புஸ்தகமும் அல்ல. அது முழுவதும் சரித்திரப் புஸ்தகமல்ல. அது வேத தத்துவம் அடங்கிய புஸ்தகமுமல்ல, அது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தும் புஸ்தகமாம். நீங்கள் அதைப் படிக்க விரும்பினால் - தாள்கள் உள்ளவர்கள் குறித்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்தல்:1:1-3. வேதாகமம் என்பது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தும் புஸ்தகம். 35நமக்கு சமயமிருக்கிறது, இப்பொழுதே அதை படித்துவிடுவோம். பேசுவதற்கென என்னிடம் நிறைய குறிப்புகள் இல்லை. கர்த்தர் வர தாமதிப்பாரானால், அதிலிருந்து பெற்றுக் கொள்ள முயல்வோம்... ''சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்தும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும் தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும் இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.'' (வெளி. 1:1-3). 36எனவே வேதாகமம் இயேசு கிறிஸ்துவை முழுவதுமாக வெளிப்படுத்தும் புஸ்தகமாகும். அது தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது. எபி: 1:1, “'பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் (இயேசு கிறிஸ்து) மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார். ”எல்லா தீர்க்கதரிசிகளையும் ஒருங்கே கொண்டவர் இயேசு கிறிஸ்து இயேசு, மல்கியாவாக இருந்தார்; இயேசு, எரேமியா, ஏசாயா, எலியாவாக இருந்தார். அவர்களிடம் இருந்த அனைத்தும் இயேசுவில் காணப்பட்டது“ உங்களிலும் என்னிலுமுள்ள அனைத்தும் அவரில் காணப்படுகின்றது - வார்த்தைகள், தேவனுடைய வார்த்தைக்கு சாட்சிகள். எனவே அது முறைமைகளின் புஸ்தகமோ, ஒழுக்க விதிகளின் புஸ்தகமோ, சரித்திர புஸ்தகமோ, அல்லது வேததத்துவ புஸ்தகமோ கிடையாது. அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடைக் கொண்ட புஸ்தகமாகும். வார்த்தையாகிய தேவன் தாமே மாமிச ரூபத்தில் தம்மை வெளிப்படுத்துதல். அதுதான் அது. வேதாகமம் வார்த்தையாயிருக்கிறது. தேவன் மாம்சமாயிருக்கிறார். தேவன் மாமிசம்... தேவன் வார்த்தையாயிருக்கிறார். இயேசு மாமிச ரூபத்தில் இருக்கிறார். வார்த்தையாகிய தேவன் மாமிச சரீரத்தில் தோன்றி எப்படி தம்மை வெளிப்படுத்தினார் என்பதைக் குறித்த வெளிப்பாடுதான் அது. அதனால் தான் அவர் தேவனுடைய குமாரனாக ஆனார். அவர் தேவனுடைய பாகம். உங்களுக்குப் புரிகின்றதா? அதாவது, சரீரம் தேவனுடைய பாகம். எனவே அவர்குமாரன். 37கத்தோலிக்கர்களும், மற்ற ஸ்தாபனங்களும் அவரை 'நித்திய குமாரன்' என்று அழைக்கின்றனர். அந்த வார்த்தைக்கு அர்த்தமேயில்லை. பாருங்கள்? நித்தியமாக இருந்து கொண்டு குமாரனாக இருக்க முடியாது. ஏனெனில் குமாரன் என்பவர் பிறக்கின்றார். 'நித்தியம்' என்னும் வார்த்தை... அவர் குமாரனாக இருக்கலாம், ஆனால் நித்திய குமாரனாக இருக்கமுடியாது. இல்லை, ஐயா 'நித்தியகுமாரன்' என்பது கிடையாது. ஆனால் அவர் குமாரன். எனவே எரேமியா, மோசே இவர்களிலிருந்த வார்த்தை அனைத்தும்... அந்த வார்த்தைகள் அனைத்தும், ''என்னைக் குறித்து அவர்கள் சாட்சி கொடுத்தார்கள்'' என்று இயேசு கூறினார். தேவனுடைய வார்த்தையின் உண்மையான திவ்விய வெளிப்பாடு அனைத்தும் ஒரு மானிட சரீரத்தில் ஒன்று திரண்டது. அதைச் சுற்றிலும் தேவன் மாமிச சரீரம் ஒன்றை அமைத்தார். அதன் காரணமாகத்தான் அவர் குமாரன் என்று அழைக்கப்பட்டார். அதன் காரணமாகவே இயேசுவும் தேவனை 'பிதா' என்று குறிப்பிடுகின்றார். இது மிகவும் எளிதானது, தேவன் தாமே இதை உங்கள் மனதில் ஊற்ற நீங்கள் இடங்கொடுத்தால். பாருங்கள்? தேவன் மாமிச் சரீரத்தில் வெளிப்படுகின்றார் (கவனியுங்கள்)... வார்த்தையிலிருந்து மாமிசமாக வெளிப்படுதல், அதுதான் யோவான் 1:14, “அந்த வார்த்தை மாமிசமாகி நமக்குள்ளே நமது மத்தியிலே வாசம்பண்ணினார்.'' 38இந்த வேதாகமத்தைக் கவனியுங்கள். சிலர், “இது இதைச் செய்துள்ளது. அதைச் செய்துள்ளது'' என்கின்றனர். நான் உங்களிடம் ஒன்றைக் கூறட்டும். வேதாகமத்தின் சரித்திரத்தை நாம் ஒரு நிமிடம் ஆராய்ந்து அது எங்கிருந்து வந்தது என்பதைப் பார்ப்போம். அது நாற்பது வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. ஆயிரத்து அறுநூறு வருடங்களாக, வெவ்வேறு காலங்களில், நாற்பது மனிதர் இந்த வேதாகமத்தை எழுதி, உலக சரித்திரத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை அவர்கள் முன்னறிவித்து, அனேக சமயங்களில் அவை நிகழ்வதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவைகளை முன்னுரைத்தனர். இந்த அறுபத்தாறு புஸ்தகங்களில் ஒரு பிழையுங் கூட இல்லை. ஓ, என்னே! தேவனைத் தவிர வேறெந்த ஆக்கியோனும் இவ்வளவு பிழையற்றவராக இருக்கமுடியாது. ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தைக்கு முரணாக அமைந்திருக்கவில்லை. வேதாகமம் ஆயிரத்தறுநூறு ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள், மோசேயின் காலத்திலிருந்து பத்மு தீவில் யோவான் இறந்த காலம் வரைக்கும் ஆயிரத்தறுநூறு ஆண்டுகள். நாற்பது வெவ்வேறு ஆக்கியோன்களால் அது எழுதப்பட்டது. ஒருவருக்கு மற்றவரைத் தெரியாது. அவர்கள் வார்த்தை வடிவில் அதை பெறவில்லை. அவர்களில் சிலருக்கு வார்த்தையென்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் அவர்கள் தீர்க்கதரிசிகளாக தீர்க்கதரிசனம் உரைத்தவைகளை ஒருங்கே சேர்த்த போது, அவை ஒன்றுக்கொன்று பிழையின்றி இணைந்தன. 39பெந்தேகொஸ்தே நாளில் பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் (அப். 2:38) என்று கூறினதை சற்று கவனியுங்கள். பவுலுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அவனை வழியில் சந்தித்து, ''சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?“ என்று அவனிடம் பேசின அந்த அக்கினி ஸ்தம்பம் யாரென்பதை அறிந்துகொள்ள அவன் அரேபியாவுக்குச் சென்று, அங்கு மூன்று ஆண்டுகளாக பழைய ஏற்பாட்டைப் படித்தான். அவன் எப்படி தவறு செய்திருக்க முடியும்? அவன் சபைகளைக் கலந்தாலோசிக்கவில்லை. பதினான்கு ஆண்டுகள் கழித்து அவன் பேதுருவைச் சந்தித்தபோது, அவர்களிருவரும் வார்த்தைக்கு வார்த்தை ஒரே காரியத்தை பிரசங்கம் செய்து வந்தனர் என்பதை அறிந்து கொண்டனர். அதுதான் நம்முடைய வேதாகமம். மனிதர்களின் வார்த்தை தோல்வியடையட்டும்... இதுவோ... எந்த மனிதனும் இதனுடன் ஒன்றையும் கூட்டமுடியாது. இந்த வேதாகமத்துடன் நீங்கள் ஒன்றையும் கூட்டாதீர்கள். இல்லை, ஐயா! இது பரிபூரண வெளிப்பாடாகும். அவ்வளவுதான். 40ஏழு முத்திரைகளைப் போல. ஏழு முத்திரைகள். ஒருவர் என்னிடம் இவ்வாறு சொல்லிக் கொண்டேயிருந்தார்: ''அங்கே நீங்கள்... சகோ. பிரான்ஹாமே, இந்த முத்திரைகளின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்ட பின்பு, ஆண்டவர் உங்களுடன் பேசி, தேவனிடத்தில் எப்படி நெருங்குவது என்பதைக் குறித்து எங்களுக்கு எடுத்துரைப்பார்...'' நான் அவரிடம், “இல்லை, ஐயா அப்படியிருக்க முடியாது. ஏழு இரகசியங்கள் அடங்கிய ஏழு முத்திரைகளும் ஏற்கனவே வேதத்தில் உள்ளன. அவை ஏற்கனவே வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளன. அவை என்னவென்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை'' என்றேன். அவர்கள் இயேசுவின் நாமத்தில் எவ்வளவு காலமாக ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? அதுவல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமம் தான் ஞானஸ்நானத்தில் உபயோகிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் எப்படி நேராக்கப்பட்டதென்று... ஏனெனில் இயேசு என்னும் பெயர் கொண்ட அநேகர் உள்ளனர்... இயேசு என்னும் பெயர் கொண்ட போதகர் நண்பர்கள் அநேகர் எனக்குள்ளனர். அதுவல்ல; கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பது தான். தேவனைத் தவிர வேறெந்த ஆக்கியோனும் இவ்வளவு சரியாக இருக்கமுடியாது. இந்த வேதாகமம் எப்படி எழுதப்பட்டது என்பதைச் சற்று கவனிப்போம். 41உதாரணமாக... ஆயிரத்தறுநூறு ஆண்டுகாலமாக உடலைக் குறித்து நாற்பது வெவ்வேறு மருத்துவப் பள்ளிகள் எழுதின அறுபத்தாறு மருத்துவப் புஸ்தகங்களை நாம் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.அதில் எத்தகைய தொடர்ச்சி காணப்படும் என்பதைக் குறித்து ஐயமுறுகிறேன். நமது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன்... இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவர் நிமோனியா வியாதியால் பீடிக்கப்பட்டபோது, அதற்கு சிகிச்சைக்காக அவர்கள் அவருடைய கால் விரல் நகத்தைப் பிடுங்கியெடுத்து, ஒரு பைன்ட் இரத்தம் அவரிலிருந்து வடியச் செய்தனர். இன்று நம்மைக் கவரும் விஞ்ஞானத்தைக் குறித்த சில காரியங்களை இன்னும் சற்று விவரமாகப் படிப்போம். ஆயிரத்தறுநூறு ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்ட நாற்பது விஞ்ஞானப் புஸ்தகங்களைப் படித்தால், அது எவ்விதமாயிருக்கும்? முன்னூறு ஆண்டுகட்கு முன்பு, பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் ஒரு பந்தை உருட்டிவிட்டு, எந்த ஒரு பொருளும் மணிக்கு முப்பது மைல் வேகத்தைக் கடந்துவிட்டால், அது பூமியைவிட்டு மேலே எழும்பி, விழுந்துவிடும் என்று விஞ்ஞானம் மூலம் நிரூபித்தார். விஞ்ஞானம் இந்த சாதனையை மீண்டும் குறிப்பிடும் என்று நினைக்கின்றீர்களா? அதன் தொடர்ச்சி இப்பொழுதுள்ளதா என்ன? இப்பொழுது தெருக்களில் மணிக்கு நூற்றைம்பது மைல் வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனரே! ஆனால் அந்த பிரெஞ்சு விஞ்ஞானி, பந்து மணிக்கு முப்பது மைல் வேகத்தில் தரையில் உருளும்போது ஏற்பட்ட அமுக்கத்தினால் அது பூமியை விட்டு மேலே எழும்பிச் சென்று விண்வெளியில் விழுந்துவிடும் என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தார். அதற்கும் இப்பொழுதுள்ளவைகளுக்கும் எவ்வித தொடர்ச்சியுமில்லை. 42ஆனால் வேதத்திலுள்ள எந்த ஒரு வார்த்தையும் மற்றொரு வார்த்தைக்கு முரண்பாடாக அமையவேயில்லை. எந்த ஒரு தீர்க்கதரியும் மற்ற தீர்க்கதரிசிகளுக்கு என்றுமே முரண்பாடாக இருந்ததில்லை. அவை ஒவ்வொன்றும் பிழையற்றதாக அமைந்துள்ளன. ஒருவன் வந்து தீர்க்கதரிசனம் உரைத்தபொழுது, அந்த உண்மையான தீர்க்கதரிசி எழும்பி அவன், அந்த ஒருவன் கூறியதை, உரைத்தகூறும் பொழுது அது உறுதிப்படுத்தப்படுகிறது. பாருங்கள்? பாருங்கள்? எனவே வேதாகமம் உண்மையான விசுவாசிகள் அனைவருக்கும் தேவனுடைய வார்த்தையாக அமைந்துள்ளது. 43மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் ஆமோதம் தெரிவிக்கும் காரியங்களில் பிழையின்மை (accuracy) இருப்பது கிடையாது. அவ்வாறே விஞ்ஞானிகள் கூறுவதிலும் பிழையின்மை இருப்பதில்லை . சில நாட்களுக்கு முன்பு அவர்கள், நான்கு தூதர்கள் பூமியின் நான்கு முனைகளில் நிற்பதை யோவான் கண்டதாக வேதம் கூறியுள்ளதல்லவா? (ஆங்கில வேதாகமத்தில் 'Four Corners' - அதாவது நான்கு முனைகளில் - என்று எழுதப்பட்டுள்ளது. தமிழில் 'நான்கு திசைகளில்' என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வெளி. 7:1 தமிழாக்கியோன்). பூமி உருண்டை வடிவமாக இருப்பதால், அது சாத்தியமல்ல என்றனர். ஆனால் வேதாகமமோ 'நான்கு மூனைகள்' என்று தான் கூறியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு... மூன்று வாரங்கள் ஆகிவிட்டன, செய்தித்தாள்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தன. பூமி சதுர வடிவில் உள்ளது என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளதாக அதில் எழுதப்பட்டிருந்தது. எத்தனை பேர் அதைப் பார்த்தீர்கள்? உண்மையாக பார்த்தீர்களா? அதை நான் அப்படியே எழுதி வைத்திருக்கிறேன். யாராவது அதைக் குறிப்பிடுவதற்காக காத்திருக்கிறேன். 44என்றாவது ஒரு நாளில் அவர்கள் ஆயிரத்தறுநூறு கோடி 'லைட் இயர்' (Light-year) விண்வெளி காணவில்லை என்று கண்டுபிடிக்கப் போகின்றனர் ('லைட் இயர்' என்பது ஒளியை அளக்கும் தூரம். ஒரு வினாடிக்கு 1,85,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி, ஒரு ஆண்டில் செல்லும் தூரமே ஒரு 'லைட்இயர்' என்னப்படுகின்றது - தமிழாக்கியோன்). அவர்கள் வட்டம் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். ஒருநாளில் அவர்கள், நீங்கள் பரலோகம் செல்வதற்கு வேறெங்கோ பறந்து செல்ல அவசியமிராது என்றும், நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு, இதைக் காட்டிலும் வேகமான வேறொரு பரிமாணத்தை (dimension) அடைவீர்கள் என்று கண்டுபிடிக்கப் போகின்றனர். இந்த அறை முழுவதிலும் நிறம் வந்து கொண்டேயிருக்கின்றது. நீங்கள் அணிந்துள்ள மேல் சட்டையின் நிறம், நீங்கள் அணியும் ஆடைகள் அனைத்தும் நித்தியமாயுள்ளது. ஏனெனில் அவை பதிவு செய்யப்பட்டு, உலகம் முழுவதும் சுற்றி சுற்றி வருகின்றது. ஒவ்வொரு முறையும் நீங்கள் கண் இமைக்கும்போதும், அது பதிவு செய்யப்படுகின்றது. கவனியுங்கள், தொலைக்காட்சி (Television) அதை நிரூபிக்கின்றது. 45நீங்கள் பிறக்கும்போது, தேவன் ஒளி, ஒலிப்பதிவு ஒன்றை ஆரம்பிக்கின்றார். சிறிது காலம் அது அதிக சத்தமிடுவதில்லை... அந்த சிறு குழந்தை கணக்கொப்புவிக்கும் வரைக்கும். அதன் பின்பு சத்தம் தொடங்குகின்றது. அவைகளுக்கெல்லாம் அவன் கணக்கொப்புவிக்க வேண்டியவனாயிருக்கிறான். அவனுடைய வாழ்க்கை முடிவடைந்த பிறகு, அந்த ஒலிநாடா அல்லது இசைத்தட்டு வெளியே எடுக்கப்பட்டு, தேவனுடைய சேமிப்பு நிலையத்தில் வைக்கப்படுகின்றது. நியாயத்தீர்ப்பின்போது, நீங்கள் எவ்வாறு தப்ப முடியும்? அது உங்கள் முன்னால் போட்டுக் காண்பிக்கப்படும், நீங்கள் அசைத்த ஒவ்வொரு அசைவும், உங்கள் சிந்தனையில் எழுந்த ஒவ்வொரு நினைவும். உங்களால் அதைப் புரிந்து கொள்ளமுடிகிறதா? இப்பொழுது தேவன் எங்கே என்று காணமுடிகிறதா? 46அன்றொரு இரவு இங்கு நான் நின்று கொண்டிருந்தபோது, உயரமான, வழுக்கைத் தலையுள்ள, திடகாத்திரமுள்ள மனிதர் ஒருவர் மேடையின் மேல் வந்தார். அவர் பார்வைக்கு அழகாயிருந்தார். அவர் சென்றுவிட்டார். அவருடைய குடும்பத்தைக் குறித்து தேவன் அநேகக் காரியங்களை எடுத்துக்கூறி, அவர் என்ன செய்ய வேண்டுமென்றும் அறிவுரை கூறினார். அவர் மேடையை விட்டுச் சென்று அமர்ந்து கொண்டார். சில நிமிடங்களுக்குள் அவரைப் போன்ற வேறொருவர் மேடைக்கு வந்தார். அவர் தலை குனிந்திருந்தார். அதனால் அவரை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் மீண்டும், மேடையிலிருந்து சென்று அங்கு அமர்ந்த மனிதரைத் தேடத் தொடங்கினேன். மேடைக்கு வந்தவர் அவரல்ல. அது வேறு ஏதோ ஒன்றாகும். நான் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் என் பின்னால் இல்லை. நான் அந்த மனிதர் திரைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டிருக்கிறார் என்றேன். அவர் நமது சபைக்கு வரும் சகோதரன். அவர் உயரமாகவும், வழுக்கைக் கொண்டவராகவும் அழகாகவும் இருப்பார். அவர் தலை குனிந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். ஏனெனில் வயிற்று வலி காரணமாக அவர் மரிக்கும் தருவாயில் இருந்தார். அவருடைய மனைவி அவருக்குப் புதிய காலணிகள் வாங்கித் தர வேண்டுமென்று நினைத்திருந்தாள். அவரோ, “வேண்டாம், அதை அணிவதற்கு நான் உயிரோடிருக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார். அவர் மரித்துக் கொண்டிருந்தார். அவர் வேறொரு பரிமாணத்தில் அங்கு அமர்ந்திருந்தார்... அல்லேலூயா! தேவன் அங்கு வந்து, ”அதோ அவர் அங்கு அமர்ந்திருக்கிறார்'' என்று அவர் தலை குனிந்து ஜெபம் செய்து கொண்டிருப்பதைக் காண்பித்தார். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகின்றதா? 47இப்பொழுது கவனியுங்கள். வேதவாக்கியங்களில் எவ்விதப் பிழையும் கிடையாது. தேவனுடைய வார்த்தையாகிய இயேசு இருதயத்தின் சிந்தனைகளை அறிகிறார். தேவனுடைய வார்த்தையானது வல்லமையுள்ளதாயும் கருக்கானதாயும் உள்ளது. எபி: 4:12, “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும்... இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது பாருங்கள்? அது இருதயத்துக்குள் சென்று வெளிக் கொணர்ந்து, வகையறுக்கிறது. 'வகையறுத்தல்' (Discerm) என்றால் என்ன? 'தெரியப்படுத்தல்; வெளிப்படுத்துதல்', தேவனுடைய வார்த்தை அதைத்தான் செய்கிறது. நாம், ”கத்தோலிக்கர், பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர், கூடார ஜனங்கள் தேவனுடைய வார்த்தை'' என்கிறோம். அது தவறு. வார்த்தை என்பது வெளிப்பாடாகும்; தேவன் வார்த்தையில் வெளிப்படுதல். 48மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இவர்களிடையே தொடர்ச்சி காணப்படுவதில்லை. எயின்ஸ்டின் (Einstein) (அவர் தலை சிறந்த பௌதீக விஞ்ஞானி - தமிழாக்கியோன்) சரீரப் பிரகாரமாக இருந்ததைப் போல, ஆவிக்குரியவராக இருந்திருந்தால், நமக்கு சில காரியங்களை எடுத்துரைத்திருக்கலாம். அவர் ஒளியின் விதிகள், மற்றும் பிறவற்றையும் ஆராய்ந்தார். வானங்களிலுள்ள ஒரு மகத்தான ஸ்தலத்தைக் குறித்து அவர் ஆற்றின சொற்பொழிவை நான் கேட்டிருக்கிறேன். அந்த ஸ்தலத்தை தொடர்பு கொள்பவர்கள் பூமிகளை சிருஷ்டிக்க முடியும், என்ன வேண்டுமானாலும், செய்யலாம். அங்குள்ள சக்தி அளவற்றது என்று கூறினார். பாருங்கள்? அவர் அதை அறிந்திருந்தார். 49வானத்தில் பறந்து கொண்டிருக்கும் அந்த தட்டுகள் - “அவர்கள் 'பறக்கும் தட்டுகள்' என்று அழைக்கின்றனர். சரி, அதை பேசாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. அவர்கள் பறக்கும் தட்டில் வருகிறவர்கள் எவ்விதம் காணாமற்போய் விடுகின்றனர் என்பதைக் குறித்து கேள்விப்பட்டீர்களா?'' என்று கேட்கின்றனர். அவர்கள் சொல்வதைக் கேளாதீர்கள். அவர்கள் அங்குதான் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் நமது கண்களுக்குத் தென்படாமல் மறைந்து விடுகின்றனர். அப்படித்தான் எடுத்துக் கொள்ளப்படுதலும் இருக்கும். அவைகளில் ஒன்று கீழே இறங்கி வரும். பூமிக்குரிய இந்த சரீரம் வானத்துக்குரிய சரீரத்தை தரித்துக் கொள்ளும். அப்பொழுது தோல், மயிர், எலும்புகள்... அது ஒரு நொடிப் பொழுதில் மறு ரூபமாகும். அது விண்வெளியிலிருந்து கீழே இறங்கி வந்து அவர்களைக் கொண்டு செல்லும். அவையெல்லாம் (பறக்கும் தட்டுகள்) இப்பொழுதே வந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். 'பென்டகன்' வானத்தில் தோன்றும் அந்த மர்மமான ஒளியைக் குறித்து வியந்து கொண்டிருக்கிறது. ஜெபர்சன்வில்லில் வெளியிடும் செய்தித்தாள் ஒன்றில் இந்த மர்மமான ஒளியைக் குறித்து வெளியிட்டிருந்தனர். ''அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று அதில் எழுதியிருந்தது. சிறு பிள்ளைகளே, நான் கூறுவதைக் கேளுங்கள். வரப்போகும் ஒரு நாளில் அவை உங்களையும் கொண்டு செல்லும், பாருங்கள், பாருங்கள்; கவலைப்பட வேண்டாம். “சோதோமின் நாட்களில் நடந்தது போல...'' என்று இயேசு கூறினதை நினைவு கூருங்கள். 50தேவன் சில தூதர்களுடன் இறங்கி வந்தார். அப்பொழுது அவர்கள் விசாரணை நியாயத்தீர்ப்பை (Investigation Judgment) நடத்தினர். அவர், “பாவம் நிறைந்த கூச்சலை நான் கேட்டேன். அதுமிகவும் உரத்த சத்தமாயிருந்தது. அது உண்மையா இல்லையா என்று கண்டறிய நான் இறங்கி வந்தேன்” என்றார். அது சரிதான். அந்த பிரதானமானவர் ஆபிரகாமுடன் பின்தங்கி, அவருக்குப் பின்னால் இருந்த சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிய முடிந்தது. இப்பொழுது நீங்கள் சற்று கவனிப்பீர்களானால், இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. அது விசாரணை நியாயத்தீர்ப்பு, சற்று பின்பு, சபையானது அதன் ஸ்தானத்தில் நிலை நின்று, எல்லா வித்துக்களும் அதனிடம் கொண்டு சேர்க்கப்பட்ட பின்பு, அவர்கள் போய்விட்டிருப்பார்கள். அவர்களுக்கு நேர்ந்தது என்னவென்று மற்றவர்களுக்கு தெரியாது. அவர்களைத் தேடிக்கொண்டு ஒருவர் ஒருபுறமாக செல்வார். பாருங்கள்? ஒருவர் போதகர் வீட்டுக்குச் செல்வார். வேறொருவர் இங்கும் வேறொருவர் அங்கும் செல்வார்கள். அவர்கள் அங்கில்லை என்பதை அறிந்து கொள்வார்கள். இவர்களுக்கு முன்னடையாளமாயிருந்த ஏனோக்கு காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டார் (ஆதி 5:24). விசாரணைக்காக அவர்கள் இறங்கி வருகின்றனர். ஏனோக்கு மறுரூபமாதலின் தொடர்ச்சியாக, தற்போதைய இஸ்ரவேலருக்கு முன்னடையாளமாக, அவர்கள் பேழைக்குள் பிரவேசிக்கின்றனர். 51தேவனுடைய வார்த்தை மிகவும் பிழையற்றதாக பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இரண்டு பகுதிகளாக இருந்தபோதிலும், அவை ஒன்றாக முழுமை பெறுகின்றன. அது உண்மை. பழைய ஏற்பாடு ஒரு பாதி; புதிய ஏற்பாடு ஒரு பாதி. அவைகளை ஒன்றாக இணைக்கும் போது, இயேசு கிறிஸ்துவைக் குறித்த முழு வெளிப்பாட்டையும் நீங்கள் பெறுகின்றீர்கள். பழைய ஏற்பாட்டில் அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் பேசுகின்றனர். புதிய ஏற்பாட்டில் அவர் ஒரு மனிதனாகத் தோன்றுகிறார். பாருங்கள்? இரு பாதிகளும் ஒன்றாக இணைந்து முழுமை பெறுகின்றன. நாம் அதிக சமயம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. 52இப்பொழுது நினைவு கூருங்கள். புதிய ஏற்பாடில்லாமல் பழைய ஏற்பாடு முழுமை பெறாது; அவ்வாறே பழைய ஏற்பாடில்லாமல் புதிய ஏற்பாடு முழுமை பெறாது. அதனால் தான் அவை இரு பாதிகள் - ஒரு முழுமை என்றேன். தீர்க்கதரிசிகள், ''அவர் இங்கு தோன்றுவார்; அவர் இங்கு தோன்றுவார்; அவர் இங்கு தோன்றுவார். அவர்கள் இன்னின்னதை அவருக்குச் செய்வார்கள்; அவர்கள் இன்னின்னதை அவருக்குச் செய்வார்கள்“ என்று பழைய ஏற்பாட்டில் கூறினர். அவர்கள் முன்னுரைத்தது போலவே அவர் தோன்றினார். புதிய ஏற்பாட்டில், ''அவர் இங்கு வந்தார்; இங்கு வந்தார்; அவர்கள் அவருக்கு இதை செய்தார்கள்; அதை செய்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அதைக் குறித்து சில இரவுகளுக்கு முன்பு நான் பிரசங்கித்தேன். 53வேத வாக்கியங்களைப் படிக்க வேண்டுமானால், பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறினது போன்று, சத்திய வசனமாகிய தேவனுடைய வார்த்தையை நாம் நிதானமாய்ப் பகுத்து படிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்(2தீமோ. 2:15). தேவனுடைய வார்த்தையை உபயோகிக்கும்போது, நீங்கள் மூன்று காரியங்களை செய்யக் கூடாது. அடுத்த பத்து நிமிடங்களுக்கு நீங்கள் செய்யக் கூடாத மூன்று காரியங்களைக் குறித்து நாம் பார்ப்போம். நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ளவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், உங்களிடம் எழுதுகோல் இல்லாவிடில், இதை உங்கள் மனதில் பதித்துக் கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் செய்யக் கூடாது. நாம் இதுவரை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பேசி வந்திருக்கிறோம். இப்பொழுதே, நீங்கள் என்ன செய்யக்கூடாது என்று கூறப் போகிறேன். நீங்கள் தேவனுடைய வார்த்தையை தவறாக வியாக்கியானம் செய்யக் கூடாது. (misinterpret) நீங்கள், “இதுதான் இதன்அர்த்தம் என்று நம்புகிறேன்'' என்று கூறுகின்றீர்கள். அது என்ன கூறுகின்றதோ அதுதான் அதன் அர்த்தம். அதற்கு எந்த வியாக்கியானியும் தேவையில்லை. நீங்கள் வார்த்தையை தவறான இடத்தில் பொருத்தக் கூடாது (misplace), நீங்கள் வார்த்தையை இடம் பெயரச் செய்யக் கூடாது (dislocate). இவைகளில் ஏதாகிலும் ஒன்றை நீங்கள் செய்வீர்களானால், அது முழு வேதாகமத்தையும் குழப்பத்தின் ஆழத்தில் ஆழ்த்திவிடும். 54கவனியுங்கள், மனித ரூபத்தில் தேவனாகத் தோன்றின இயேசு கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் தவறாக வியாக்கியானம் செய்வீர்களானால், அவரை ஒரு தேவனுக்குப் பதிலாக மூன்று தெய்வங்களாக நீங்கள் செய்துவிடுவீர்கள். வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவை தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு தேவனை மூன்று தெய்வங்களாக்கிவிடுவீர்கள், தேவத்துவத்தில் அவரை இரண்டாவது ஆளாக செய்துவிடுவீர்கள். அப்படிச் செய்வதன் மூலம் வேதவாக்கியங்கள் அனைத்தையும் நீங்கள் குழப்பிவிடுகின்றீர்கள். அது உங்களை எங்கும் கொண்டு செல்லாது. எனவே அதை தவறாக வியாக்கியானம் செய்யக் கூடாது. அது ஒரு பிரத்தியேக் காரியத்தைக் குறிக்கின்றது என்று கூறுவதன் மூலம், அதற்கு ஒரு வியாக்கியானம் அளித்து, அது வேறொரு காலத்துக்குப் பொருந்துவதாக கூறி, அதை வேறொரு காலத்திற்கு பொருத்தினால் தவறான ஒரு வியாக்கியானத்தை அளித்துவிடுகின்றீர்கள். 55வேதத்தில் காணப்படும் இயேசு கிறிஸ்துவை யாராகிலும் தவறாக வியாக்கியானம் செய்து, அவர் தேவனல்ல என்று கூறி, அவரை இரண்டாவது ஆளாகப் பாவித்து, அவரை மூவரில் ஒரு தேவனாகக் கருதினால், அது வேதத்திலுள்ள எல்லா வார்த்தையையும் தலை கீழாக்கிவிடும். அது “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்'' (யாத். 20:3) என்னும் முதலாம் கற்பனையை மீறுகிறதாயிருக்கும். சரி அது கிறிஸ்துவ சமுதாயம் முழுவதையுமே அஞ்ஞான வழிபாட்டில் புகுத்தி, அவர்கள் மூன்று வெவ்வேறு தெய்வங்களை ஆராதிப்பவர்களாக செய்துவிடும். எத்தகைய வேதாகமத்தை அப்பொழுது நீங்கள் உடையவர்களாயிருப்பீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். யூதர்கள் நம்மைப் பார்த்து என்ன கூறுகிறார்களோ, அதுவாகவே நாம் ஆகிவிடுவோம். ”இந்த தெய்வங்களில் யார் உங்கள் தேவன்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். பாருங்கள்? எனவே நீங்கள் வேதாகமத்தை தவறாக வியாக்கியானம் செய்யக் கூடாது. ஏனெனில் இயேசுவே வேதத்தின் வியாக்கியானமாகத் திகழ்கிறார். ஒவ்வொரு காலத்திலும் அவருடைய சரீரத்தின் ஒரு பாகம் வெளிப்படுகின்றது. அது கையின் காலமாக இருக்குமானால் அது கையாக வெளிப்பட வேண்டும்; அது தலையின் காலமாக இருக்க முடியாது. அது சப்தத்தின் காலமாக இருக்குமானால், அது பாதத்தின் காலமாக இருக்க முடியாது. பாருங்கள்? இப்பொழுது நாம் கண்ணின் காலத்தில் வாழ்கிறோம். அடுத்தது அவர்தான்; அவர்தான் வர வேண்டும். பார்த்தல் - தீர்க்கதரிசியின் காலம். 56பாருங்கள், நாம் காலங்களின் வழியாக, அஸ்திபாரத்தில் தொடங்கினோம். முதலாம் சபையின் காலத்தில் முழு விதையும் நிலத்தினடியில் சென்றபோது, அஸ்திபாரம் போடப்பட்டது. அதன் பின்பு கால்களின் வழியாக வந்து, லூத்தர், வெஸ்லி இவர்களின் வழியாக வந்து, பெந்தெகொஸ்தேயினரை அடைந்தோம். அதுதான் நாவுகளும் உதடுகளும் பாருங்கள்? இப்பொழுது அது கண்ணுக்கு - மல்கியா 4-ல் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசிக்கு - வந்துள்ளது. இனிமேல் வருவதற்கு வேறொன்றுமில்லை. அவரே அதற்குள் நுழைய வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசியாக வர வேண்டியது. அடுத்தபடியாக வரவேண்டியது ஞானமாகும் (intelligence) நமக்கு சுயமாக ஞானம் கிடையாது. அது அவருடைய ஞானமே. நமக்கு சுயமாக கண்கள் கிடையாது. ஒரு மனிதன் எப்படி இவைகளையெல்லாம் முன்கூட்டியே காணமுடியும்? அவனால் முடியாது. அது தேவன் தாமே. பாருங்கள், அது ஒரு இடத்தை அடைந்துவிட்டது. அவர் ஆதி முதற்கொண்டே சரீரத்தை ஆளுகை செய்து வந்திருக்கிறார். பின்பு கிறிஸ்துவின் முழுமையான சரீரம், ஏவாள் எப்படி ஆதாமின் விலாவிலிருந்து எடுக்கப்பட்டாளோ, அப்படியே அவருடைய விலாவிலிருந்து எடுக்கப்பட்டு மணவாட்டியின் ரூபத்தில் வெளிப்படுகின்றது. 57ஆம், தேவன். இது முழு வேதாகமத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தி, முதலாம் கற்பனையை மீறும்படி செய்து, ஒரு தேவனை அஞ்ஞான மூன்று தெய்வங்களாகச் செய்துவிடும். வேதத்தின் முழு சித்திரத்தையுமே அது பாழாக்கிவிடும். எனவே நீங்கள் வேதத்தை தவறாக வியாக்கியானம் செய்யக் கூடாது. அது மிகவும் முக்கியமானது. வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்திற்கும் நீங்கள் ஒரே விதமான வியாக்கியானத்தை அளிக்கும் போது, அது அதனை சரியான இடத்தில் பொருத்துகின்றது. அதை தவறாகப் பொருத்தினால், அவரை ஒரு காலத்திற்கு தேவனாகவும், மறு காலத்திற்கு அவரை சரித்திரமாகவும் செய்துவிடுவீர்கள். எனவே வேத வாக்கியங்களை நீங்கள் தவறாகப் பொருத்தக் கூடாது. அவர் எல்லா காலத்திற்கும் தேவனாயிருக்கிறார். முற்காலத்தின் தேவன் இப்பொழுது சரித்திரமாக விளங்குகிறார் என்று நீங்கள் கூறுவீர்களானால், அவர் முற்காலத்தில் இருந்ததைப் போல் இன்றைக்கு இல்லை என்று அர்த்தமாகிறது. அப்படியானால் எபி. 13:8-ஐக் குறித்து நீங்கள் என்ன செய்வீர்கள்? பாருங்கள், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். இது என்ன செய்யுமென்றும், என்ன செய்ததென்றும் பார்த்தீர்களா? அது ஏற்கெனவே அதை செய்துவிட்டது. வேத வாக்கியங்களைத் தவறாகப் பொருத்துவது, அவரே அவருடைய வார்த்தையை மறுதலிக்கும்படி செய்கிறது. 58வேதவாக்கியங்களை இடம் பெயரச் செய்வதன் மூலம், நீங்கள் அவருடைய சரீரத்தை தவறாகப் பொருத்துகின்றீர்கள், தலைஇருக்க வேண்டிய இடத்தில் காலைப் பொருத்துவது போன்று வேறு விதமாகக் கூறினால்,மோசேயின் செய்தியை இயேசு பிரசங்கிப்பது போல் செய்துவிடுவீர்கள்; அல்லது லூத்தர் காலத்து செய்தியை வெஸ்லி பிரசங்கிப்பது போல் செய்துவிடுவீர்கள். இன்றைய நம்முடைய காலத்தில் பெந்தெகொஸ்தேயினரின் செய்தியைப் பிரசங்கிப்பது போல் செய்துவிடுவீர்கள். அது எத்தகைய குழப்பமாயிருக்கும் என்று பார்த்தீர்களா? பெந்தெகொஸ்தேயினர் அவர்களுடைய உண்மையான நிறத்தைக் காண்பித்துவிட்டனர். லூத்தரன்கள் ஏற்கனவே ஸ்தாபனத்துக்குள் சென்றுவிட்டனர். அங்கேயே அது மரித்துவிட்டது. காலப்போக்கில் அது அப்படியாகிவிட்டது. கவனியுங்கள், அது தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டவுடனே மரித்துவிட்டது. (சகோ. பிரான்ஹாம் தனது விரலினால் சொடுக்கு போடுகிறார் - ஆசி) அது உண்மையா இல்லையாவென்று பாருங்கள். சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். அது ஸ்தாபித்துக் கொண்ட ஒவ்வொருமுறையும் அங்கேயே மரித்துவிட்டது. அதனால் இனி ஒரு உபயோகமுமில்லை. அது இப்பிரபஞ்சத்தின் தேவனைஆராதிக்கும் ஒன்றாக மாறிவிடுகின்றது. அது ஸ்தாபனத்துக்குள்ளும் பொய்த்தோற்றத்துக்குள்ளும் சென்றுவிடுகிறது. ஒரு கூட்டம் 'ரிக்கிகள்' அதனுள் புகுந்து அவர்களுடைய சொந்தக் கருத்துக்களை உள்ளே நுழைத்துவிட்டனர். அப்பொழுது என்ன நிகழ்ந்தது? அது ஒரு குழப்பமாகிவிட்டது. அது இப்பிரபஞ்சத்தின் தேவனில் முடிவடைந்து, சமாதானத்தைக் கொண்டுவரும் ஒரு பெரிய உலகத் தலைவன் தங்களுக்கு இருக்கிறார் என்று அவர்கள் எண்ணி, சாத்தானையே சிங்காசனத்தில் உட்கார வைப்பார்கள். 59அன்று நான் உங்களிடம் கூறினதை மீண்டும் கூறுகிறேன். நாகரிகம் கூட தேவனுக்கு முற்றிலும் முரண்பாடாய் அமைந்துள்ளது. நாகரிகம் தேவனுடன் முரண்பாடு கொண்டது. கல்வி அவரிடமிருந்து கோடிக்கணக்கான மைல் தூரத்தில் உள்ளது. அவ்வாறே விஞ்ஞானமும் கோடிக்கணக்கான மைல் தொலையில் உள்ளது. விஞ்ஞானமும் கல்வியும் தங்கள் வேததத்துவ பள்ளிகளின் மூலமாகவும், பள்ளிகளின் மூலமாகவும், விஞ்ஞான அறைகளின் மூலமாகவும் தேவன் இல்லையென நிரூபிக்க முற்படுகின்றன. அவர்களுக்கு ஒரு குலுக்கல் ஏற்பட்டுள்ளது. அன்றொரு இரவு நான் கண்ட தரிசனத்தைக் குறித்தென்ன? அந்த தரிசனத்தில் ஒரு மனிதன் அந்த சாதனத்தை பரிசோதனை குழல்களில் ஊற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளைப் பார்த்து கூச்சலிட்டான். அவர்களோ திரும்பி, மேலே நோக்கிப் பார்த்து விட்டு, எவ்வித கவலையுமின்றி தங்கள் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். இன்னும் ஒரு சவாரி இருக்கும். 60கவனியுங்கள், நீங்கள் செய்யக்கூடாத மூன்று செயல்கள்... இயேசு நோவாவின் செய்தியைப் பிரசங்கித்தவராய் வரவில்லை. அவர் மோசேயின் செய்தியைப் பிரசங்கித்தவராய் வரவில்லை. அவ்வாறே மோசேயும் மற்றவர்களின் செய்தியைப் பிரசங்கிக்கவில்லை. எனவே வேத வாக்கியங்களை இடம் பெயரச் செய்ய வேண்டாம். அது அந்தந்த காலத்திற்குரியதாய் அமைந்திருக்க வேண்டும். இவைகளை வேறு காலத்திற்கு நீங்கள் பொருத்தக் கூடாது. அந்த மகத்தான மனிதன் ஜான்வெஸ்லி தோன்றின போது... லூத்தர் 'நீதிமானாக்கப்படுதல்' என்னும் செய்தியைப் பிரசங்கித்தபோது... லூத்தர் ஒரு பெரிய மனிதன், அவர் சபையை இருளினின்று வெளியே அழைத்து, 'விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்' என்பதை அவர்களுக்களித்தார். அவர் அதை அவர்களுக்கு செய்த போது அவர்களோ ஸ்தாபனம் ஒன்றை அதன்மேல் கட்டிக்கொண்டனர். அது மரித்துவிட்டது. ஜீவனானது கோதுமை செடியின் தண்டின் வழியாகப் பயணம் செய்து, வெஸ்லியின் காலத்தில் பட்டுக் குஞ்சத்தை (மகரந்தத்தை) அடைந்தது. லூத்தரிலிருந்து மற்ற இலைகளும் தோன்றின - ஸ்விங்லி, கால்வின், இன்னும்அந்த மகத்தான சீர்திருத்தக் காலத்தில் தோன்றின மற்றவர் - அவைகளும் அதனுடன் செத்துவிட்டன. 61பின்பு வெஸ்லி தோன்றினார். வேறொரு காலம் மகரந்தமாக மலர்ந்தது. வெஸ்லி, ஆட்டன்பரி, வெஸ்லியின் சகோதரன் யோவான் இன்னும் ஏனைய மகத்தானோர் கொண்டு வந்த செய்தி நாடு பூராவும் பரம்பினது. அவர்கள் ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டனர். அதுவும் செத்துவிட்டது. பின்பு கோதுமை மணி போலவே வேறொன்று தோன்றியது. அதைப் பரிசோதித்துப் பார்த்த போது, அது வெறும் பதராயிருந்தது - பெந்தெகொஸ்தேயினர். ஆனால் இவைகளுக்கெல்லாம் பிறகு ஒரு சிறிய மொட்டு தோன்றியது. நீங்கள் கவனிப்பீர்களானானால், சாதாரணமாக... லூத்தர் தோன்றி மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து, லூத்தரன் சபை தன்னை ஸ்தாபித்துக் கொண்டது என்று நினைக்கிறேன். அவ்விதமே வெஸ்லி தோன்றி சிறிது காலத்திலேயே அந்த சபையும் தன்னை ஸ்தாபித்துக் கொண்டது. 62டூசானில் மெதோடிஸ்டு சபை தோன்றி திட்டம் அமைத்துக் கொண்டது பற்றி நாம் நன்கு அறிவோம். அவர்கள் அமெரிக்காவுக்கு வந்த போது, அதை இங்கு கொண்டு வருவதற்கென இங்கிலாந்தில் ஒரு சாசனத்தை அமுல்படுத்த வேண்டியிருந்தது என்று கூறிக் கொண்டனர். அது எவ்வளவு தத்ரூபமாக செயலில் கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேரிலே கண்டிருக்கிறேன். ஆனால் அந்த சபையும் மரித்துவிட்டது. பின்பு பெந்தெகொஸ்தேயினர் தோன்றினர். பண்டைய காலத்தில் கூச்சலிட்டவர்கள் போலவே இவர்களும் அன்னிய பாஷை பேசும் வரத்தைப் பெற்று, அன்னிய பாஷையில் பேசத் தொடங்கினர். அன்னிய பாஷை பேசுவதை பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமென்று அவர்கள் கூறினர். அவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். ஒருவர் இதைச் செய்யப் போவதாகவும், மற்றவர் அதைச் செய்யப் போவதாகவும் கூறிக் கொண்டனர். அவர்களிடையே பிரச்சினையின் மேல் பிரச்சினை எழுந்தது. அது என்ன செய்தது? அந்த இலைகள் ஒவ்வொன்றும் தண்டிலிருந்ததைப் போலவும், பட்டுக் குஞ்சத்திலிருந்ததைப் போலவும் விரிந்தன. அவர்களிடையே ஒருத்துவம், இரண்டு ஆள்தத்துவம், திரித்துவம், தேவ சபை போன்றவை விரிந்து பிரிந்து தோன்றின. ஆனால் இப்பொழுது இயற்கையின் படி - இயற்கையே பிழையற்ற உதாரணமாய் அமைந்துள்ளது. அது போதிப்பதை நாம் தள்ளிவிட முடியாது. 63கென்டக்கியிலுள்ள என் நண்பர் ஒருவரின் குடும்பத்தில், அண்மையில், ஒரு குழந்தை பிறந்தது. தாயார் எழுந்திருந்து, வேட்டைக்காக அங்கு சென்றிருந்த எங்களுக்கு உணவு தயார் செய்வதற்கென, அவர்களுடைய சகோதரிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் குழந்தை அழத்தொடங்கினது. நான் அவர்களிடம் அப்பொழுது பேசிக் கொண்டிருந்தேன். குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்ட மாத்திரத்தில் தாயார் வருத்தமுற்று, ஓடிப்போய் குழந்தையை எடுத்து, அவனுக்குப் பாலூட்டத் தொடங்கினார்கள். நான் அவர்களிடம், “அது இயற்கை என்றேன். பாருங்கள். இப்பொழுது உங்களால் குழந்தைக்குப் பால் தேவைப்பட்டால், அது அழுவதைத் தவிர வேறு சிறந்த முறையை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை”. நீங்கள் ஒழுக்கவிதி புஸ்தகத்தை அதன் கையில் கொடுத்துவிட்டு அங்கு அமர்ந்து கொண்டு, “மகனே, உனக்கு வேதத்துவம் போதிக்கப் போகின்றேன். மற்ற குழந்தைகளைப் போல நீ அழவேண்டாம்; உனக்கு பால் வேண்டுமென்று தோன்றினால், இந்த மணியை அடித்தால் போதும்” என்று அவனிடம் கூறலாம். ஆனால் அதனால் யாதொரு பயனுமில்லை. இல்லவே இல்லை. 64நீங்கள் இயற்கையை கவனித்து வருவீர்களானால்... ஒவ்வொரு காலமும் கோதுமை செடியுடன் எவ்வாறு ஒத்துப் போனது என்று நாம் பார்த்தோம். இப்பொழுது நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். பதர் தன்னை வெளியே இழுத்துக் கொண்டது. பதினைந்து ஆண்டு காலமாக - ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது - செய்தியானது ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாடு பரம்பிக் கொண்டே செல்கின்றது. இன்று காலை, அமெரிக்கா தேசம் முழுவதுமே தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளது (பாருங்கள்?) இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அது ஒரு ஸ்தாபனமாகவில்லை. அது தன்னை ஸ்தாபித்துக் கொள்ளமுடியாது. இதைப் போன்ற ஒன்று இதற்கு முன்பும் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. இன்றுள்ள செய்தியின் காரியம் என்னவெனில், இதை இருதயத்தில் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் முதிர்வடைவதற்காக, அவர்கள் குமாரனின் (Son) சமுகத்தில் வைக்கப்பட வேண்டும். பாருங்கள்? நீங்கள் செய்தியை ஏற்றுக் கொள்கிறீர்கள். பின்பு குமாரன் தாமே உங்களை உலர வைத்து, உங்களில் காணப்படும் பச்சை நிறத்தன்மை (Greenness) அனைத்தையும் அகற்றி (பாருங்கள்?) உங்களை முதிர்வடைந்த கிறிஸ்தவர்களாகச் செய்கிறார். நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா? தமது சபையை ஏற்றுக் கொள்ள தேவன் சீக்கிரமாய் வருகிறார். அப்பொழுது அவர் ஏற்றுக் கொள்ளத் தக்க விதமாய், நாம் அத்தகைய கிறிஸ்தவர்களாய் இருத்தல் அவசியம் - கோதுமையானது முதிர்வடைய வேண்டும். அது சரி. 65நாம் செய்யக்கூடாத மூன்று காரியங்கள். அதை நாம் தவறாக வியாக்கியானம் செய்யவோ, தவறாக கையாளவோ, அல்லது இடம்பெயரச் செய்யவோ கூடாது. தேவன் எந்த அர்த்தத்தில் கூறினாரோ, அதிலே அது வைக்கப்பட வேண்டும். உலகிற்கு வேதாகமம் ஒரு மர்மப் புஸ்தகமாக இருக்கின்றது. அது ஒரு மர்மப் புஸ்தகமாக இருக்கின்றது. அது ஒரு மர்மப் புஸ்தகமென்று ஜனங்கள் கருதுகின்றனர். ஒரு சமயம் நான் இந்த நகரத்தில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்று, கிறிஸ்தவ சமுதாயத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னார், ''நான் வெளிப்படுத்தின விசேஷத்தை ஒரு நாள் இரவில் வாசிக்க முயன்றேன்''. மேலும் கூறினார், ''யோவான் நன்றாக வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு தூங்கின பொழுது இரவிலே கண்ட சொப்பனம்'' என்றார். பாருங்கள் வேதாகமம் ஒரு மர்மப் புஸ்தகமாக இருக்கிறது. 66ஆனால் உண்மையான விசுவாசிக்கோ, நாம் ஜீவிக்கின்ற காலத்திலே வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வெளிப்பாடாய் இருக்கிறது. அவர், ''என் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது“ என்றார் (யோவான் 6:63). மேலும், ”தேவனுடைய வார்த்தையே விதைக்கிறவன் விதைக்கும் விதை“ என்றார் அவர். அது உண்மையென்று நாமறிவோம். அது வார்த்தை வடிவிலுள்ள தேவனாகும் அவர் மாத்திரமே அதை வியாக்கியானம் செய்ய முடியும். தேவனுடைய சிந்தையை வியாக்கியானம் செய்வதற்கு மனித சிந்தையால் முடியாது. முடிவற்ற (infinite) சிந்தையை, முடிவுள்ள (finite) சிந்தை எவ்வாறு வியாக்கியானம் செய்ய முடியும்? நம் ஒருவரிலொருவர் காணப்படும் சிந்தையையே நாம் வியாக்கியானம் செய்ய முடிவதில்லையே! கவனியுங்கள், அவர் ஒருவர் மாத்திரமே அதை வியாக்கியானம் செய்யமுடியும். அவர் யாருக்கு அதை வியாக்கியானப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ, அவருக்கு மாத்திரமே அதை வியாக்கியானப்படுத்துகிறார், ''பூர்வ காலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் இவ்வுலகில் தோன்றின மானிடப் பிறவிகள் அனைவருக்கும் அவர் திருவுளம் பற்றினார்“ என்று கூறப்படவில்லை. தேவன் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் தமது தீர்க்கதரிசிகளுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். பாருங்கள்? 67கவனியுங்கள், யாருக்கு தம்மை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ... கல்வியறிவு பெற்றுள்ள வேதத்துவ பண்டிதன் காணக்கூடாதவாறு அவர் தம்மை வேத வாக்கியங்களில் மறைத்துக் கொள்கிறார். ஓ, என்னே அவர் வேத வாக்கியங்களில் அமர்ந்து கொண்டே தம்மை மறைத்துக் கொள்வாரானால், நீங்கள் வாழ்நாள் முழுவதும் அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தாலும் அவரைக் கண்டுபிடிக்க இயலாது. அவர் அவ்விதம் அமர்ந்திருந்து, தம்மை மறைத்துக் கொள்ள முடியும். தயவுசெய்து இது உங்கள் இருதயங்களில் பதியட்டும். வேததத்துவ பண்டிதரோ அல்லது வேத பள்ளிகளோ காணக் கூடாதபடிக்கு, வார்த்தையிலுள்ள தேவன் தம்மை வார்த்தைக்குள் மறைத்துக் கொள்ள முடியும் ஆயினும் அவர் அங்கேதான் இருக்கிறார். “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் கூறுவது சரியா?'' என்று கேட்கலாம். பரிசேயர், சதுசேயர் குறித்து என்ன? மற்ற காலங்களில் என்ன சம்பவித்தது. அவ்விதம் அவர் செய்திருக்கிறார். நிச்சயமாக! ஒவ்வொரு காலத்திலும் அவர் அவ்வாறே செய்து கொண்டு வருகிறார். வேண்டுமானால் நாம் பரிசோதனை செய்து பார்க்கலாம். நோவாவின் காலத்தை நாம் சிந்தித்துப் பார்ப்போம். அது கல்வியறிவு நிறைந்த காலமாகும். அக்காலத்தில் எவ்வாறு அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையில் மறைத்துக் கொண்டார்! மோசேயின் காலத்திலும் அவர் தம்மை மறைத்துக் கொள்ளவில்லையா? எலியாவின் காலத்தில் அவர் எப்படி தம்மை மறைத்துக் கொண்டார். இயேசுவின் காலத்திலும் அவர் தம்மை மறைத்துக் கொள்ளவில்லையா?, ''அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை'' (யோவான் 1:10-11). பார்த்தீர்களா? 68இவ்வுலகிலுள்ள புத்திகூர்மையுள்ள மனிதர்களிடமிருந்து அவர் தம்மை மறைத்துக் கொள்கிறார். ''இவர் டாக்டர், பரிசுத்த பிதா, இன்னார் இன்னார் என்று நீங்கள் கூறலாம். அவர் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் தம்மை அவரிடமிருந்து மறைத்துக் கொண்டு, கற்றுக் கொள்ள விரும்பும் பாலகர்களுக்கு அதை வெளிப்படுத்துகிறார் (பாருங்கள்?) - தேவனுடைய பாலகர்கள், முன்குறிக்கப்பட்ட வித்துக்கள். யோசித்துப் பாருங்கள், மகத்தான தேவன் தமது சொந்த வார்த்தையிலே அமர்ந்து கொண்டு, இக்காலத்திலுள்ள சாமர்த்தியமுள்ள, கல்வியறிவு படைத்த மனிதர்களைக் குருடாக்குகிறார். அவர்கள் அதைக் காண முடிவதில்லை. ஏதோ மூட நம்பிக்கை கொண்ட ஒரு கூட்டம் என்று அவர்கள் கருதுகின்றனர். அவர் அங்கு நின்றுகொண்டு பெந்தெகோஸ்தேயினருக்கும், பாப்டிஸ்டுகளுக்கும், மெதோடிஸ்டுகளுக்கும், பிரஸ்பிடேரியன்களுக்கும் தம்மை மறைத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். அதே சமயத்தில் அவர் தம்மை பகிரங்கமாக வெளிப்படுத்தி, எல்லா விதமான அற்புதங்களையும் செய்து, அவை செய்தித் தாள்களிலும் கூட வெளியிடப்பட்டன. இருப்பினும், அவர்களால் அதை காண முடிவதில்லை. ஓ, நம்முடைய தேவன் எவ்வளவு பெரியவர் தமக்குச் சித்தமானவர்களுக்கு மாத்திரமே அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார். நீங்கள், “ஓ, அவர் சகோ. ஜோன்ஸ் அல்லது சகோதரன் இன்னார், இன்னார். அவர் பெரியவர். அவரால் அதை காண முடியும்'' எனலாம். ஓ, இல்லை அவர் தமக்குச் சித்தமானவர்களுக்கே அதை வெளிப்படுத்துகின்றார். நீங்கள், ''என் மனைவி கிறிஸ்தவள்; ஆனாலும் அவள் அதை அங்கீகரிப்பதில்லையே'' எனலாம். அவர் தமக்குச் சித்தமானவர்களுக்கே தம்மை வெளிப்படுத்துகின்றார். பாருங்கள்? ''ஓ, என் போதகர் மிகவும் பெரியவர்'' இருக்கலாம். ஆயினும் அவர் தமக்குச் சித்தமானவர்களுக்கே தம்மை வெளிப்படுத்துகின்றார். வெளிப்படுத்தப்பட்டவைகளுடன் தற்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பவைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுது புரிந்து கொள்வீர்கள். 69அது அதை தேவனுடைய புஸ்தகமாகச் செய்கிறது என்றும், அது மனிதனுடைய புஸ்தகமல்ல என்றும் நாம் காண்கிறோம். அது மனிதனால் ஏற்பட்டிருக்குமானால்... அது எப்படி தன்னை தெளிவாய் உணர்த்துகிறது என்று பாருங்கள். அதை எழுதின மனிதர்களின் பாவத்தையும் கூட அது வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. வேதாகம காலத்தில் வாழ்ந்த ஆபிரகாமை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவன் விசுவாசிகளுக்கெல்லாம் தகப்பன் என்று அழைக்கப்படுகின்றான். அப்படியிருக்க அவனுடைய கோழைத் தனத்தைக் குறித்து அவன் இப்புஸ்தகத்தில் எழுதியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? அவனுடைய மனைவியை அவன் தன்னுடைய சகோதரி என்று ராஜாவிடம் பொய் சொன்னான் என்று எழுதியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? அவன் செய்த கோழைத்தமான காரியங்கள் அனைத்தையும் இதில் எழுதியிருப்பானா என்ன? நிச்சயமாக அவன் எழுதியிருக்க மாட்டான். யாக்கோபு ஏமாற்றினதைக் குறித்தென்ன? யாக்கோபு எத்தனாயிருந்தான். அவனுடைய பெயரினால் இஸ்ரவேலர்' என்று ஒரு ஜாதியே அழைக்கப்படும் போது, ஒரு எபிரேயன் அவனுடைய எபிரேய சகோதரனின் - அதுவும் ஜாதிகளின் தகப்பனாயிருக்கிறவனின் - வஞ்சகத் தனத்தை எழுதிவைப்பானா என்ன? அந்த யாக்கோபிலிருந்து கோத்திரப் பிதாக்கள் தோன்றினர். கோத்திரப் பிதாக்களிலிருந்து கோத்திரங்கள் தோன்றின. அதற்கு அடிப்படை கல்லாயிருந்த அந்த மனிதனை எத்தன் என்று வேதம் வெளிப்படையாய் எடுத்துரைக்கின்றது. அது சரியா? ஒரு மனிதன் அப்படி எழுதியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா. 70இவ்வுலகிலேயே மிகவும் சிறந்த அரசனாக கருதப்பட்ட தாவீது விபச்சாரம் செய்தான் என்று ஒரு மனிதன் எழுதியிருக்க முடியுமா? இந்த யூதர்கள், தங்கள் பெரு மகனான தாவீது விபச்சாரம் செய்தான் என்று அவனைக் குறித்து அவதூறாக எழுதியிருக்க முடியுமா? ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு பொய்யும் சொல்லவில்லை என்று எழுதப்பட்டவை நம்மிடையே உள்ளன. அதை நாம் சரித்திரம் என்று அழைக்கிறோம். ஆனால் இந்த மனிதனையோ - தாவீதை வேதம் விபச்சாரக்காரன் என்று அழைக்கிறது. அவன் இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தான்... இயேசு - அந்த தலைக்கல் - அவனுடைய சந்ததியில் தாவீதின் குமாரனாகத் தோன்றினார். மாமிசத்தின்படி அவருடைய முற்பிதாவாக இருந்த தாவீது ஒரு விபச்சாரக்காரன் யூதர்கள் அத்தகைய புஸ்தகத்தை ஒருக்காலும் எழுதியிருக்க முடியாது. ஒரு மனிதன் தன்னைக் குறித்தே இப்படி எழுதிக்கொள்ள முடியுமா என்ன? முடியவே முடியாது. 71பெருமை கொண்ட அந்த இஸ்ரவேல் தேசம் (அவர்கள் எவ்வளவு பெருமை கொண்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்) - பெருமை கொண்ட அந்த இஸ்ரவேல் தேசம் அவர்களுடைய விக்கிரகாராதனையைக் குறித்தும், தேவனுக்கு விரோதமாக அவர்கள் கலகமுண்டாக்கினதைக் குறித்தும், அவர்கள் செய்த அசுத்தமான காரியங்களைக் குறித்தும் எப்படி ஒரு புஸ்தகத்தில் எழுதி வைத்திருக்க முடியும்? அவர்கள் நிச்சயமாக அதை மறைத்து வைத்திருப்பார்களே அவர்கள் புரிந்த நற்செயல்களை மாத்திரம் அவர்கள் காண்பித்திருப்பார்கள். ஆனால் இந்த வேதாகமமோ ஜனங்கள் புரிந்த நல்லவைகளையும் தீயவைகளையும் எடுத்துரைக்கின்றது. யூதர்கள் தங்களுடைய அசுத்தம், விக்கிரகாராதனை, தோல்விகள் போன்றவை அடங்கியுள்ள புஸ்தகம் ஒன்றை எழுதியிருக்க மாட்டார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அதை எழுதவில்லை. இல்லவே இல்லை. அப்படியானால் யார் அதை எழுதினது. எபிரேயர் 1:1ல் வேதாகமம், “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் என்றுரைக்கிறது. தீர்க்கதரிசிகள் அதை எழுதவில்லை. மரித்துப் போகக் கூடிய மானிடர்கள் அதை எழுதவில்லை. தேவன் தாமே அதை எழுதினார் - பூர்வ காலங்களிலிருந்த தீர்க்கதரிசிகள் அல்ல ஆனால் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்” தாம் அதன் ஆக்கியோன். இங்கு ஒரு வேத வாக்கியத்தை எழுதி வைத்திருக்கிறேன். அது எதை குறிப்பிடுகிறது என்று மறந்துவிட்டேன். இப்பொழுதெல்லாம் பாராமல் என்னால் கூற முடியவில்லை. இவ்வேத வாக்கியங்களைப் பாராமலே நான் குறிப்பிடுவது வழக்கம். அது என்னவென்று ஒரு நிமிடம் வேதத்தில் பார்த்துவிடுகிறேன். என்னை மன்னிக்கவும். அது, 2தீமோத்தேயு: 3:16. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வேன் என்று நினைத்தேன்; நான் வருந்துகிறேன். ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு அது என்னவென்று பார்த்துவிடுகிறேன். 72''பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இப்பொழுது 2 தீமோத்தேயு 3:16. அது என்ன கூறுகின்றதென்று பார்ப்போம். “வேத வாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது'' (தீர்க்கதரிசிகளினாலா? அல்ல, தேவ ஆவியினால்) தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது“ தீமோ: 3:16-17 சரி, எல்லா வேத வாக்கியங்களும் தேவ ஆவியால் எழுதப்பட்டுள்ளன. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது, வானமும் பூமியும் ஒழிந்துபோம்; ஆனால் அவருடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்று குறிப்பிட்டார். மேலும், எல்லா வேத வாக்கியங்களும் நிறைவேற வேண்டும் என்றும் அவர் கூறினார். எனவே இப்புஸ்தகம் மனிதர் எழுதின புஸ்தகமல்ல, அது தேவன் எழுதியவைகளைக் கொண்டது. 73தேவன் முன் குறித்தலின் மூலமாகவே தமது சபையையும், இடத்தையும், தீர்க்கதரிசிகளையும் தெரிந்து கொண்டார் என்று நாமறிவோம். அவர் முன்னறிந்து தமது தீர்க்கதரிசியை முன்குறித்தார். அந்த காலம் வந்தபோது, அந்த தீர்க்கதரிசியும் அந்த காலத்தில் தோன்றும்படி செய்து, அவனை தேவ ஆவியினால் ஊக்குவித்து, அவன் மூலமாக வேதத்தை எழுதினார். தேவன் தீர்க்கதரிசியை உபயோகித்து தான் வேதாகமத்தை எழுதினார். அதுதான் அவர் கையாண்ட முறை. எனவே இது மனிதனின் வார்த்தையாக இராமல், தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. 74தேவன் ஒரு ஆள். அவரால் பேசமுடியும். அவரால் எழுதவும் முடியும். ஆனால் வேதாகமத்தை எழுதுவதற்கு அவர் அம்முறையைக் கையாளவில்லை. தீர்க்கதரிசிகளை உபயோகித்து அதை எழுத வேண்டுமெனும் அவசியம் அவருக்கு இருக்கவில்லை. எனினும் அம்முறையைக் கையாளவே அவர் சித்தம் கொண்டார். ''தேவன் தமது விரலினால் பத்து கட்டளைகளை எழுதினாரே. அவர் விரும்பியிருந்தால் அவரே வேதாகமத்தை எழுதியிருக்கலாமே'' என்று நீங்கள் கேட்கலாம். பாருங்கள்? ஆனால் தீர்க்கதரிசிகளின் மூலம் அதை எழுதவே அவர் சித்தம் கொண்டார். அவர் தமது தன்மைகளை, வார்த்தைகளை, அவர்கள் மூலம் வெளிப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் தமது பாகமாக்கிக் கொண்டார் (பாருங்கள்?) அவர் விரும்பியிருந்தால் தமது விரலால் அதை எழுதியிருக்கலாம். தமது விரலினால் அவர் பாபிலோனின் சுவர்களின் மேல், ''நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்'' (தானி. 5:27) என்று எழுதினார். அவர் தமது சொந்த விரனால் அதை எழுதினார். 75தேவனால் பேசமுடியும். நீங்கள் அதை நம்புகின்றீர்களா? அவர் மலையின் மேல், முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலிருந்து கொண்டு, மோசேயுடன் பேசினார். நீங்கள் அதை நம்புகின்றீர்களா? ஆம், ஐயா. அவர் புறாவின் ரூபத்தில் யோவான் ஸ்நானனுடன் பேசினார். நீங்கள் அதை நம்புகின்றீர்களா? ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குள் வாசமாயிருக்க நான் பிரியமாயிருக்கிறேன்'' என்றார் அவர். பேதுரு, யாக்கோபு, யோவான் இவர்களின் முன்னிலையில், அவர் மறுரூப மலையின்மேல் இயேசுவுடன் பேசினார். அவரால் பேசமுடியும். அவர் ஊமை அல்ல - தேவனால் பேச முடியும். எனவே மறுரூப மலையில் அவர் இயேசுவோடு பேசினார். அது மட்டுமன்றி அவர் இயேசுவோடு பல்லாயிரக்கணக்கானவர்கள் இருந்தபோது பேசினார். அப்பொழுது ஜனங்கள் “இடி முழக்கமுண்டாயிற்று என்றனர் (யோவான் 12:29). அது இடி முழக்கமாயிராமல், தேவன் இயேசுவுடன் பேசினதாயிருந்தது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷங்கள் அனைத்துமே பெரும்பாலும் இயேசு பேசினவையே. அவர் தேவன். தேவனால் பேசமுடியும். 76ஒருநாள் அவருடைய விரலினால் அவர் தரையில் எழுதினார். அவர் பேசினார்; அவர் பிரசங்கித்தார்; அவர் தமது சொந்த உதடுகளினால் தீர்க்கதரிசனம் உரைத்தார் - ஆம், அவர் மாமிசமாகி, நமது மத்தியில் வாசம் பண்ணினபோது, அவரால் எழுதவும் பேசவும் முடியுமானால், என்ன செய்ய வேண்டுமென்று அவர் மற்றவரிடம் கூற முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். அவர் மனித குரலினால் அவர்களுடன் பேசமுடியும். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவரால் எழுதிக் காண்பிக்க முடியும். அவர் அவ்விதம் செய்துள்ளார். எனவே, பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகளின் மூலமாய் தேவன் திருவுளம்பற்றினார். எழுதி வைத்திருப்பவைகளின் ஒரு எழுத்தின் உறுப்புங்கூட நிறைவேறாமல் போவதில்லை என்று அவர் கூறினார் (மத். 5:18). பின்பு அது வெளிப்பட்டது. அது வெளிப்பட்டதனால், அது நிறைவேறினது. இல்லையெனில் அது நிறைவேறியிருக்காது. வார்த்தையே மாமிசமாக வெளிப்பட்டது. ஆங்கிலத்தில் 'ஹாட்' (Jot) என்பது 'ஒரு சிறு வார்த்தை' என அர்த்தங்கொள்ளும், 'டிட்டில்' (Tittle) என்பதற்கு 'ஒரு சிறு குறி' என்று அர்த்தம். எனவே தேவனுடைய வார்த்தையிலுள்ள ஒரு நிறுத்தக்குறியும் (Punctuation), ஒரு வார்த்தையும், எதுவுமே நிறைவேறாமல் போவதில்லை. அது நிறைவேறாமல் இருக்க முடியாது. ஏனெனில் அது தேவனாயுள்ளது. தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டார். இது எழுத்து வடிவிலுள்ள தேவனாயிருந்து, தீர்க்கதரிசிகளின் வடிவில் மாமிசத்தில் வெளிப்பட்டது. அதனால்தான் இயேசு, ''உங்களிடம் தேவ வார்த்தையைப் பேசினவர்களை நீங்கள் தேவர்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் தேவர்களே'' என்றார் (யோவான் 10:34-35). இந்த தீர்க்கதரிசிகள் தேவ ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டபோது, தேவனுடைய வார்த்தையை எவ்வித பிழையுமின்றி அப்படியே அளித்தனர். அப்பொழுது அவர்கள் தேவர்களாயிருந்தனர். தேவனுடைய வார்த்தை அவர்கள் மூலமாய் பேசப்பட்டது. 77ஆக்கியோன் (Author) அவர்களை அனுமதித்த அளவிற்கு தான் அவர்கள் அதை வியாக்கியானம் (interpret) செய்தனர். அதை நீங்கள் அறிய விரும்பினால், அது 2பேதுரு: 1:20,21 வசனங்களில் காணப்படுகின்றது. தனிப்பட்ட வியாக்கியானி எவரும் கிடையாது. அவரே அவருடைய சொந்த வியாக்கியானத்தையளிக்கிறார். தேவனே பேசி, அதை அவரே வியாக்கியானம் செய்து, அவருக்கு சித்தமானவர்களுக்கு அதை வெளிப்படுத்தி, மற்றவர்க்கு அதை மறைத்துவிடுகிறார். அவர் சித்தம் கொண்டால் மாத்திரமே, அதை யாருக்காவது அவர் வெளிப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. எல்லாவற்றையும் அவர் வேதத்திலேயே அளித்துவிட்டார். எல்லாமே அறிவிக்கப்பட்டுவிட்டது. அவர் அங்கு அமர்ந்து கொண்டு, அவை நிறைவேறிக் கொண்டு வருவதைக் கவனித்து வருகிறார். சரீரமானது உருவாகி, மணவாட்டியின் உருவத்தை அடைவதை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். சரி. 78விசுவாசிகள் அதை விசுவாசிக்கின்றனர் - இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் பாவித்த ஆபிரகாமைப் போல். இந்த வார்த்தையும், இருதயத்தின் சிந்தனைகளை வகையறுக்கிறது (எபி. 4:12). வார்த்தையானது இருதயத்தின் சிந்தனைகளை வகையறுக்கிறது. எபி. 4:12. 79தீர்க்கதரிசிகள், தாங்கள் எழுதினவைகள் அல்லது பேசினவைகள் அனைத்தையுமே புரிந்து கொள்ளவில்லை. அதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்குமானால், அதை கூறியிருக்கவே மாட்டார்கள். பாருங்கள்? அவர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு (Moved அசைக்கப்பட்டு பேசினார்கள் என்று வேதம் உரைக்கின்றது (2பேது. 1:21). “ஏவப்பட்டனர். பரிசுத்த ஆவி உங்களை ஏவி அசைக்கும் போது, நீங்கள் அசைகின்றீர்கள்... பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலமாய்த் தேவன் திருவுளம் பற்றினார். அதனால்தான் ஒவ்வொரு காலத்திலுமிருந்த ஆவிக்குரியவர்கள், காலங்களைக் குறித்தும், இனி சம்பவிக்கப் போகிறவைகளைக் குறித்தும் தீர்க்கதரிசிகளிடம் ஆலோசனை கேட்டனர். தீர்க்கதரிசி - எழுத்தாளன் ஆக்கியோனாகிய தேவனிடம் எப்பொழுதுமே தொடர்பு கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? அந்த புஸ்தகத்தை எப்படி எழுத வேண்டுமென்பதை அறிந்து கொள்ள, அவன் ஆக்கியோனின் முன்னிலையில் நிரந்தரமாக தரித்திருத்தல் அவசியம். பாருங்கள். தீர்க்கதரிசி - எழுத்தாளன் எல்லா நேரத்திலும் தன் எழுதுகோலை ஆயத்தமாக வைத்துக் கொண்டு, ஆக்கியோனாகிய தேவன் எழுதக் கட்டளையிடுவதை உடனே எழுதுவதற்கென, அவருடன் நிரந்தரமாக ஐக்கியம் கொண்டிருந்தான். பாருங்கள்? அவன் எத்தகைய வாழ்க்கையை கடைபிடித்தான் என்பதை அது காட்டுகின்றது. அவனுடைய சகோதரர் அனைவரிலுமிருந்து பிரிந்திருந்த ஒரு வாழ்க்கை. 80அதனால் தான் தீர்க்கதரிசியின் சிந்தை தேவன் கூறுவதிலேயே லயித்திருந்தது - மனிதனுடைய கருத்து என்னவென்பதில் அல்ல; அல்லது காலத்தின் கருத்து, சபையின் கருத்து, இராஜ்யத்தின் கருத்து என்னவென்பதில் அல்ல - தேவனுடைய கருத்து என்னவென்பதில் மாத்திரமே. தேவனுடைய சிந்தையை அவன் வார்த்தையாக எடுத்துரைத்தான். சிந்தையை வெளிப்படையாகக் கூறும்போது, அது வார்த்தையாகிவிடுகின்றது. இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? வார்த்தை என்பது சிந்தை வெளிப்படுத்தலாகும். தேவன் தமது சிந்தையை அவனுக்கு வெளிப்படுத்தினபோது, அவன் ''கர்த்தர் உரைக்கிறதாவது“ என்று வார்த்தையாக அதை எடுத்துரைத்தான். ''தீர்க்கதரிசியாகிய நான் உரைக்கிறதாவது'' என்றல்ல அது, ”கர்த்தர் உரைக்கிறதாவது'', பாருங்கள்? அதனால்தான் தீர்க்கதரிசிகள் ராஜ்யங்களையும், அவர்கள் காலத்திலிருந்த சபைகளையும் எதிர்த்தனர். அவர்களுடைய காலத்தில் அத்தகைய செயல் மரண தண்டனையை விளைவிக்கும். அவர்கள் ராஜாவின் முன்னால் சென்று, “கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னின்னது சம்பவிக்கப் போகின்றது” என்று தைரியமாகக் கூறினர். அப்படி செய்தால் தலை வெட்டப்படும், சபையானது உங்களைக் கொன்றுபோடும். ஆனால் இந்த தீர்க்கதரிசிகள் தைரியசாலிகளாயிருந்தனர். ஏன்? அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டனர். அதனால்தான் அவர்கள் தைரியம் கொண்டனர். அவர்கள் என்றுமே தவறாத தேவனுடைய வார்த்தையை எழுதி வைத்தனர். 81தீர்க்கதரிசிகளை, ஆசாரியர்களை பாவனை செய்ய அனேகர் தோன்றினர். அவர்கள் என்ன செய்தனர்? எல்லாவற்றையும் குழப்பிவிட்டனர். அவ்வளவுதான். அவர்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அக்காலத்திற்கென தேவன் ஒரு பிரத்தியேக மனிதனையும், அவன் சுபாவத்தையும், அக்காலத்துக்குரிய செய்தியையும் தெரிந்து கொண்டு - அவன் என்ன பேச வேண்டுமென்றும் அதை எவ்விதம் பேச வேண்டுமென்றும் அந்த மனிதன் கொண்டிருந்த சுபாவத்தின் விளைவாக அவன் அனேகரை குருடாக்கினான். அந்த மனிதன் உரைத்த வார்த்தைகள், அவன் நடந்து கொண்டவிதம். ஒரு சிலரைக் குருடாக்கி, வேறு சிலரின் கண்களைத் திறந்தன. பாருங்கள்? அவனுக்கேற்ற உடைகளினாலே அவர் அவனை உடுத்தி, அவனுடைய சுபாவம், விருப்பம் அனைத்தையும் அவனுக்கு இருக்க வேண்டிய விதமாகவே அவனுக்கு அளித்து, அந்தக் காலத்தில் அவர் அழைக்க எண்ணியிருந்த ஜனங்களுக்கென, அவனை எவ்வித பிழையுமின்றி தெரிந்து கொண்டார். மற்றவர்களோ அவனைப் பார்த்து, “என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை'' என்றனர். பாருங்கள். அவர்கள் குருடாக்கப்பட்டனர். 82இயேசு கிறிஸ்துவும் அவ்விதமாகவே தோன்றினார் - மரணமில்லாத (immortal) தேவன், மாமிசத்தை உடுத்துக் கொண்டு தோன்றினார். அவர் தொழுவத்தில் - சாணம் நிறைந்த ஸ்தலத்தில் - பிறந்தார். அவருக்குத் தலைசாய்க்கவும் இடமில்லாதிருந்தது. முறை தவறிப் பிறந்தவர் என்னும் பெயரும் அவருடன் சம்பந்தப்பட்டிருந்தது. பாருங்கள்? அவர் ஆதியிலே என்னவாகவெல்லாம் இருந்தார். ஆனால் இப்பொழுது எப்படி வருகிறார்? அவர் தச்சனின் மகனாகத் தோன்றினார். அவர் பள்ளிக்கூடம் சென்று இவ்வுலக ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அதற்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவ்வுலக நாகரிகம், கல்வி போன்றவைகளுடன் அவர் எவ்வித தொடர்பும் கொள்ளாமலிருந்தார். ஏனெனில் அவர் தேவன். அது ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும், அவர் வேத தத்துவப் பள்ளிக்குச் சென்று இவ்வுலக சபைகள் போதிப்பதைப் படிக்க நேர்ந்திருந்தால், அவருடைய கருத்துக்கு அது ஒத்துப் போயிருக்காது, ஏனெனில் அவர் தேவனாயிருந்தார். எனவே கல்வி, பள்ளிக்கு செல்லுதல், வேதத்துவ பள்ளிகள் போன்றவை தேவனுடைய சித்தத்துக்கு முரணாக அமைந்துள்ளன. கல்வி முறைமை முழுவதுமே தேவனுக்கு முரணாக அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் தேவனை விட்டு அப்புறப்படுவதையே போதிக்கின்றது. ஒரு மனிதன் வேததத்துவத்தில் டாக்டர் (பி.எச்.டி., எல்.எல்.க்யூ / Dr., Ph. D., L.L.Q) பட்டம் பெற்றுவிட்டான் என்று நான் கேள்விப்படும் போது, என்னைப் பொறுத்தவரையில் அது அவனை அத்தனை தூரம் தேவனை விட்டு அப்புறப்படுத்தியுள்ளது. பாருங்கள்? அவன் எதை செய்ய வேண்டுமென்று அழைக்கப்பட்டானோ, அதனின்று அத்தனை தொலைவில் செல்வதற்கென அவன் பயின்றுள்ளான். அது சரி. அவர்கள் எவ்வளவாக பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டார்கள் என்பதைக் கவனியுங்கள். 83கல்வி பயின்றவர்கள் தேவனுக்குள் வருவதில்லை என்று அர்த்தமல்ல. பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அவனுடைய காலத்தில் அவனைக் காட்டிலும் நுண்ணறிவு படைத்தவர் யாருமே இல்லை எனலாம். அவன் 'தர்சு பட்டனத்தானாகிய சவுல்' என்று அழைக்கப்பட்டான். அவன் கமாலியேலிடம் கல்வி பயின்றான். கமாலியேல் அக்காலத்தில் தலை சிறந்த ஆசிரியராக விளங்கினார். அவர் மகத்தான, கண்டிப்பான எபிரேயன் ஸ்தாபனத்தில் பரிசேயர். பவுல் அவரிடம் கொண்டு செல்லப்பட்டான். யூத மார்க்கத்தைக் குறித்த அனைத்தையுமே பவுல் அறிந்திருந்தான். அப்படியிருந்தும் அவன் சபைக்கு வந்தபோது, ''நான் மனித ஞானம் போதிக்கிற கல்வியறிவு கொண்டவனாய் உங்களிடத்தில் வரவில்லை. அப்படி நான் வந்திருந்தால், உங்களுக்கு அதன்பேரில் தான் நம்பிக்கை இருக்கும். ஆனால் நானோ, உங்கள் விசுவாசம் தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, தேவனுடைய வல்லமையைக் கொண்டு, ஆவியின் வரங்களுடன் உங்களிடத்திற்கு வந்திருக்கிறேன்“ என்றான். பார்த்தீர்களா? அது உண்மை. 84அனேகர் இவர்களைப் பாவனை செய்ய முயன்றனர். ஆனால் இன்றுபோல் அன்றும் அவர்கள் எல்லாவற்றையும் குழப்பிவிட்டனர். இயேசுவின் காலத்திற்கு முன்பு ஒருவன் எழும்பி நானூறு பேரை வழி தவறச் செய்தான். காலம் வருவதற்கு முன்னமே அதை செய்ய முயல்வதைக் குறித்து வேதத்தில் அனேக இடங்களில் நாம் பார்க்கிறோம். ஒரு சிலர் அவரைப் பாவனை செய்ய முயன்றனர். கடைசி நாட்களிலும் கூட கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். இவையாவும் இப்பொழுது நம்மிடையே காணப்படுகின்றன. ஆனால் இவையனைத்தும் உண்மையான ஒன்றை போக்கிவிட முடியாது. சொல்லப்போனால் அது உண்மையான ஒன்றை இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கின்றது. ஏனெனில் நாம் உண்மையான கிறிஸ்துவைக் கொண்டிருக்கிறோம் - கள்ளக் கிறிஸ்துவை அல்ல. 85தேவன் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பினார் என்று நாம் பார்க்கிறோம். தீர்க்கதரிசிகளின் உதடுகளின் மூலமாக ஜனங்களுக்கு அவருடைய வார்த்தையைக் கொண்டு வருதல் என்பதே அவர் கடைபிடித்த முறையாயிருந்தது. கவனியுங்கள், மோசே இவ்விதம் கூறியுள்ளான். நீங்கள் அதை படிக்க விரும்பினால்... யாத்திராகமம் 4-ம் அதிகாரம்,10-ம், 12-ம் வசனங்கள். தேவன் அவனுடன் பேசினதாக மோசே கூறுகிறான். தேவன் மனிதனுடன் செவியில் உதடு வைத்துப் பேசினார். மோசே, ''நான் திக்கு வாயும் மந்த நாவும்உள்ளவன். இதற்கு நான் தகுதியுடையவன் அல்ல. என்னால் போக முடியாது'' என்றான். அப்பொழுது கர்த்தர், “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? அவனைப் பேச வைப்பது யார்? ஊமையனை உண்டாக்கினவர் யார்? மனுஷனைக் காணவும் கேட்கவும் செய்தது யார்? கர்த்தராகிய நான் அல்லவா? நான் உன் வாயோடே இருப்பேன்” என்றார். பாருங்கள்? எரேமியா இவ்விதம் கூறினான். நீங்கள் படிக்க விரும்பினால், எரேமியா 1:6 “கர்த்தர் தமது வார்த்தைகளை என் வாயில் வைத்தார்'' என்று எரேமியா கூறினான் (எரே. 1:9). ஒரு தீர்க்கதரிசியிடம், அவர் செவியில் வாய் வைத்துப் பேசுகிறார். வேறொரு தீர்க்கதரிசியின் மூலமாக அவரே பேசுகின்றார். அவனால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் உதடுகளின் மூலமாக அவர் பேசுகின்றார். 86அவருடைய வார்த்தையை வெளியே அனுப்புவதற்குள்ள வழிகள் அவரிடமுண்டு. உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஐயா! எனவே, வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்றும், அது மனிதனுடைய வார்த்தையல்ல என்றும் நீங்கள் அறிகிறீர்கள். மோசே, “தேவன் என்னிடம் ஒரு சத்தத்தின் மூலமாக பேசினார். அதை நான் கேட்டேன். அவர் கூறினதை நான் எழுதினேன்'' என்றான். எரேமியா, “பேசுவதை என்னால கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்னுடைய உதடுகள் பேசின. நான் எழுதிக் கொண்டேன்” என்றான். கர்த்தர் அவனுடைய உதடுகளின் மூலமாக பேசினார் அது நிறைவேறினது. தானியேல், ஏசாயா, இன்னும் மற்ற தீர்க்கதரிசிகளின் விஷயத்திலும் அதே போல்தான். 87உங்களுக்குத் தெரியுமா? பழைய ஏற்பாட்டில் மாத்திரம் அந்த தீர்க்கதரிசிகள் இரண்டாயிரம் முறை, ''கர்த்தர் உரைக்கிறதாவது“ என்று கூறியுள்ளனர். ஒரு தீர்க்கதரிசி, ”கர்த்தர் உரைக்கிறதாவது“ என்று கூறினால், அது அந்த மனிதன் பேசுவதல்ல. அது மனிதன் பேசுவதாயிருந்தால், அவன் தீர்க்கதரிசியாக இருக்க முடியாது. அவன் ஒரு மாய்மாலக்காரன் (பாருங்கள்?) ஏனெனில் அது நிறைவேறாது. ஒருக்கால் கோடிக்கணக்கான சமயங்களில் ஒருமுறை அவர்கள் சரியாக ஊகிக்கலாம். ஆனால் அது. ”கர்த்தர் உரைக்கிறதாவது'' என்றிருந்தால், அது தேவனாகிய கர்த்தர் உரைத்ததாகும். நான், ''ஆர்மன் நெவில் உரைக்கிறதாவது'' என்று கூறினால்... அல்லது என் சகோதரன் ''திரு. மான் உரைக்கிறதாவது“ அல்லது ''சகோதரன். வேயில் உரைக்கிறதாவது'' என்றோ, இங்குள்ள சகோதரர் யாராகிலும் உரைக்கிறதாவது என்று கூறினால், நீங்கள் கூறுகிறதை உண்மையாக அப்படியே எடுத்துரைக்கிறேன் என்று தான் அர்த்தம். எனவே அந்த தீர்க்கதரிசிகள், ”இது நான் கூறுவதல்ல, எனக்கு அதனோடு எந்தத் தொடர்பும் இல்லை“. இது ”கர்த்தர் உரைக்கிறதாவது'' என்றனர். எனவே வேதாகமம், தீர்க்கதரிசிகளின் மூலமாய் “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று சொல்லப்பட்டவைகளைக் கொண்டது. 88கவனியுங்கள், அவர்கள் கிறிஸ்துவின் ஆவியை தங்கள் மீது பெற்றவர்களாய், வரப்போகும் சம்பவங்களை முன்னறிவித்தனர். காலங்கள் தோறும் என்ன நிகழும் என்பதை அவர்கள் முன்னறிவித்து, அவர்கள் உட்காரும் போதும், நிற்கும் போதும், படுக்கும் போதும், நடக்கும் போதும் கிறிஸ்துவின் ஆவியைத் தங்கள் மேல் கொண்டவர்களாயிருந்த காரணத்தால், அவர்கள் கிறிஸ்துவைப் போலவே காணப்பட்டனர். அதை படித்தவர்கள், தீர்க்கதரிசிகள் தங்களைக் குறித்து பேசிக் கொண்டார்கள் என்று எண்ணினர். அந்த மந்திரி ஏசாயா 53:1-ஐப் படித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்''. மந்திரி பிலிப்புவை நோக்கி, ''தீர்க்கதரிசியாரைக் குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக் குறித்தோ, வேறொருவரைக் குறித்தோ“ என்று கேட்கிறான் (அப். 8:34). பாருங்கள்? அது அவனே என்பதைப் போல் தீர்க்கதரிசி பேசுகிறான். 89தாவீது ஆவியின் கதறுகிறதைப் பாருங்கள்: “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளை அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள் (தாவீது அப்படி கூறுகிறான்.) ஆனாலும் என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்'' தாவீது தன்னைப் பரிசுத்தவான் என்று கூறிக் கொள்வதைப் போல் காணப்படுகிறது. அது தாவீதின் குமாரனைக் குறிக்கிறது. ஜீவனுள்ள ஆவிக்குரிய அந்த வித்து அவன் வழியாக வருகிறது. தாவீது ஒரு முட்செடியாக இருந்தபோதிலும், அவனுக்குள் கோதுமை மணி இருந்தது. உங்களுக்குப் புரிகின்றதா? எனவே வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, அது மனிதனால் எழுதப்படவில்லை. மனிதனால் அதை வெளிப்படுத்த முடியாது. எனவே அது தேவனால் வெளிப்படுத்தப்பட்டு, தேவனே வியாக்கியானம் அளிக்கும் தேவனுடைய வார்த்தையாக அது அமைந்துள்ளது. கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் தம்மை வெளிப்படுத்துகின்றார். 90கிறிஸ்து தாவீதுக்குள் இருந்து கொண்டு கூறுவதைப் பாருங்கள். அப்பொழுது தாவீது தன் சொந்த சிந்தையை உபயோகிக்க முடியவில்லை. அவனுடைய சிந்தை அப்பொழுது அவனை விட்டு எடுபட்டது. அவர் சிலுவையில் தொங்கினபோது, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்று கதறினார். ”என் எலும்புகளையெல்லாம் அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் விலாவிலே அவர்கள் உருவக் குத்தினார்கள். நீர் ஏன் எனக்குத் தூரமாயிருக்கிறீர்? பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. என்னைப் பார்க்கிறவர்களெல்லாம் தலையைத் துலுக்கி; கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும் என்கிறார்கள்“ - இயேசு சிலுவையிலறையப்பட்டபோது, அதே வார்த்தைகளை அவர்கள் கூறினார்கள். எனவே பாருங்கள், தேவன் இவ்வுலகில் தோன்றின போது, தாவீது கூறின அதே சொற்களைக் கூறினார். உங்களுக்குப் புரிகின்றதா? எனவே, அது மனிதனுடைய வார்த்தையல்ல, தேவனுடைய வார்த்தை. அது தேவன் தாவீதுக்குள் இருத்தல். அவ்விதம் கூறினது தாவீதல்ல; அவன் என்ன கூறுகிறானென்று அவனுக்கே தெரியவில்லை. அவன் ஆவியில் நிறைந்திருந்தான். அது போன்றுதான் மோசேயும். அவன் அவ்வளவாக ஆவியில் நிறைந்து, அவன் வாழ்ந்த பரிமாணத்திலிருந்து கடந்து, எரிந்து கொண்டிருக்கும் புதரில் தேவனுக்கு முகமுகமாக நின்று, தேவனுடன் பேசினான். அவர், ''உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி'' என்றார். மோசே அங்கிருந்து திரும்பி வந்தபின்பு, “என்ன நேர்ந்தது? என்ன நிகழ்ந்தது? இதெல்லாம் என்ன?” என்று சிந்தனை செய்திருப்பான் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர், ''நீ எகிப்துக்குப் போ. நான் உன்னுடனே கூட இருப்பேன்'' என்றார். அவன், ''அது தத்ரூபமாக உள்ளது. நான் போகவேண்டும்'' என்று கூறி, அவன் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு, அவனுடைய கோலைக் கையில் பிடித்துக்கொண்டு, இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றான். பாருங்கள்? 91தேவன் தாமே தீர்க்கதரிசிகளின் மூலம் பேசுகின்றார். பாருங்கள், அது தீர்க்கதரிசிகளல்ல, அது தேவன். ஏனெனில் தீர்க்கதரிசிகள் தாமாகவே இவைகளைக் கூறியிருக்க முடியாது. ஏசாயா, “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தான் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங் கிளைகளைப் போல் அவனுக்கு முன்பாக எழும்புகிறார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்'' (ஏசாயா 53:5ல், ''அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்'' என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் சகோ. பிரான்ஹாம் இங்கு குறிப்பிடுவது 1பேதுரு: 2:24-ல் உரைக்கப்பட்டுள்ள ''அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்'' என்பதையே - தமிழக்கியோன்) கிறிஸ்துவுக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னமே, நாம் ஏசாயாவுக்குள் குணமானோம். பாருங்கள்? ''அவருடைய தழும்புகளால் நாம் ஏற்கெனவே குணமாகிவிட்டோம் (இறந்த காலம்). ஓ, என்னே தேவனுடைய வார்த்தை பிழையற்றது ஜனங்களே, அதில் நம்பிக்கை வையுங்கள். அது ஒன்று மாத்திரமே உங்களை இரட்சிக்க முடியும். 92மற்றெல்லா வார்த்தைகளும், அவை எவ்வளவு நன்றாகக் காணப்பட்டாலும், அவை எந்த ஸ்தாபனத்திலிருந்து வந்தாலும், சிறந்த ஞானவான் அதைக் கூறியிருந்தாலும், அவைகள் தள்ளப்பட வேண்டும் - தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ளவை. அந்த வேத வாக்கியத்தை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது கலாத்தியர்:1:8 பாருங்கள்? “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறோரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்” என்று பவுல் கூறினான் (கலா.1:8). வேறு விதமாகக் கூறினால், பிரகாசமுள்ள ஒரு தூதன் வானத்திலிருந்து வந்து உங்கள் எதிரில் நின்று (ஓ, இந்நாளில் அது ஒரு கண்ணியாக அமையும்) பிரகாசமுள்ள ஒரு தூதன் வந்து உங்கள் எதிரில் நின்று தேவனுடைய வார்த்தைக்கு முரணானவைகளைக் கூற நேரிட்டால், நீங்கள் அவனைப் பார்த்து, ''அப்பாலே போ, சாத்தானே“ என்று கூற வேண்டும். அதுசரி. அது பேராயரானாலும்... யாராயிருந்தாலும், வார்த்தைக்கு வார்த்தை வேதாகமத்துடன் இணங்கும் காரியங்களை அவர் பேசாவிட்டால், அவரை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம். அவரைக் குறித்து நீங்கள் கவனமுள்ளவர்களாய் இருத்தல் அவசியம். அவர் வேதத்திலிருந்து சில காரியங்களைக் கூறி உங்களைக் கவர்ந்து கொள்வார்; பின்பு உங்களை எங்காவது கொண்டு சென்று சிக்கலில் மாட்டி வைத்துவிடுவார். வேதம் ஒன்றைக் கூறி, அவர் அதை அசட்டை செய்ய முற்பட்டால், அப்படிப்பட்டவரைக் குறித்து உடனே கவனமாகிவிடுங்கள். பாருங்கள், அதைத்தான் சாத்தான் ஏவாளிடம் செய்தான். அவன் அவளையணுகி அவர் கூறின விதமாகவே அவனும் கூறினான். முதலாவதாக, 'தேவன் இதைக் கூறினார். அது உண்மைதான், ஏவாளே! ஆமென். நாமிருவரும் ஒருமித்து விசுவாசிக்கிறோம்'' என்றான். நல்லது “தேவன் இவ்விதம் கூறியிருக்கிறார்'', “ஆமென், நாம் ஒருமித்து விசுவாசிக்கிறோம்'', “தேவன் இதையும் கூறியுள்ளார்'', ''நிச்சயமாக நாம் அதையும் விசுவாசிக்கிறோம்''. ''நாங்கள் சாகவே சாவோம் என்று தேவன் கூறியுள்ளாரே!“ “அதுவா? அவர் நல்ல தேவன் என்பதை நீ அறிவாய்''. அவர் அவ்விதம் செய்யமாட்டார் என்று அவன் கூறவேயில்லை. ''நிச்சயமாக சாகவே சாவாய்'' என்று அவர் கூறியிருந்தார். அவனை கவனியுங்கள்!அக்காலத்தில் அவன் அத்தகைய வஞ்சகனாக இருந்ததால், கடைசி காலத்திலும் அவன் அவ்வாறே இருப்பான். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவன் கடைசி நாட்களில் வஞ்சிப்பான் என்று வேதம் உரைக்கின்றது. நண்பர்களே, நாம் இப்பொழுது எங்கே இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்! இந்த சிறு ஞாயிறு பள்ளி போதனைகளை நம்முடைய இருதயங்களின் அருகாமையில் நாம் கொண்டு செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம்... நாம் கூர்ந்து கவனித்து, அந்த காரியம் எவ்வளவு வஞ்சகமானது என்பதைக் கண்டு கொள்ளல் மிக அவசியம். 93கவனியுங்கள், நாம் வேறு மனிதரின் வார்த்தைக்கு செவி கொடுக்க முடியாது, செவி கொடுக்கவும் கூடாது. அவர்கள் எவ்வளவு நுண்ணறிவு படைத்தவர்களாகவும், கல்வியறிவு உள்ளவர்களாகவும் இருந்தாலும் நமக்கு கவலையில்லை சுயபுத்தியைக் கொண்டு ஆலோசித்தலை (Reasonings) நாம் அறவே அகற்ற வேண்டுமென்று நீதிமொழிகள் உரைக்கின்றது. பாருங்கள்? இந்த இரண்டாம் ஆதிக்கத்தில் (Realm)... முதலாம் ஆதிக்கம் உங்கள் புலன்களாகிய பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்குதல் ஆகும். அது வெளிப்புறமான சரீரத்தில் உள்ளவை. ஆனால் உங்கள் உள்ளான சரீரமாகிய ஆவியில், ஆலோசித்தல், சிந்தனை போன்றவையுள்ளன. அவைகளையெல்லாம் நாம் அகற்ற வேண்டும். நாம் சிந்தனை செய்து, ''சற்று பொறுங்கள், தேவன் நல்ல தேவனாயிருப்பாரானால்...'' என்று கூறுவது தவறாகும். அவர் நல்ல தேவன் என்பதைக் குறித்து இந்நாட்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. ''வேதம் சரியென்று என்னால் காண முடியவில்லையென்றாலும், அவர் நல்ல தேவனாயிருப்பதால், என் உத்தமத்தின் விளைவாக நான் இரட்சிக்கப்படுவேன்'' என்று நீங்கள் ஒருக்கால் கூறலாம். இல்லை, நீங்கள் அதை இழந்துவிடுவீர்கள். ''நான் ஆலயத்துக்குச் சென்று, நான் சரியென்று விசுவாசிக்கும் காரியங்களைச் செய்து வந்து அதில் நிலைத்திருப்பேனானால், இரட்சிக்கப்படுவேன்“ என்று நீங்கள் ஒருக்கால் கூறலாம். நீங்கள் அதை இழந்துவிடுவீர்கள். ''மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” (நீதி. 14:12; 16:25). பாருங்கள்? நீங்கள் ஒருக்காலும் இரட்சிக்கப்பட முடியாது; அதை நீங்கள் இழந்துவிடுவீர்கள். பாருங்கள், பாருங்கள்? உங்கள் உட்புறம் அதை ஆளுகை செய்யவேண்டும். 94''சகோ. பிரான்ஹாமே, நான் அன்னிய பாஷை பேசினேன். அன்னிய பாஷை பேசுவதில் உங்களுக்கு நம்பிக்கை கிடையாதா?'' எனக்கு நம்பிக்கை உண்டு. ''நான் கூச்சலிட்டேன். உங்களுக்கு அதில் நம்பிக்கை கிடையாதா?'' இருக்கிறது, ஐயா! ''நான் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை நடத்தி வருகிறேன். உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா?“ இருக்கிறது, ஐயா! ஆனாலும் இவை யாவும் நீங்கள் இரட்சிக்கப்பட்டதன் அறிகுறிகளல்ல. நீங்கள் நல்லவர்கள், நல்நடத்தையுள்ளவர்கள், பரிசுத்தமுள்ளவர்கள் தாம்; அக்காலத்து ஆசாரியர்களும் கூட அப்படித்தான் இருந்தனர். அவர்கள் மிகவும் மார்க்க பக்தி கொண்டவர்களாயிருந்து, தவறு புரிந்தவர் அனைவரையும் கல்லெறிந்து கொன்றனர். அக்காலத்தில் தேவனுடைய வார்த்தையுடன் விளையாடினவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 95இன்று நம் நாட்டில் காணப்படும் தவறு என்னவெனில், தண்டனைகள் மிகவும் கடுமையாக இல்லை. அதனால் தான் அனேக மோசமான செயல்கள் நம்மிடையே காணப்படுகின்றன. ஒருவன் வேறொருவன் மனைவியுடன் ஓடி விட்டு, அவர்கள் இருவரும் பிடிபட்டால், அவர்கள் பொது ஜனங்களின் முன்னால் நிறுத்தப்பட்டு, பகிரங்கமாகக் கடிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு மனிதன் வேகக்கட்டுப்பாட்டை மீறி தெருவில் காரோட்டி சென்றால், பத்து ஆண்டு கடுங்காவலுக்கு குறைவான தண்டனை அவனுக்கு விதிக்கப்படலாகாது - முன்கூட்டி ஆலோசித்து செய்யப்பட்ட கொலை (Premeditated murder). பாருங்கள்? அத்தகைய கடும் தண்டனை அவர்களை வேகம் குறைவாக காரோட்டச் செய்யும். ஆனால் நேர்மையற்ற அரசியல்வாதி யாராகிலும் அவன் சார்பில் பேசி, ''அவன் சிறிது போதையில் இருந்தான், வேண்டுமென்றே அவன் செய்யவில்லை...'' என்று கூறி. அவனுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடுகின்றனர். அந்த 'ரிக்கி', ஒரு மனிதன், அவன் மனைவி, அவனுடைய களங்கமற்ற குழந்தைகள் கொண்ட முழு குடும்பத்தை விபத்தில் கொன்ற பின்பும் தப்பித்துக் கொள்கிறான். அதுதான் அரசியல். அதுதான் உலகம்; அது பிசாசாகும். 96ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயுடன் விபச்சாரம் செய்து பிடிபட்டால், அவர்கள் இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று கர்த்தர் கூறினார். அதுதான் அதன் முடிவு. பாருங்கள்? ஓய்வு நாளில் ஒருவன் விறகு சுமந்தாலும், அவன் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். அவர்கள் அதைக் கைக் கொண்டனர். அத்தகைய சட்டங்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் கிறிஸ்தவனே, இன்று காலை நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் சபையே, தேவனுடைய பிரமாணம் உன் இருதயத்தில் இருக்கின்றது. பாருங்கள்? அத்தகைய செயல்களைப் புரிய உங்களுக்கு விருப்பமில்லை. அது உங்களுக்குள் இருக்கின்றது. குறைவற்ற தேவனுடைய பிரமாணத்தை நீங்கள் கைக்கொள்ள விரும்புகிறீர்கள். அது எதுவாயிருந்தாலும், அவருடைய சித்தத்தை செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். தேவனுக்கு ஒரு மிதியடி (Doormat) அவசியமாயிருந்து, நீங்கள் கதவண்டையில் மிதியடியாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினால், அவ்விதம் இருப்பதற்கு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அது எவ்வளவு கேவலமாக இருந்தபோதிலும், நீங்கள் மிதியடியாகவே இருக்க விரும்புவீர்கள். பாருங்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதையே நீங்களும் செய்ய விரும்புவீர்கள், ஏனெனில் அது தேவனாயிருக்கிறது. அங்குதான் நீங்கள் தேவன் பேரில் வைத்துள்ள உண்மையான, உத்தமமான அன்பைக் கண்டு கொள்ளலாம். 97வேதத்தில் கூறப்பட்டவைகளைத் தவிர வேறெதையாகிலும் வானத்திலிருந்து வந்த ஒரு தூதன் பிரசங்கித்தாலும் அவன் சபிக்கப்பட்டவன் என்று நாம் பார்க்கிறோம். யாரும் அவ்வாறு செய்யக்கூடாது. வேதத்தில் கூறப்பட்ட விதமாகவே அது இருப்பது அவசியம். மேலும், “இதனுடன் எவனாகிலும் ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது குறைத்தால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பெயர் எடுத்து போடப்படும்'' என்று நாம் வெளிப்படுத்தல் 22:18, 19ல் வாசிக்கின்றோம். அது உண்மை. அவர் போதகராயிருந்தாலும் வேறு யாராக இருந்தாலும், அவர் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால்-”அவர் ஒரு வார்த்தை கூட்டினாலும் அல்லது குறைத்தாலும், அவருடைய பெயரை ஜீவ புஸ்தகத்திலிருந்து நான் எடுத்துப் போடுவேன்'' என்று தேவன் கூறியுள்ளார். அவ்வளவு பிழையற்றதாக தேவன் தமது வார்த்தையை செய்துள்ளார். பாருங்கள்? நீங்கள் சபையில் ஒருவரைக் கூட்டலாம், அல்லது குறைக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தையுடன் கூட்டவோ குறைக்கவோ செய்யாதீர்கள். ஏனெனில் உடனே தேவன் உங்கள் பெயரை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவார். அதுதான் உங்கள் முடிவாகிவிடும். பாருங்கள்? அதனுடன் நீங்கள் ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது. எழுதப்பட்ட விதமாகவே அது இருக்கவேண்டும். 98அதற்கு வியாக்கியானி யாரும் தேவையில்லை. ஏனெனில் தேவனே வேதத்தை வியாக்கியானம் செய்கிறவரென்று வேதம் உரைக்கின்றது. “அதை தனிப்பட்ட விதத்தில் எவரும் வியாக்கியானம் செய்யக்கூடாது'' என்று பேதுரு கூறியிருக்கிறான் (2பேதுரு:1:20-ல், ஆங்கில வேதாகமத்தில், “No prophecy of the scripture is of any private interpretation” அதாவது “தனிப்பட்ட விதத்தில் வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் வியாக்கியானம் செய்யப்படலாகாது'' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தமிழில், ''வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராது'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டு, தேவ ஆவியால் கிரமமாக அமைக்கப்பட்டுள்ளது. அவையெல்லாமே இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்றதாயுள்ளது. அவருடைய வருகையைக் குறித்தும், அவர் இவ்வுலகில் தோன்றும் போது என்ன செய்வார் என்றும், வரப்போகும் காலங்களில் அவர் என்ன செய்யப் போகிறார் என்றும் புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது அவரை நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராகச் செய்கின்றது. பாருங்கள்? அவ்விதமாகத்தான் பவுல் எபிரேயர் நிரூபத்தில் எழுதியுள்ளான். அவர் பழைய ஏற்பாட்டில் நேற்றைய இயேசு கிறிஸ்து. அவர் மாமிசத்தில் தோன்றிய இன்றைய இயேசு கிறிஸ்து. அவர் இனி வரப்போகும், ஆவியில் என்றென்றுமுள்ள இயேசு கிறிஸ்து. (பாருங்கள். பாருங்கள்?) நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அந்தந்த காலத்தில் என்ன செய்யப்படுமென்று கூறப்பட்டுள்ளதோ, அந்த வார்த்தையை நிறைவேற்றுவதற்கென்றே அவர் என்றென்றும் ஜீவித்திருக்கிறார். அவர் இன்றும் ஜீவனுள்ளவராயிருக்கிறார். 99அவர் பழைய ஏற்பாட்டில் ஜீவித்தார், வெளிப்பட்டார். உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமானால், ஒரு சில காரியங்களைக் கூற விரும்புகிறேன். கவனியுங்கள். இயேசு பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்டபோது - அப்படித்தான் நாங்கள் விசுவாசிக்கிறோம்... போதகர்களே, அதைக் குறித்து நீங்கள் வாக்குவாதம் செய்யலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் எனது கருத்துக்களை எடுத்துரைக்கிறேன். இயேசு பழைய ஏற்பாட்டில் மெல்கிசேதேக்கு என்பவராக ஆவியின் சரீரத்தில் (Theophany) வெளிப்பட்டபோது - மெல்கிசேதேக்கு என்பது ஒரு ஆசாரியத்துவம் அல்ல. அது ஒரு ஆள். பாருங்கள், இவர் (இயேசு) அப்பொழுது பிறக்கவில்லை. அவர் ஆவியின் சரீரத்தில் இருந்தார். அவருக்கு தகப்பனும் தாயும் கிடையாது. எனவே அவர் தேவன். அவர் சாலேமின் ராஜா என்னும் மனித உருவில் வெளிப்பட்டார், ''சாலேமின் ராஜா என்பதற்கு 'சமாதானத்தின் ராஜா' என்றும், 'மெல்கிசேதேக்கு' என்பதற்கு 'நீதியின் ராஜா' என்றும் பொருள்''. பாருங்கள்? அவர்தான் மெல்கிசேதேக்கு... அவருக்கு நாட்களில் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லை. அது ஆவியின் சரீரத்தில் மனிதனாகத் தோன்றிய இயேசு. அதை உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறதா? சரி. 100பின்பு அவர் கன்னி மரியாளின் மூலம் பிறந்து, உண்மையான மாமிச சரீரத்தில் தோன்றி, இயேசு கிறிஸ்து என்னும் நபராக நமது மத்தியில் வாசம் பண்ணினார். அவர் மரிப்பதற்காகவே அந்த உருவம் எடுத்து, பின்பு பரலோகத்திற்குத் திரும்பச் சென்றார். இப்பொழுது, இந்தக் கடைசி நாட்களில் அவர், ஆவியின் பரிபூரணத்தில், தம்மை மாமிசத்தில் வெளிப்படுத்தப் போவதாக வாக்களித்துள்ளார். பாருங்கள்? சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும். சோதோமில் என்ன நிகழ்ந்ததென்று பாருங்கள். இன்று இயேசு கிறிஸ்து மனித உருவில் தமது சபையில் காணப்பட்டு (பாருங்கள்?), அதே காரியங்களை, அதே கிரியைகளை, அவர் எப்பொழுதும் செய்து கொண்டு வந்ததுபோல் இப்பொழுதும் செய்துவருகிறார். அந்த நித்தியமானவர் ஒருக்காலும் மாறுவதில்லை. இன்றைக்கு இந்த பூமியில், அவர் மனித சரீரங்களில் - அவர் அழைத்த நமது மனித சரீரங்களில் காணப்பட்டு, பூர்வகாலங்களில் அவர் இவ்வுலகில் மாமிசத்தில் தோன்றினபோது செய்த அதே காரியங்களை இப்பொழுதும் செய்து கொண்டு வருகிறார். இன்றைக்கும் அதே காரியங்களை அவர் செய்கிறார். ஏனெனில் பூர்வகாலங்களில் தீர்க்கதரிசிகளின் மூலமாய்த் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாளில் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் (பாருங்கள்?); கடைசி நாட்களில் குமாரன் வெளிப்பட்டு, தேவன் மாமிச சரீரத்தில் தோன்றி, சோதோமின் அழிவுக்கு சற்று முன்பு - புறஜாதி உலகின் முடிவுக்கு முன்பு - அமர்ந்து கொண்டிருக்கிறார். உங்களால் அதைக் காண முடிகின்றதா? மூன்று தோற்றங்கள் உள்ளன. 101அடுத்ததாக நிகழவிருப்பது; எல்லாமே அந்த இயேசு கிறிஸ்து என்ற ஒரு நபருக்குள் ஒன்று கூடுகின்றன. கர்த்தராகிய இயேசு சரீரத்தில் திரும்ப வரும் போது, மணவாட்டியாகிய சரீரம் அவரில் ஒன்று சேருகின்றது. அது அவருடைய வருகையை மூன்று முறைகளாகச் செய்கின்றது - இப்பூமியில்அவர் கொணரப்பட்டு, கொல்லப்பட்டு - அதாவது சிலுவையிலறைப்பட்டு, உயிரோடெழுப்பப்பட்டு, மீண்டும் தமது சரீரமாகிய மணவாட்டியில் - ஸ்திரீயில் - வெளிப்படுகின்றார். உங்களுக்குப் புரிகின்றதா? அவள் அவருடைய சரீத்தின் பாகமாக இருக்கிறாள். ஸ்திரீயும் மனிதனும் ஒருவருக்கொருவர் மிக அருகாமையில் வந்து, ஏறக்குறைய ஒருவராகவே ஆகிவிடுகின்றனர் - எப்படியாயினும், அவர்கள் அவ்வாறே ஆகவேண்டும். அவர்கள் அவ்வளவே இருக்கின்றனர். பாருங்கள்? அவர்கள் அப்படியே அதை வெளிப்படுத்துகின்றனர். அவள் அவருடைய பாகமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் அவரினின்று எடுக்கப்பட்டாள். இன்றுள்ள மணவாட்டி கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, இந்த நாளில் அவள் என்ன செய்வாளென்று அவர் கூறினாரோ, அதேவிதமாக அவள் கிரியை செய்து கொண்டு வருகிறாள் - மணவாட்டி, ராணி. ராஜாவும் ராணியும். அதுசரி. இப்பொழுது நமக்கு, தாமதமாகின்றது. நாம் துரிதமாக முடிக்கவேண்டும். 102சரி. வேதாகமம் முழுவதுமே இயேசு கிறிஸ்துவைப் பரிபூரணமாக வெளிப்படுத்துகின்றதாயிருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் அவர் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். லூத்தரின் நாட்களில் அவர் தம்மை சபையின் அஸ்திபாரமாக, பாதமாக, காலாக வெளிப்படுத்தினார். நெபுகாத்நெச்சார் ராஜாவின் காலத்தில் செய்தது போல, அவன் எவ்விதம் அந்த சொப்பனங்களை கண்டான் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்பொழுது தலையிலிருந்து கீழே இறங்கி வந்தது. பாருங்கள்? இப்பொழுது அவர் பாதங்களில் தொடங்கி மேலே வருகிறார். பாருங்கள்? பாபிலோன் சாம்ராஜ்யத்தில் அவர் பழைய ஏற்பாடுகளைக் காண்பித்து, தலையிலிருந்து கீழே வந்து, முடிவில் - ஏணியின் கால் பாகத்தில் - தேவனே மாமிசத்தில் தோன்றும் கட்டத்தை அடைகிறார். இப்பொழுது, இந்த புதிய ஏற்பாட்டில், அவர் மீண்டும் தலைபாகத்திற்கு பொன்னினாலான தலைபாகத்திற்கு தம்மைக் கொண்டு வருகிறார், முடிசூடப்பட வேண்டிய தலை, பாருங்கள்? உங்களுக்குப் புரிகின்றதா? தேவன் ஆதியிலே இருந்தார். அவர் தீர்க்கதரிசிகளின் மூலமாய் இறங்கி இறங்கி வந்து, ஏணியின் கால் பாகத்தில் அவர் மாமிசத்தில் தோன்றுகிறார். அவர் குழந்தையாக தொழுவத்தில் பிறந்து, பகைக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, மோசமான பெயரைப் பெற்றார். அவர் மறுபடியும் உயர எழும்பி (பாருங்கள்? பாதங்களிலிருந்து அவர் சபையை - மணவாட்டியை - கட்டத் தொடங்கி, அது மீண்டும் வந்து, இப்பொழுது தலைக் கல்லுக்குள் வந்து, அங்கு எல்லாம் ஒன்றாக இணைந்து இயேசு கிறிஸ்துவினுடைய மறுரூபப்பட்ட (Transfigured) சரீரம் முழுவதுமாக உருவாகின்றது. 103ஒவ்வொரு காலத்திலும் தேவன், அந்த காலத்திற்கென்று வார்த்தையின் மூலம் வெளிப்படுகின்றார். நாம் முடிக்கப்போகும் இத்தருணத்தில், இந்நாளுக்கென்று அவர் செய்துள்ள வாக்குத்தத்தங்களில் சிலவற்றை நாம் பார்ப்போம். இப்பொழுது தேவன் சாயங்கால வெளிச்ச நேரத்திலே தம்மை வெளிப்படுத்துகின்றார். இப்பொழுது நாம் பார்ப்போம் நாம் பார்க்கின்றோம்... இங்கு அனேக வேத வாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன். இந்தத் தாளில் எத்தனை வேதவாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன என்று நீங்கள் பார்க்கலாம். ஆனால் பன்னிரண்டு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் உள்ளது. எனவே நான் முடிக்க விரும்புகிறேன். இன்று காலையில் பிரசங்கம் செய்தபோதிலும், என் தொண்டை கரகரப்பாகவில்லை. சில சமயங்களில் இந்த குளுகுளு சாதனம் என் தொண்டையைக் கரகரப்பாகிவிடுகின்றது. எனவே சகோ. நெவிலுக்கு வேறொன்றுமில்லை என்றால்... இன்றிரவு உங்களுக்கு ஒன்றுமில்லை அல்லவா? (சகோ. பிரான்ஹாம் சகோ. நெவிலுடன் பேசுகின்றார் - ஆசி). சரி, நான்... உங்களுக்கு சம்மதமானால், இன்றிரவு உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் ஒன்றுண்டு. அன்றொரு நாள் ஒரு சிகரெட் பாக்கெட்டை நான் காட்டில் கண்டெடுத்தேன். கர்த்தருக்குச் சித்தமானால் அதிலிருந்து எனக்குக் கிடைத்த செய்தியை இன்றிரவு உங்களிடம் பிரசங்கிப்பேன். பாருங்கள்? இங்கு அத்தனை வேதவாக்கியங்கள் எழுதி வைக்கிறேன். என்றாலும் அதிக சமயம் எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் மீண்டும் இரவு கூட்டத்திற்கு வரவேண்டும். 104ஒரு சிகரெட் பாக்கெட் பேசுகின்றது சரி. நான் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிகரெட் பாக்கெட் தரையில் இருந்தது. நான் அதைக் கடந்து சென்றுவிட்டேன். அப்பொழுது யாரோ ஒருவர் எனக்கு முன்னால் சென்று கொண்டிருப்பது போன்ற உணர்ச்சி தோன்றினது. ஏதோ ஒன்று, ''நீ திரும்பி சென்று அதை எடு“ என்றது. ''சிகரெட் பாக்கெட்டை எடுப்பதா? என்னால் முடியாது“ என்று நினைத்தேன். மீண்டும் அது, ''நீ திரும்பிச் சென்று பாக்கெட்டை எடு'' என்றது. நான் திரும்பிச் சென்றேன். அது ஒரு காலியான சிகரெட் பாக்கெட். அதில் நான் ஒன்றைக் கண்டேன். கர்த்தருக்குச் சித்தமானால் அதைக் குறித்து இன்றிரவு உங்களிடம் பேசுவேன். சரி. 105இப்பொழுது சாயங்கால வெளிச்சத்தைக் குறித்து சில நிமிடங்கள் நாம் பேசலாம். காலம் முடிவு பெறவிருக்கும் தருணத்தில், ஒரு சமயம் தோன்றுமென்றும், அப்பொழுது சூரியன் வெளியே வந்து, சாயங்கால வெளிச்சம் உண்டாகுமென்றும் வேதம் முன்னறிவிக்கின்றது. நாமெல்லாரும் அதை அறிந்திருக்கிறோம் இல்லையா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்து கிடைக்கப் பெற்ற செய்தியை இன்று நன்கறிந்த நாமனைவரும், சாயங்கால வெளிச்சம் ஒன்றுண்டாகும் என்பதை விசுவாசிக்கிறோம். இந்த சாயங்கால வெளிச்சம்... இயேசு கிறிஸ்துவே இப்பூமியில், அல்லது வானத்தில் தோன்றி தமது மணவாட்டியை எடுத்துக் கொள்ளும் போது, மகத்தான வெளிச்சம் வேறு உண்டாகும். அப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும். 106ஆனால் இப்பொழுது மானிடவர்க்கம் அனுபவத்திராத அவ்வளவு பயங்கரமான சமயங்களை நாம் கடக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். நாமெல்லாரும் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு, எங்காவது ஓரிடத்திற்குச் சென்று சில நாட் கள் ஒன்றாக கழிக்கலாம். அந்த நேரத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது, கர்த்தர் என்னை அனுமதித்து அவ்விதம் செய்ய எனக்கு உற்சாகமூட்டினால், நாம் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஒருமித்து கழித்து, இப்பூமியில் விழவிருக்கும் வாதைகளைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் நான் பேச எத்தனித்துள்ளேன். அவைகள் எப்படி பூமியில் விழுமென்றும், அந்த இடிமுழக்கங்களைக் குறித்தும் நாம் பார்க்கலாம். அப்பொழுது ஜனங்கள் இவைகளைக் குறித்து எத்தகைய கருத்தை கொண்டிருந்தனர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அது நிச்சயமாக நிறைவேறும். பாருங்கள்? வானத்திலிருந்து தோன்றின அந்த மகத்தான இடி முழக்கங்கள் எதை வெளிப்படுத்தின என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியுமென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாருங்கள்?... அந்த தருணம் வரும் வரை நாம் காத்திருப்போம். (பாருங்கள்?) ஏனெனில் அது...?... இப்பொழுது... அது காலத்திற்கேற்றவாறு அமைந்திருக்கும். 107இப்பொழுது... இங்கு எழுதி வைத்துள்ள சில வேத வாக்கியங்களை நாம் படிக்கப் போகின்றோம். சாயங்கால வெளிச்சம் தோன்றும்போது... காலையில் தோன்றின அதே வெளிச்சம் தான் சாயங்கால நேரத்திலும் தோன்ற வேண்டும். ஏனெனில் காலையில் ஒரு சூரியன், மத்தியான நேரத்தில் வேறொரு சூரியன் என்பது கிடையாது. அது ஒரே சூரியன். மத்தியான நேரத்திலுள்ள சூரியன் தான் காலையிலும் இருக்கின்றது. அந்த நாள் மப்பு மந்தாரமுள்ள ஒரு நாளென்றும், அது பகலுமல்ல, இரவுமல்ல, அதற்கிடையில் என்று சொல்லப்பட்டுள்ளது. 108பாருங்கள், அதுதான் பாதங்களிலிருந்து மேலே எழும்பி வந்து, சரீரம் உருவாகுதலாகும். இயேசு பூமியிலிருந்த போது, அவர் குமாரனாயிருந்தார், சாயல் (likeness). பிறகு அவர் கொல்லப்பட்டார். இரத்த சாட்சிகளின் காலத்தில் சபையானது அவருடைய ஸ்தானத்தை வகித்து, இருளின் காலங்களின் வழியாகக் கடந்து சென்று, அஸ்திபாரத்தின் மேல் கட்டத் தொடங்கினது. பார்வைக்காக கண்கள் எங்குள்ளது? தலையில். நெபுகாத்நேச்சார் கண்ட தரிசனத்தை கவனியுங்கள். புறஜாதிகளின் காலம் தொடங்கி, அது தலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தது. அது, இரத்தம் சிந்தப்பட்டு பாவ நிவர்த்தி ஏற்படுவதற்கு முன்பிருந்த காலம். அவர்கள் அவருக்கு வேறு மதஸ்தினராக இருந்தனர். கவனியுங்கள், அது அடையாளமாக கீழே வந்து வந்து (பாருங்கள்?), பிறகு மேலே செல்லத் தொடங்கினது. இப்பொழுது தலையின் காலம். இப்பொழுது வெளிச்சத்தை கவனியுங்கள். 109உங்கள் கைகளினால் நீங்கள் பார்க்க முடியாது. ஆயினும் அது சரீரத்தின் ஒரு பாகமாக உள்ளது. உங்கள் மூக்கினால் நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் அது முகர்கின்றது உங்கள் உதடுகளினால் பார்க்கமுடியாது. அது பேசுகின்றது. பாருங்கள்? அது பெந்தேகோஸ்தேயினரின் காலம். இப்பொழுதோ கண்ணின் காலம், பார்த்தல். பாருங்கள்? கண்களுக்கு மேல் பாகத்தில், அசையும் எந்த அங்கமும் கிடையாது. அது சரியா? அடுத்ததாக ஞானம். அது கிறிஸ்துவே. அவர் முழு சரீரத்தையும் ஆளுகை செய்கிறார். கண்களுக்குப் பிறகு, அசையும் அங்கம் ஏதுவுமில்லை. பாருங்கள்? மற்ற அங்கங்கள் அனைத்தும் அசைகின்றன. பார்த்தீர்களா? உங்கள் பாதங்களை அசைக்கலாம், உங்கள் கால்களின் தசைகளை அசைக்கலாம், எல்லாவற்றையும் அசைக்கலாம், உங்கள் காதுகள், மூக்கு, உதடுகள் போன்றவை. ஆனால் கண்களுக்கு மேல் பாகத்தில் வேறொன்றும் அசைவ தில்லை. மனிதன் விரைவில் வழுக்கையாவதன் காரணம், தலைமயிர், மண்டைத் தோல் பாகங்களில் இருக்கும் தசைகளுக்கு அவனால் உடற்பயிற்சி கொடுக்க முடியாததால் தான் என்று அவர்கள் கூறுகின்றனர். அங்கு இரத்தம் செல்வதற்கு வேண்டிய ஏற்பாடு இல்லை. இரத்தம் மேலே சென்று. அதற்கு போதிய இரத்தத்தை அளிப்பதில்லை. தலைமயிர், இரத்தத்தைக் கொண்டே உயிர்வாழ வேண்டும். அந்த பாகத்தை, கண்களுக்கு மேலேயுள்ள பாகத்தை, அசைக்க முடியாது என்று நாம் பார்க்கிறோம். 110வெளிச்சம் மத்தியான நேரத்தில் உண்டாகும் என்ற கூறப்பட்டுள்ளது? இல்லை, சாயங்கால நேரத்தில் வெளிச்சம் எதற்காக அளிக்கப்படுகின்றது. நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்வதற்கும் அங்குமிங்கும் செல்வதற்கும். அது சரியா? இப்பொழுது எங்கிருக்கின்றீர்கள் என்று பார்த்தீர்களா? சாயங்கால நேரத்தில் வெளிச்சமுண்டாகும். இப்பொழுது நாம் அதை மல்கியா 4-உடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். சாயங்காலத்தில் மீண்டும் வெளிச்சம் தோன்றும் என்று அவர் வாக்களித்துள்ளார். பாருங்கள்? இதோ நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன் நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளை பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்'' அது சரியா? இப்பொழுது லூக்கா 17:30-ஐ எடுத்துக் கொண்டு, அங்கு இயேசு உரைத்த தீர்க்கதரிசனம் என்னவென்று பார்ப்போம். ''சோதோமின் நாட்களில் நடந்தது போல“ இப்பொழுதும் இருக்கும். கவனியுங்கள், மனுஷகுமாரன் வெளிப்படுதல். சோதோம் எரிவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு மனுஷகுமாரன் சற்றுநேரம் அங்கு மறைமுகமாக (potential) வெளிப்பட்டார். அந்த மனிதன் 'ஏலோகிம்'. அவர் தேவன். இயேசு தேவன். அந்த இடத்தில் அவர் சற்று நேரம் மறைமுகமாக வெளிப்பட்டு, விசாரணை நியாயத்தீர்ப்புக்காக ஆபிரகாமுடன் சற்று பேசினார். மனுஷ குமாரன் வெளிப்பட்டார், ஏலோகிம் மனுஷகுமாரன். சபையே, அதை நீங்கள் காண்கிறீர்களா? சபையோர் ”ஆமென்'' என்கின்றனர். மனுஷகுமாரன் - ஏலோகிம் - சில நிமிடங்கள் அங்கு வெளிப்பட்டார். அடுத்த நாள் சோதோம் எரிந்து போனது. எப்பொழுது? சூரியன் மீண்டும் உதயமாவதற்கு முன்பு. எனவே இனி எந்த ஸ்தாபனமும் விடப்படாது, இப்பொழுது நடந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் முன்னேற்றம் எதுவும் இருக்கமுடியாது. ஏனெனில் காலை உதயமாவதற்கு முன்பு அவள் எரிந்துவிடுவாள். நாடு பூராவும் எழுப்புதல் தோன்றி முடிந்துவிட்டது. இனி எழுப்புதல்கள் இராது. மகத்தான எழுப்புதல்களை இனி இந்நாடு பெறாது. அறிவாளிகளின் கூட்டம் ஒருக்கால் இருக்கலாம். ஆனால் நான் குறிப்பிடுவது ஆவிக்குரிய எழுப்புதல். அவைகளையெல்லாம் நாம் கண்டோம். நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு விதமாக அதைக் கூறுகிறேன், உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன். பாருங்கள்? அது முடிந்துவிட்டது. ஒரு அருமையான போதகர் சற்று முன்பு என்னிடம் “சகோ. பிரான்ஹாமே, கர்த்தருடைய மகிழ்ச்சி மாத்திரம் இருதயத்தில் குடி கொண்டிருந்தால்” என்று கூறினார். நான் அவரிடம், ''மகனே, எழுப்புதல் முடிவடைந்துவிட்டது'' என்றேன் பாருங்கள். 111கப்பலுக்கு நங்கூரம் போடப்பட்டுவிட்டது. பயங்கரமான பெரிய அலைகள் நமக்கு முன்னால் உள்ளன. ஆனால் அவைகளையெல்லாம் கடந்து கரையை அடைவோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நாம் கரையின் அருகாமையில் வந்திருக்கிறோம். நிலையாயிருங்கள். வார்த்தையில் நிலைத்திருங்கள் தேவனில் நிலைத்திருங்கள். உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்ச்சி தோன்றினாலும், வேறெதுவும் தோன்றினாலும், வார்த்தையில் நிலைத்திருங்கள். அது நிலைத்திருக்கட்டும். நம்மைச் சுற்றிலும் அந்த பயங்கரமான மேகங்கள் இருப்பதையும், புயல்கள் வருவதையும் நீங்கள் காணும் போது - அணுகுண்டு போன்றவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது நங்கூரமோ தேவனுடைய வார்த்தையில் உள்ளது. பயங்கரமான அலைகள் உண்டாகும் என்று தேவன் கூறியுள்ளார். ஆனால் அவை ஒவ்வொன்றின் உச்சியையும் நாம் கடந்து செல்வோம். ஆம், உண்மையாக. அவைகளால் நம்மை மூழ்கடிக்க முடியாது. நாம் கல்லறையில் வைக்கப்பட்டாலும், அங்கிருந்து நாம் மீண்டும் வெளிவருவோம். அவ்வளவுதான். அவைகளை அடக்குவதற்கு வழி கிடையாது. ஆனால் அவை ஒவ்வொன்றையும் நாம் கடந்து செல்வோம். ஏனெனில் நமது முக்கிய தலைவர் நம்மை மறுபக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் இயேசுவில் நங்கூரமிடப்பட்டுள்ளோம். வாழ்க்கையில் நேரிடும் புயல்களை நான் தைரியத்தோடு மேற்கொள்வேன். நான் இயேசுவில் நங்கூரமிடப்பட்டுள்ளேன் எந்த காற்றுக்கும் அலைக்கும் அஞ்சேன் 112எதுவாயிருந்தாலும், அதுவரட்டும். அதனால் பரவாயில்லை. ஏனெனில் நாம் இயேசுவில் நங்கூரமிடப்பட்டுள்ளோம். நான் வாழ்ந்தால், தேவனுடைய மகிமைக்கென்று வாழ்வேன். நான் மரித்தால், தேவனுடைய மகிமைக்கென்று மரிப்பேன். தேவனுடைய மகிமைக்காகவே நான் எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன். எல்லாம் முடிந்த பின்பு, அதிக காலம் இங்கிருக்க நான் விரும்பவில்லை. அவர் எனக்காக கிரயத்துக்குக் கொண்ட பரிசை நான் பெற்றுக் கொள்ள அந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன். நான் அந்த பரிசை சம்பாதிக்கவில்லை. அவர் அதை எனக்காக கிரயத்துக்குக் கொண்டார், அவருடைய கிருபையினாலேயே அவர் அதை எனக்களிக்கிறார். 113எனவே சாயங்கால வெளிச்சம் இங்கிருப்பதை நாம் பார்க்கிறோம். உங்களுக்குக் கண்கள் இல்லாமலிருந்தால், வெளிச்சத்தினால் என்ன பயன்? உங்களால் அந்த வெளிச்சத்தில் அங்குமிங்கும் செல்ல முடியாதே! சாயங்கால வெளிச்சம் என்பது என்ன? ஏதோ ஒன்றை வெளிப்படுத்த அந்த வெளிச்சம் தோன்றுகிறது. அதுசரியா? நீங்கள் இருட்டில் உள்ள பொருளைத் தொட்டுப் பார்க்கிறீர்கள். அது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது நீங்கள் விளக்கைப் போடுகின்றீர்கள். அந்த பொருள் என்னவென்று அந்த வெளிச்சம் வெளிப்படுத்துகின்றது. மல்கியா 4-ம் அதிகாரம் என்ன செய்கிறது? பாருங்கள்? அதே காரியத்தைத் தான் செய்கிறது. ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது. இதைச் சுற்றிலும் எல்லா ஸ்தாபனங்களும் தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது அதை வெளிப்படுத்துகிறது. உங்களுக்கு கண்கள் இல்லாமல் போனால், வெளிப்படுத்தலினால் என்ன பயன்? அதைக் காண்பதற்கு உங்களுக்கு முதலாவதாக கண்கள் இருக்க வேண்டும். சரியா? - மல்கியா 4 வெளிப்பட, லூக்கா 17:30 வெளிப்பட, யோவான் 14:12ம், 15:24; 16:13ம், மேலும் வெளி 10:1-7, ஏழு முத்திரைகளின் வெளிப்பாடு, ஏழாம் தூதனின் செய்தி சாயங்கால வெளிச்சத்தின் போது, அவைகளைத் திறந்து வெளிப்படுத்திக் கொடுக்கும். இப்பொழுது ஒரு மனிதன்... 114லவோதிக்கேயா சபையின் காலத்தில் ஜனங்கள் எந்நிலையில் இருப்பார்கள்? நிர்வாணமாக. அப்படியிருக்கிறார்களா?குருடராக. குருடன் ஒருவனுக்கு வெளிச்சம் எவ்விதம் உபயோகமாயிருக்க முடியும்?குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால், அவர்களிருவரும் குழியில் விழுவார்கள் அல்லவா? அவர்கள் நிர்வாணிகளாயும் குருடராயும் இருந்து அதை அறியாதிருக்கிறார்கள். அவர்களுடைய சிந்தனை சக்தி அவர்களை விட்டு போய்விட்டது... அவர்களுடைய மாம்சத்துக்குரிய ஆவிக்குரிய கிரகிக்கும் தன்மையும். பாருங்கள்? துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவப் பிரியராயிராமல், சுகபோகப் பிரியர், இணங்காதவர்கள், அவதூறு செய்கிறவர்கள், இச்சையடக்கமில்லாதவர்கள், நல்லோரைப் பகைக்கிறவர்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள், (வெளிப்படுத்தலின் வல்லமையில் அவர்களுக்கு நம்பிக்கையே கிடையாது. பாருங்கள்?)... தீர்க்கதரிசி போன்றவர்களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை... அதை அவர்கள் நம்புவது கிடையாது. மல்கியா 4, ஒரு குறிப்பிட்ட சபையையோ அல்லது ஸ்தாபனத்தையோ குறிப்பிடுகின்றது என்று அவர்கள் கருதுகின்றனர். எலியா முதன் முறையாக வந்தபோது, அவன் தனிப்பட்ட ஒரு மனிதனாக இருந்தான். இரட்டிப்பான ஆவியுடன் அவன் இரண்டாம் முறை தோன்றின போதும், அவன் தனிப்பட்ட ஒரு மனிதனாகவே இருந்தான். யோவான் ஸ்நானனாக அவன் வந்தபோதும், அவன் தனிப்பட்ட ஒரு மனிதனே. பாருங்கள்? இந்த கடைசி நாட்களில் சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கும் போது, உங்கள் கண்கள் திறக்கப்பட்டு, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். அப்பொழுது சரீரம் ஏற்கனவே முழுவதுமாக உருவாகி, அதன் கால்களில் அது நின்று கொண்டு, ஆயத்தமாக பரிசுத்த ஆவியின் அசைவினால் நடக்கும். என்ன? வேதத்தை எழுதின தீர்க்கதரிசிகளின் மீது அசைவாடின அதே பரிசுத்த ஆவியானவர், முழுவதுமாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சரீரத்துக்குள், பரிசுத்த ஆவியின் அசைவினால் எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும், ஜாதியாரிலிருந்தும், பாஷைக்காரரிலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டிருக்கிறது. 115இங்குள்ள ஒரு அம்மாள்; அவர்கள் இந்த சபையைச் சேர்ந்தவர்களல்ல. அவர்கள் வேறு எங்கிருந்தோ வந்திருக்கிறார்கள். காலையில் அவர்கள் வந்த போது, அவர்கள் கையில் ஒரு புகைப்படம் இருந்தது. அவர்கள் அதை என் மகனிடம் கொடுத்தார்கள். அவர்கள் மிகவும் வியந்தார்கள். இதைக் குறித்து அவர்கள் முன்னமே கேள்விப்பட்டிருக்கிறார்களோ என்னமோ எனக்குத் தெரியாது? ஏழு முத்திரைகள் திறக்கப்பட்ட போது தோன்றின கர்த்தருடைய தூதனின் படம் அவர்களிடமிருந்தது. ஏதோ என்று, ''அங்கு நோக்கிப் பார்'' என்று அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் சொப்பனத்தில் அந்த மேகம் வானத்திலிருப்பதைக் கண்டார்களாம். அவர்கள் நோக்கிப் பார்த்தபோது, யாரோ ஒருவர் வெண் வஸ்திரம் தரித்தவராய் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்தபோது “சகோ. பிரான்ஹாமே, அது நீங்கள்'' என்றார்கள் அந்த அம்மாள். ''நீங்கள் அவ்விதம் நடந்து கொண்டிருந்த போது, உங்களுக்குப் பின்னால் வெவ்வேறு நிறமுள்ள ஜனங்கள் - ஜார்ஜியா, அலபாமா போன்ற வெவ்வேறு இடங்களிலிருந்து - கொடி (Banner) பிடித்துக் கொண்டு, அணிவகுத்து, முன்னே சென்று அந்த தரிசனத்தில் காணப்பட்ட கிறிஸ்துவின் தலைக்குள் சென்றார்கள்'' என்று கூறினார்கள். ஓ, அல்லேலூயா! 116நாம் கடைசி நாட்களில் கடைசி மணி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருடைய வார்த்தையில் அவரை இப்பொழுது காண்கிறீர்களா? அவருடைய வார்த்தை அனைத்தும் நமக்கு முன்னால் சரியாக இங்கே வெளிப்படுகின்றது. ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, காலூன்றி நின்று, உனக்குள்ள எல்லாவற்றைக் கொண்டும் அவரை விசுவாசி. சக்கரத்தின் நடுவில் இருக்கும் அந்த சிறிய சக்கரத்தைப் பிடித்துக் கொள். உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் அது ஸ்திரப்படுத்தட்டும். நீ சிந்திக்கும் ஒவ்வொரு சிந்தனையையும் உனக்குள்ள அந்த வல்லமை கட்டுப்படுத்தட்டும். ஏனெனில் இந்த மணி நேரத்தில், சாயங்கால வெளிச்சத்தில், தேவன் தமது வார்த்தையில் அமர்ந்திருந்து, வெளிச்சத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். 117ஒரு வெளவாலுக்கு நேராக வெளிச்சத்தை நாம் காண்பித்தாலும், அது மிகவும் குருடாயிருப்பதால், அதனால் பறந்து செல்ல முடியாது. அவ்வாறே இரவில் நடமாடும் ஜீவ ராசிகளான ஆந்தை, கரப்பான் போன்றவைகளுக்கு பகலில் கண் தெரியாது. இவையெல்லாம் என்னவென்றே அவைகளுக்குத் தெரியாது. ஏனெனில் அவைகளால் காணமுடியாது. சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது. ஒவ்வொரு உவமையும், இயற்கையும், வேதாகமமும், தானியேலும் அந்த காலத்தில் இருந்த ராஜா கண்ட சிலையும், எல்லாக் காரியங்களும், எல்லோரும், எல்லா வகைகளும், எல்லா அசைவும், சரீரத்திலுள்ள ஒவ்வொரு அங்கமும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை சரிவர பொருத்தி நமக்கு எடுத்துக் காண்பிக்கின்றன. இதற்குமேல் வெறெந்த அசைவும் இருக்கமுடியாது. சரீரத்தின் கை அசைந்தது - அதுதான் வெஸ்லி, பரோபகாரம். அஸ்திபாரமும் நடந்தது - லூத்தர். ''வெஸ்லியின் அசைவைக் காட்டிலும் மேலான அசைவு இல்லையென்கின்றனர். அக்காலத்தில் மிஷனரிமார்கள் உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பப்பட்டனர். முன்னால் இருந்ததைக் காட்டிலும் இந்தக் காலத்தில் மகத்தான அசைவு இருந்தது. பின்பு பெந்தேகோஸ்தேயினர் காலம் தோன்றினது - விரல்கள், நாவு, மூக்கு போன்றவை. இப்பொழுது அது கண்களில் உள்ளது. காண்பதற்கு கண்கள் அங்கு இல்லையென்றால், வெளிச்சத்தினால் என்ன பயன்? காண்பதற்கு முதலில் கண்கள் இருக்க வேண்டும். அதன்பிறகு பார்வை வந்தபிறகு, அவர் ஏழு முத்திரைகளைத் திறந்து, சாயங்கால வெளிச்சத்தை வெளிப்படுத்தினார். சபையின் காலங்களில் மறை பொருளாயிருந்த இரகசியங்கள் அனைத்தையும், அவர் வெளி. 10:17-ல் வாக்களித்தவாறே வெளிப்படுத்தித் தந்தார். இயேசு கிறிஸ்துவினால் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் மத்தியில் நாம் இன்று அமர்ந்து கொண்டிருக்கிறோம். இது தேவனுடைய வார்த்தை! 118நாம் அவருடைய பிரஜைகளாயிருந்து அதைப் புரிந்து கொள்ள, அந்த வெளிப்பாட்டை பெற்றுக் கொள்ள அந்த ஆக்கியோனின் அருகாமையில் இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். “ஆண்டவரே, நான் என்னச் செய்யச் சித்தமாயிருக்கிறீர்? நான் வெளியே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமா, அல்லது வீட்டில் இருக்க வேண்டுமா? அது என்னவாயிருந்தாலும் சரி. நான் ஒரு நல்ல இல்லாளாக (housewife) இருக்க நீர் விரும்பினால்... நான் ஒரு நல்ல தாயாராக இருக்க நீர் விரும்பினால் நான் இதைச் செய்ய வேண்டும், அல்லது அதை செய்ய வேண்டுமென்று நீர் விரும்பினால், எதுவாயிருப்பினும்... நான் ஒரு நல்ல விவசாயியாக இருக்க நீர் விரும்பினால்... எதுவாயிருப்பினும் ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?'' அப்படித்தான் சவுலும் கதறினான் அல்லவா? “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?'' (அப். 9:6). சபையைச் சிறைப்படுத்த வேண்டுமெனும் நோக்கத்துடன் அவன் பயணம் செய்து கொண்டிருந்தான். அப்படிப்பட்டவன் பின்னர், ''ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?'' என்று கதறினான். அந்த அக்கினி ஸ்தம்பம் அவன் தலைக்கு மேல் தொங்கி, அந்த வெளிச்சம் அவன் மேல் பிரகாசித்தவுடன் அவன், ''ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?'' என்று கேட்டான். நாம் முடிப்பதற்கு அது மிகவும் நல்ல வாக்கியம் என்று நினைக்கிறேன். “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்? வேத வாக்கியங்கள் பிழையின்றி இப்பொழுது வெளிப்படுவதை நான் காணும் போது; ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?” இப்பொழுது நாம் தலைவணங்குவோம். 119இங்குள்ள ஒவ்வொருவரும் தங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்த்து, ''நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?'' என்னும் கேள்வியைக் கேட்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். ஜனங்களே, தொலைபேசியில் நீங்கள் இப்பொழுதும் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் தலைகளை வணங்கி, ''ஆண்டவரே, நாங்கள் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்? நாங்கள் கடைசி நாட்களில் கடைசி மணி நேரங்களில் வாழ்கிறோம் என்பதை உணருகிறோம். எல்லாமே பரிபூரணமாக எங்கள் முன்னிலையில் வெளிப்படையாகிவிட்டது. நாங்கள் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?'' என்று அவரைக் கேளுங்கள். 120அன்புள்ள தேவனே, அவர்கள் இந்தக் கேள்வியை உம்மிடம் கேட்கும் இந்நேரத்தில், நானும் உம்மிடம் இதைக் கேட்கிறேன்: “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்? ஒவ்வொரு நாளுக்காகவும் நான் கணக்கொப்புவிக்க வேண்டுமென்பதை உணருகிறேன். ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நான் உமது கனத்துக்கும் மகிமைக்கும் வாழ உதவி புரியும். நாடு முழுவதுமுள்ள ஒவ்வொருவரும், இந்த கூடாரத்தில் குழுமியுள்ளவர்களும், தங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்த்து, ''ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்? உமது ராஜ்யத்தின் முன்னேற்றத்துக்காகவும், உமது நோக்கத்திற்காகவும் குறிக்கோளுக்காகவும் நான் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்கும் இந்நேரத்தில், அவர்களுக்குத் துணைபுரிவீராக. ஆண்டவரே, அதை அருளும். எங்கள் இருதயங்களை ஆராய்ந்து பாரும்; எங்களை சோதித்துப் பாரும். ஆண்டவரே, எங்களில் மீறுதல்கள், சுயநலம், மோசமான குறிக்கோள்கள் காணப்பட்டால், ஓ, தேவனே, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எங்களைக் கழுவியருளும்... எங்களுடைய பாவத்துக்குப் பரிகாரமாயுள்ள அவருடைய மரணத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் நாங்கள் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். அவர் எங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசிப்பதன் மூலம் நாங்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். எங்களுக்கு நீர் அளித்துள்ள இரட்சிப்பின் திட்டத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். பிதாவே, இந்த நாளுக்குரிய செய்திக்காக - நாங்கள் விசுவாசித்து அதில் நிலைகொண்டிருக்கும் இச்செய்திக்காக - உமக்கு நன்றி செலுத்துகிறோம். அது உம்முடைய வார்த்தையென்றும், உம்முடைய செய்தியென்றும் நாங்கள் அறிந்து, விசுவாசிக்கிறோம். மற்றவர்களைக் காட்டிலும் நாங்கள் வித்தியாசமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் எங்களுக்கு திருஷ்டாந்தமாயுள்ள இயேசு கிறிஸ்துவைப் போல இன்னும் கூடுதலாக இருக்க நாங்கள் முயல்கிறோம். 121அன்புள்ள தேவனே, இங்கு உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. வியாதியஸ்தர்கள் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர். நானும் கூட, ஆண்டவரே, இக்காலையில் களைப்புற்றிருக்கிறேன். எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். உம்முடைய பெலனையே நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம். நீரே எங்கள் பெலன். அன்புள்ள தேவனே, அநேகருக்கு நீர் உதவி செய்திருக்கிறீர். அன்றொரு நாள் காட்டில் சகோ. பாங்க்ஸ் உட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, மருத்துவர்கள். அவருடைய இருதயம் மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால், அவரால் நடக்க முடியவில்லை. அந்த தரிசனத்தை நான் கண்ட பின்பு, ''எப்படியாயினும் அந்த சிங்கத்தை நான் கொல்ல வேண்டும்'' என்று நினைத்தவாறு நான் மலையில் நடந்து சென்று கொண்டிருந்த காரணத்தால், அவருக்கு என்ன நேரிடுகிறது என்று நான் அறியவேயில்லை. பின்பு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து டூசானிலுள்ள ஃபர் உணவு விடுதியில் நாங்கள் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய ஆடைகள் தொங்கி, அவருடைய கண்கள் சொருகிப் போயிருந்ததைக் கண்டேன். அப்பொழுது நான், ''தேவனே, சிங்கம் இருக்குமிடத்தை நீர் தரிசனத்தில் எனக்கு காண்பிக்கக் கூடுமானால், சகோ. உட்டைப் பற்றியும் எனக்கு காண்பிக்க முடியும்'' என்று ஜெபித்தேன். அப்பொழுது, ''உன் கைகளை அவர் மேல் வை'' என்னும் கட்டளை எழுந்தது. இதோ சகோ. பாங்க்ஸ் இன்று மீண்டும் திடகாத்திர முள்ளவராய், மலைகளின் மேலும் கீழும் ஓடிக் கொண்டிருக்கிறார். அன்புள்ள தேவனே, அதற்காக நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம்! சகோ. உட்டுக்கு நீர் இருந்தது போல, எல்லோருக்கும் அதே தேவனாயிருக்கிறீர். நீர் அவரை நேசிக்கிறீர் என்பதை நானறிவேன். ஏனெனில் அவர் நேர்மையும், உத்தமமுள்ள உமது ஊழியக்காரன். 122அன்புள்ள தேவனே, எங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டு, எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் சரீரங்களிலுள்ள வியாதிகளை சுகப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். ஆண்டவரே, நாளுக்கு நாள் நாங்கள் கூடுதலாக உம்மைப்போல் ஆகி, முடிவில் இயேசு கிறிஸ்துவின் பரிபூரண வளர்ச்சியை அடைய கிருபையருளும். ஆண்டவரே. இப்பொழுது நீர் ஒவ்வொரு இருதயத்தையும் ஆராய்ந்துவிட்டீர் என நம்புகிறோம். அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியும். எங்களை இப்பொழுது ஆசீர்வதிக்கும்படியாக உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம், இயேசுவின் நாமத்தில். 123இப்பொழுது உங்கள் தலைகள் குனிந்திருக்க, இங்குள்ளவர் யாராகிலும், அல்லது தொலைபேசியின் மூலமாக நாடெங்கும் இணைக்கப்பட்டுள்ளவர்களில் எவராகிலும், நீங்கள் தலைகுனிந்து ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, உங்கள் கரத்தை தேவனிடம் உயர்த்த விரும்புகிறீர்களா? அதை மாத்திரமே இப்பொழுது நீங்கள் செய்யமுடியும். ஏனெனில் இன்று காலை இங்கு ஜனக்கூட்டம் அதிகமாயுள்ளது. உங்கள் கரத்தை தேவனிடம் உயர்த்தி, “தேவனே, என்னைக் கூடுதலாக இயேசுவைப் போலாக்கும். நான் இன்னும் அதிகமாக இயேசுவைப் போல் இருக்க விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! நாடெங்கும் உள்ளவர்களையும் கூட. எங்கு பார்த்தாலும் கரங்கள் - திரளானவை. என் கரமும் உயர்த்தப்பட்டுள்ளது. ''நான் அதிகமாக அவரைப் போல் இருக்க விரும்புகிறேன். ஆண்டவரே, என்னை ஆராய்ந்து பாரும். என்னிடம் பொல்லாங்கு ஏதாகிலும் காணப்பட்டால், அதை என்னை விட்டு விலக்கும். இவ்வளவு நேரமாக நாம் இங்கிருந்தோம். நாம் இவ்விடம் விட்டுச் செல்லப் போகின்றோம் - நீங்கள் யாராயிருந்தாலும், எவ்வளவு பணக்காரராயிருந்தாலும் ஏழைகளாயிருந்தாலும் சரி, எவ்வளவு வாலிபமாக, வயோதிபராக இருந்தாலும் சரி. 124நேற்று அந்த மலையின் மேல் ஒரு சிறு கூட்டம் ஏழைகளைக் கண்டேன். அந்த ஓடையின் அருகில் ஒரு சிறு குடும்பம் உள்ளது. அந்த மனிதனிடம் அனேக நாட்களாக நான் தேவனைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தேன். அவருக்கு மனைவியும், ஏழு அல்லது எட்டு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர் மிகவும் மெலிந்தவர். அவர் அங்கு உழைத்து, நாளொன்றுக்கு இரண்டு டாலர் கூலி பெறுகிறார். ஒருவர், அவருடைய சிறு குடிலில் இவர்கள் தங்க, அனுமதியளித்துள்ளார். அவருடைய மனைவிக்கு இன்னுமொரு பிரசவ காலம் அருகாமையிலிருந்தது. அவள் ஒரு பெரிய கோடாரியால் மரத்தை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தாள். அவளுடைய இடுப்பில் குழந்தையை வைத்து பிடித்துக் கொண்டே, மறு கையில் மரத்தை வெட்டி, அதன்மூலம் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு ப்ளாக்பெர்ரி (Blackberry) பழங்களை டப்பாவில் அடைத்து, குளிர்காலத்தில் பசியைப் போக்கி வந்தனர். அவர்களுக்காக நாங்கள் அதிகம் வருத்தமுற்றோம். நானும் சகோதரன் உட்டும் மோட்டார் வாகனத்தில் ஏறி அங்கு சென்று, அவளுக்காக மரத்தை வெட்டி, அவளிடம் கொண்டுவந்து சேர்த்தோம். அந்த நன்றியுள்ள ஸ்திரீ அங்கு நின்று கொண்டிருந்தாள். அவளுக்காக நான் மிகவும் வருத்தமுற்றேன். அவர்களுக்காக நாங்கள் ஜெபித்துக் கொண்டே வந்தோம். 125அவளுடைய சிறு குழந்தைக்கு காக்காய் வலி கண்டது. நாங்கள் அங்கு சென்று அந்த குழந்தைக்காக ஜெபம் செய்தபோது, தேவன் அதற்கு சுகத்தையருளினார். அன்றொரு நாள் அவளுடைய கணவனுக்கு 'குடல் பிதுக்கம்' (Hernia) பிடித்தது. நான் அவரிடம் பேசிக் கொண்டே வந்தேன். அவர்கள் இருவரும் புகை பிடிப்பவர்கள். அவர்கள் புகையிலையையும் உபயோகித்து வந்தனர் - மலைவாசிகளின் பிரத்தியேக பழக்கம். நேற்று காலை வெளிச்சம் வந்தவுடனே, நான் அங்கு சென்றேன். அந்த மனிதன் தன் கரங்களை ஒன்றாக சேர்த்துப் பிடித்துக் கொண்டு, என்னை நோக்கி நடந்து வந்தார். அவர், “சகோ. பில்லி நான் முற்றிலும் மாறின ஒரு மனிதனாகிவிட்டேன். என் கடைசி சிகரெட்டைப் பிடித்து தீர்த்துவிட்டேன். இப்பொழுது நான் ஆண்டவரின் பக்கத்தில் சேர்ந்துவிட்டேன்'' என்றார். அவருடைய மனைவியும், நானும் என் கடைசி சிகரெட்டைப் பிடித்து தீர்த்துவிட்டேன்'' என்றாள். ஓ, நாம் விதையை விதைத்தால், “ஆண்டவராகிய நானே அதற்கு தண்ணீர் பாய்ச்சினேன். இரவும் பகலும் அதற்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன். அதை யாரும் என் கரங்களிலிருந்து பறித்துக் கொள்வதில்லை''. 126ஓ, தேவனே, எங்கள் மீது கிருபையாயிருக்க வேண்டிக் கொள்கிறேன். உம்மை சேவிக்க எங்கள் இருதயத்தில் வாஞ்சிக்கிறோம். எங்கள் இருதயத்தின் வாஞ்சையை அருளுவீராக. இப்பொழுதும் பிதாவே, எல்லாவிடங்களிலுமுள்ள அவர்கள் உமது கரங்களில் இருக்கின்றனர். அவர்கள் உமது பிள்ளைகள். உமது இரக்கத்தின்படி அவர்களை நடத்தும், ஆண்டவரே, நியாயத்தீர்ப்புக்குள் அல்ல, உமது இரக்கத்திற்குள். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 127நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) உங்கள் முழு இருதயத்தோடும். இங்கு உறுமால்கள் வைத்திருப்பவர்கள் அவைகளை எடுத்துக் கொள்ளலாம். நமது மாலை ஆராதனை சற்று நேரத்தோடு 7 மணிக்கு தொடங்கும் என்று நினைக்கிறேன். சகோ. நெவில் அதைப் பற்றி இன்னும் சில நிமிடங்களில் அறிவிப்பார். இன்று காலை ஞானஸ்நான ஆராதனை இருக்கின்றதா? (சகோ. நெவில் ''தண்ணீர் தயாராக இருக்கிறது“ என்று கூறுகிறார்) இங்குள்ள யாராகிலும், ஏற்கனவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், அவர்களுக்காக தண்ணீர் ஆயத்தமாயுள்ளது. 128இங்குள்ள எல்லா போதகர் சகோதரர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சகோதரனை... காண்கிறேன். உங்கள் கூட்டம் எப்படியிருந்தது? நன்றாக நடந்ததா? சகோ. பார்னல், சகோ. மார்டின் , ஓ, அநேகர் இங்குள்ளனர். சகோ. லீ வேயில்..., ஓ, இங்கு எல்லாவிடங்களிலும் போதகர்கள் இருக்கின்றனர். இங்கு வந்து எங்களுடன் வார்த்தையின் அடிப்படையில் ஐக்கியங் கொண்டதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். 129நான் கூறுவதை ஒருக்கால் நீங்கள் ஆமோதிக்காமலிருக்கலாம். நீங்கள் ஆமோதிக்க வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் ஒரு காரியம், அதை சற்று ஆலோசனை செய்து பாருங்கள். நீங்கள் என்னிடம் ஏதாவது கூற விரும்பினால், நானும் அதை ஆலோசனை செய்து பார்க்கிறேன். இந்த ஒலி நாடாவைக் கேட்டு, போதகர்கள், “என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்பார்களானால், பரவாயில்லை, என் சகோதரனே! நீ சில ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறாய் - உனக்கு விருப்பமானவைகளைக் கொண்டு அவைகளைப் போஷிப்பாயாக! தேவன் எனது கரங்களில் அருளின இவர்களின் நிமித்தம், என்னால் இயன்றவரை நான் வார்த்தையில் நிலைத்திருக்க விரும்புகிறேன். ஏனெனில் ஆடுகளுக்கு ஆடுகளின் உணவுதான் அவசியம். ''என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கின்றன'' தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நாங்கள் பிழைக்கிறோம் - எப்பொழுதாவது ஒரு வார்த்தை என்ற விதமாயல்ல - தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும். அந்த ஒவ்வொரு வார்த்தையைக் கொண்டு தான் பரிசுத்தவான்கள் வாழ வேண்டியவர்களாயிருக்கின்றனர். நமது தலைகளை தாழ்த்தியிருக்கையில், நாம் யாவரும் எழுந்து நிற்போம். சகோ. நெவில் நீங்கள் ஏதாவது கூறவேண்டும் . (சகோதரன் நெவில் இல்லை என்கிறார்.) சகோ. மான்... சரி. நல்லுணர்வு உள்ளவர் அனைவரும் 'ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர் 'ஆமென்' என்கின்றனர்... ஆசி). இப்பொழுது நாம் தலை வணங்குவோம். இப்பொழுது சகோ. வேயில் இங்கு வரும்படியாக கேட்டுக் கொள்ளப் போகிறேன். உங்களால் இங்கு வர முடியாவிட்டால், சகோ. வேயில், உங்களால் முடியுமானால்... சகோ. வேயில் நம்முடைய சகோதரன். அவர் புஸ்தக எழுத்தாளர். 'ஏழு சபை காலங்கள்' புஸ்தகத்தை அவர் ஆயத்தம் செய்து கொண்டு வருகிறார். 'ஏழு முத்திரைகள்' புஸ்தகத்தையும் அவர் எழுதிக் கொண்டு வருகிறார். அவை விரைவில் வெளிவரும் என்று நம்புகிறோம். சரி, சகோ. வேயில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.